Sunday, August 03, 2008

ரஜினியின் மன்னிப்பு - என் பார்வையில்.

"நான் தவறு செய்துவிட்டேன்.. கர்நாடக மக்கள் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டனர். இனி இது போன்ற தவறை என் வாழ்நாளில் செய்யமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். குசெலன் வெளிவர ஒத்துழைப்பு தாருங்கள்" - குசேலன் படத்தை நண்பர்களுடன் பார்க்க ஆரவாரமாக ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த கசப்பான செய்தியை கேட்டேன்..

புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட நம்பமுடியவில்லை..ஆனால் உண்மை என ஒரு நண்பர் உறுதிப்படுத்தினார். ரஜினி ரசிகனானாலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பிடிக்காத ரசிகன் நான். அதற்கு காரணம் அவரால் ஒன்றும் செய்துவிட முடியாது + அரசியல் அவருக்கு ஒத்துவராது என நினைத்ததே.. ஆனால் நல்லது செய்ய முயற்சிப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது கிடையாது.. இந்த செய்தியை கேட்கும் வரை.

எனக்கு பயங்கர கோபமும் எரிச்சலும் வந்தது. அவர் ஒகனேக்கல் விவகாரத்தில் பேசியது, பிறகு மன்னிப்பு கேட்க முடியாது என சொன்னது, KFCCக்கு கடிதம் எழுதியது வரை அனைத்தும் சரியே.. அவர் திறமை மேல் உள்ள மதிப்பு அதிகமானது. அவரை இன்னும் பிடித்தது..
ஆனால் இந்த மன்னிப்பு???? சீ என சொல்ல வைத்துவிட்டது.

அவசியமா?
அந்த மன்னிப்பின் அவசியம் எனக்கு இன்னும் புரியவில்லை. குசெலன் இங்கு வெளியிடப்படுவதில் எந்த பெரிய சிக்கலும் இருக்கவில்லை. திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. மேலும் ரஜினி மன்னிப்பு கேட்டு அப்படி படம் பார்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே கர்நாடகாவில் உள்ள எந்த ரஜினி ரசிகனிடம் கேட்டிருந்தாலும் வரும் பதிலாக இருந்திருக்கும். ஒருவேளை குசெலன் வெளியிடப்படாமல் இருந்திருந்தால் அது கன்னடர் மத்தியிலும் வட்டாளுக்கு கெட்ட பேரையே வாங்கி தந்து இருக்கும். இதனால் சிறு நட்டம் ஏற்பட்டாலும் வேறு விதத்தில் அதனை சரிப்படுத்த முயன்றிருக்கலாம்.

சரியா?
தனிப்பட்ட முறையில் தனது வீரம் இவ்வளவுதான் என்பதை புரிய வைத்து விட்டார். தன்னை/தான் பேசுவதை நம்புபவன் முட்டாள் என சொல்லாமல் சொல்லிவிட்டார். இந்த மன்னிப்பு மூலம் தமிழக உரிமை தவறோ என்ற ஐயப்பாட்டை பல கன்னடர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்.இதன் மூலம் ஒன்றுமில்லாத (டெபாசிட் இழந்த)வட்டாளை பெரிய ஆள் என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்திவிட்டார்.. அந்தாள் மேலும் ஒவ்வொரு முறையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்..தன்னை மீறி ஒன்றும் செய்ய இயலாது என செயல்பட வாய்ப்புகள் அதிகம். இது ஒகனேக்கல் மற்றும் எந்த தமிழக நலன் சார்ந்த திட்டமாக இருந்தாலும் தமிழர் நலனுக்கு எதிராக இது இருக்கும் என சொல்லவேண்டியதில்லை. ஆகவே இந்த மன்னிப்பு நிச்சயம் மிகப்பெரிய தவறுதான்.

மேலும் ரஜினி ரசிகர் ஒவ்வொருவருக்கும் இது கசப்பையே கொடுத்திருக்கும் என்பது என் எண்ணம்.. ரஜினியை மதிக்கும் போற்றும் ரசிகர்களிம் தன்மானத்தை நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது ரஜினியின் கடமை. அதனை அவர் செய்ய தவறும்போது அவரின் மானத்தையும் மதிப்பையும் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எந்த ரசிகனுக்கும் கண்டிப்பாக தேவையில்லை.

ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன்
அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Wednesday, June 18, 2008

பாமாக- திமுக-ஆதிமுக-காங்கிரஸ்

ராமதாஸ் : பார்த்தீங்களா..பார்த்தீங்களா.
ஜெயா : கேட்டீங்களா..கேட்டீங்களா
மு.க : (2-3 மாதம் கழித்து) : வாங்கிட்டீங்களா..வாங்கிட்டீங்களா
_____________________________

திமுக - பாமாக முறிவு நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததுதான். வெளியேறுவார்களா/வெளியேற்றப்படுவார்களா என்பதற்கு மட்டும் முடிவு தெரிந்துவிட்டது.

பாமாகவுக்கு ஆதிமுக(கூடவே பாஜாக)வுடன் கூட்டு சேர ஆசைப்பட்ட எதிர்பார்த்த சந்தர்ப்பம். மத்தியில் பாஜாக தான் அடுத்து வரும் போல் தெரிகிறது.பாமாக ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஆசசப்படும் என்பது தெரிந்ததுதான்.

இது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (கனிமொழி/ஸ்டாலின் - அழகிரி /அழகிரி மகள்/ராயல் கேபிள் விஷன்) - குடும்ப அரசியல் விவாதம் மறுபடியும் ஆரம்பிக்கும். இதற்கு திமுகாவிடம் சரியான பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.

இப்போது காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகம். அது அவர்களின் பல கோஷ்டிகளை எப்படி யோசிக்கவைக்கும்/பேசவைக்கும் என்பது கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். மொத்தத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

ஆதிமுக, அதாவது ஜெயலலிதா அமைதியாக ஆணவம் இல்லாமல் இருந்தாலே அடுத்த ஆட்சியை பிடித்து விடலாம். இருப்பாரா?

மதிமுக : ?

Tuesday, June 17, 2008

தசாவதாரம் - பத்தே பத்து வரி.

தமிழ்மண விமர்சனங்களுக்கு நன்றி - இடைவேளையில் திருப்தியாகவே உணர்ந்தேன் :-)

முதல் பத்து நிமிடங்கள் அருமை.(கொடுத்த காசு அதற்கே சரியென்றாலும் தொடர்ந்து பார்த்தது ஆட்டோவின் அநியாய மீட்டருக்கு சரியானது. )அமெரிக்காவில் நடக்கும் காட்சிகளும் நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாதியில் லாஜிக் ரோம்பவே இடிக்கிறது. விறுவிறுப்பும் குறைவு. அசின் - கடுப்பேற்றுகிறார். என்னடா லாஜிக் இது என்ற யோசனைக்கு வித்திடுகிறார். அது படம் முடியும்வரை தொட்ர்கிறது.

அனாவசிய செலவுகளாக எதுவும் தெரியவில்லை. தொழில்நுட்பம்/கேமரா அருமை.

கடவுள் இல்லை என சொல்லுகிறார்..ஆனால் அந்த பண்ணிரண்டாம் நூற்றாண்டு முடிச்சு உட்பட அனைத்தும் கடவுள் இருப்பதை உறுதி செய்வதாகவே உள்ளது.

கமலின் உழைப்பு, அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொறு பாத்திரத்தின் வசன உச்சரிப்பு/பாடி லாங்குவேஜ் வித்தியாசம் அருமை. hats off Kamal.

பாதி பாத்திரங்களின் மேக்கப் mask போட்டு விட்டது போலவெ இருந்தது.

fletcher-ஐ எனக்கு பிடித்தே இருந்தது. நன்றாகவே இருந்தது அந்த கதாபத்திரம். கூடவே பல்ராம் நாய்டு(மேக்கப் அருமை) & பூவராகவன். வழக்கமான கமல் சராசரிதான். ஒன்றும் புதிதாகவோ பாரட்டும்படியோ இல்லை

கலிபுல்லா,அவ்டார் சிங்(+ magic bullt) தேவையே இல்லாதவை (அசினும்தான்). புஷ் பாத்திரம் தமாஷ். அதைவிட பெரிய தமாஷ் இதை புஷ் பார்க்கப்போவதாக புரளிவிட்டது. தோற்றம் ஓரளவு புஷ் போலவே இருந்தது.

தாராளமாக பார்க்கலாம். (கண்டிப்பாக தியேட்டரில் மட்டுமே) பார்க்க வேண்டிய படம்.