Sunday, August 03, 2008

ரஜினியின் மன்னிப்பு - என் பார்வையில்.

"நான் தவறு செய்துவிட்டேன்.. கர்நாடக மக்கள் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்து விட்டனர். இனி இது போன்ற தவறை என் வாழ்நாளில் செய்யமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். குசெலன் வெளிவர ஒத்துழைப்பு தாருங்கள்" - குசேலன் படத்தை நண்பர்களுடன் பார்க்க ஆரவாரமாக ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த கசப்பான செய்தியை கேட்டேன்..

புரியவில்லை.. புரியவில்லை என்பதை விட நம்பமுடியவில்லை..ஆனால் உண்மை என ஒரு நண்பர் உறுதிப்படுத்தினார். ரஜினி ரசிகனானாலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பிடிக்காத ரசிகன் நான். அதற்கு காரணம் அவரால் ஒன்றும் செய்துவிட முடியாது + அரசியல் அவருக்கு ஒத்துவராது என நினைத்ததே.. ஆனால் நல்லது செய்ய முயற்சிப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது கிடையாது.. இந்த செய்தியை கேட்கும் வரை.

எனக்கு பயங்கர கோபமும் எரிச்சலும் வந்தது. அவர் ஒகனேக்கல் விவகாரத்தில் பேசியது, பிறகு மன்னிப்பு கேட்க முடியாது என சொன்னது, KFCCக்கு கடிதம் எழுதியது வரை அனைத்தும் சரியே.. அவர் திறமை மேல் உள்ள மதிப்பு அதிகமானது. அவரை இன்னும் பிடித்தது..
ஆனால் இந்த மன்னிப்பு???? சீ என சொல்ல வைத்துவிட்டது.

அவசியமா?
அந்த மன்னிப்பின் அவசியம் எனக்கு இன்னும் புரியவில்லை. குசெலன் இங்கு வெளியிடப்படுவதில் எந்த பெரிய சிக்கலும் இருக்கவில்லை. திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. மேலும் ரஜினி மன்னிப்பு கேட்டு அப்படி படம் பார்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே கர்நாடகாவில் உள்ள எந்த ரஜினி ரசிகனிடம் கேட்டிருந்தாலும் வரும் பதிலாக இருந்திருக்கும். ஒருவேளை குசெலன் வெளியிடப்படாமல் இருந்திருந்தால் அது கன்னடர் மத்தியிலும் வட்டாளுக்கு கெட்ட பேரையே வாங்கி தந்து இருக்கும். இதனால் சிறு நட்டம் ஏற்பட்டாலும் வேறு விதத்தில் அதனை சரிப்படுத்த முயன்றிருக்கலாம்.

சரியா?
தனிப்பட்ட முறையில் தனது வீரம் இவ்வளவுதான் என்பதை புரிய வைத்து விட்டார். தன்னை/தான் பேசுவதை நம்புபவன் முட்டாள் என சொல்லாமல் சொல்லிவிட்டார். இந்த மன்னிப்பு மூலம் தமிழக உரிமை தவறோ என்ற ஐயப்பாட்டை பல கன்னடர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்.இதன் மூலம் ஒன்றுமில்லாத (டெபாசிட் இழந்த)வட்டாளை பெரிய ஆள் என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்திவிட்டார்.. அந்தாள் மேலும் ஒவ்வொரு முறையும் எதை வேண்டுமானாலும் செய்யலாம்..தன்னை மீறி ஒன்றும் செய்ய இயலாது என செயல்பட வாய்ப்புகள் அதிகம். இது ஒகனேக்கல் மற்றும் எந்த தமிழக நலன் சார்ந்த திட்டமாக இருந்தாலும் தமிழர் நலனுக்கு எதிராக இது இருக்கும் என சொல்லவேண்டியதில்லை. ஆகவே இந்த மன்னிப்பு நிச்சயம் மிகப்பெரிய தவறுதான்.

மேலும் ரஜினி ரசிகர் ஒவ்வொருவருக்கும் இது கசப்பையே கொடுத்திருக்கும் என்பது என் எண்ணம்.. ரஜினியை மதிக்கும் போற்றும் ரசிகர்களிம் தன்மானத்தை நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது ரஜினியின் கடமை. அதனை அவர் செய்ய தவறும்போது அவரின் மானத்தையும் மதிப்பையும் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எந்த ரசிகனுக்கும் கண்டிப்பாக தேவையில்லை.

ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன்
அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

15 comments:

ராஜ நடராஜன் said...

நடந்தது முடிந்தவையாக இருக்கட்டும்.இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என பாலசந்தர் நேற்று ரஜனியை வைத்துக்கொண்டு மேடையில் பேசினார்.

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

இன்னைக்கு சர்வதேச மன்னிப்பு தினம்னு சொல்லுறாங்க:)

-L-L-D-a-s-u said...

தமிழ்நாட்டுக்கு ரஜினியின் மன்னிப்பு திரைக்கதையின் மூலம் நல்லதே நடந்திருக்கிறது . இப்போதாவது இந்த வியாபாரிகளைப்பற்றி புரிதல் வந்ததே அது நல்லதுதான் .

இதற்கு முன்பே, ஒரு படத்தின் ரிலீசுக்கு முன்னால் ராஜ்குமார் காலில் இவர் விழுந்தார் . அப்போதே இவரின் வண்ணம் வெளிச்சத்திற்கு வந்தது . ஆனால் பலருக்கு புரியவில்லை .

முன்பு நீங்கள் இரசித்த பஞ்ச் டயாலாக்குகளை இப்போது கேட்டுப்பாருங்கள் ..

ஆ.ஞானசேகரன் said...

சில மெதாவிகள் மன்னிப்புக்கேட்டது, சரியென்று வாதிடுவதும்+ அவரின் பெருந்தன்மை என்று போற்றுவதும்... தமிழனை எந்தளவிற்கு முட்டாளக்கியுள்ளார் என்பது புரிகின்றது..

உங்கள் பதிவில் நல்ல உணர்வை கொடுப்பது பாராட்ட்டுக்கள்...
http://aammaappa.blogspot.com/2008/08/blog-post.html

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ரஜினின் உண்மைத்தன்மை வெளிவந்தது என்பது ஒரு புறம் இருக்க தமிழர்கள் தங்கள் சினிமாக்காரர்களின் மீதான அர்த்தமற்ற எதிர்பார்ப்புக்களையும், மாயைகளையும் நீக்குவதற்கு இத்தகைய சம்பவங்கள் தூண்டுகோலாக அமையும் என்ற வகையில் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது வசப்படாமலோ சொன்ன ரஜினிக்கு நன்றிகள்.

நல்லதந்தி said...

ரஜினி ரசிகரான உங்களிடம் ரஜினி ரசிகனாக நான் கேட்டுக் கொள்வது.
தயை கூர்ந்து இட்லிவடையின் பதிவைப் பாருங்கள்,குறிப்பாக அந்த வீடியோவை குற்றம் ரஜினி மேல் இல்லை என்பது உங்களுக்குப் புரியும்!! :))))))

மனதின் ஓசை said...

அனானி,

வருகைக்கு நன்றி.
பதிவில் உள்ளவை குறித்து ஏதும் கருத்து ஏதும் சொன்னால் பேசலாம்/விவாதிக்கலாம். மேற்கொண்டு சொல்ல எதுவுமில்லை.

மனதின் ஓசை said...
This comment has been removed by the author.
மனதின் ஓசை said...

வாங்க ராஜ நடராஜன்,

//நடந்தது முடிந்தவையாக
இருக்கட்டும்.இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என பாலசந்தர் நேற்று ரஜனியை வைத்துக்கொண்டு மேடையில் பேசினார்.//

நடந்தவை நிச்சயமாக நல்லவை அல்ல. இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

மனதின் ஓசை said...

நிஜமா நல்லவரே,


வருகைக்கும் புன்னகைக்கும் நன்றி.

//இன்னைக்கு சர்வதேச மன்னிப்பு தினம்னு சொல்லுறாங்க:)//

அப்படியா?? :-)

மனதின் ஓசை said...

வாங்க தாஸ்.. வருவீங்கன்னு நினைத்தேன் கரெக்டா வந்துட்டீங்க:-)

//தமிழ்நாட்டுக்கு ரஜினியின் மன்னிப்பு திரைக்கதையின் மூலம் நல்லதே நடந்திருக்கிறது .//

ம்ம்.. ரஜினி தான் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிக்கொண்ட அரசியல் வட்டத்தில் இருந்து வெளிவர இது உதவட்டும்.. தன் படங்களையும் நடிப்பையும் மட்டும் அவர் பார்க்கட்டும்.


//முன்பு நீங்கள் இரசித்த பஞ்ச் டயாலாக்குகளை இப்போது கேட்டுப்பாருங்கள் ..//

எனக்கு அவரின் பஞ்ச்கள் இன்றும் என்றும் பிடிக்கும் தாஸ்.. (அரசியல் பேசாத பஞ்ச் டயலாக்ஸ் எவ்வளவோ இருக்கு .. பாருங்க..பிடிக்கும்):-)

மனதின் ஓசை said...

வாங்க ஞானசேகரன்,
//சில மெதாவிகள் மன்னிப்புக்கேட்டது, சரியென்று வாதிடுவதும்+ அவரின் பெருந்தன்மை என்று போற்றுவதும்... தமிழனை எந்தளவிற்கு முட்டாளக்கியுள்ளார் என்பது புரிகின்றது..//

கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் எங்கும் என்றும் இருப்பதே.. நம்மால் ஒன்றும் செய்ய இயலாது :-(

//உங்கள் பதிவில் நல்ல உணர்வை கொடுப்பது பாராட்ட்டுக்கள்...//
மிக்க நன்றி.

மனதின் ஓசை said...

வாங்க மதுவதனன்.
//தமிழர்கள் தங்கள் சினிமாக்காரர்களின் மீதான அர்த்தமற்ற எதிர்பார்ப்புக்களையும், மாயைகளையும் நீக்குவதற்கு இத்தகைய சம்பவங்கள் தூண்டுகோலாக அமையும் என்ற வகையில் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது வசப்படாமலோ சொன்ன ரஜினிக்கு நன்றிகள்.//

கூடவே என் நன்றிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.:-)

மனதின் ஓசை said...

நல்லதந்தி ( வித்தியாசமான பெயர்:-)),
//ரஜினி ரசிகரான உங்களிடம் ரஜினி ரசிகனாக நான் கேட்டுக் கொள்வது.
தயை கூர்ந்து இட்லிவடையின் பதிவைப் பாருங்கள்,குறிப்பாக அந்த வீடியோவை குற்றம் ரஜினி மேல் இல்லை என்பது உங்களுக்குப் புரியும்!! :))))))//

நான் வீடியோவை பார்க்கவில்லை.. பார்க்கிறேன். அவர் கன்னடத்தில் பேசினார் என கேள்விபட்டேன்.பெங்களூரில் 3 வருடம் இருந்தாலும் எனக்கு கன்னடம் ஒரு வார்த்தை கூட தெரியாது.
அவர் மன்னிப்பு கேட்கவில்லை தவறாக திரித்து விட்டனர் போன்ற செய்திகளை பார்த்தேன்.. உண்மை தெரியவில்லை.

எது எபப்டி இருந்தாலும் குசேலன் வெளியாகும் முதல் நாள் இப்படி பேசியது சுயநலமே.. ஒப்புக்கொள்வோம்.. தவறு செய்யாதவன் யாருமில்லை என சொல்லுங்கள் ஒப்புக்கொள்கிறேன்.. ஆனால் அவர் செய்யும் எதுவுமே தவறே இல்லை என சொன்னால் அது நம் தவறுதான்.. தான் பேசுவதை தெளிவாக பேசவேண்டிய அவசியம் அவருக்கு தெரிய வேண்டும்.

சரி குசேலன் பற்றிய என் விமர்சனம் பார்த்தீர்களா?? பாருங்கள். :-)