Tuesday, June 17, 2008

தசாவதாரம் - பத்தே பத்து வரி.

தமிழ்மண விமர்சனங்களுக்கு நன்றி - இடைவேளையில் திருப்தியாகவே உணர்ந்தேன் :-)

முதல் பத்து நிமிடங்கள் அருமை.(கொடுத்த காசு அதற்கே சரியென்றாலும் தொடர்ந்து பார்த்தது ஆட்டோவின் அநியாய மீட்டருக்கு சரியானது. )அமெரிக்காவில் நடக்கும் காட்சிகளும் நன்றாகவே எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாதியில் லாஜிக் ரோம்பவே இடிக்கிறது. விறுவிறுப்பும் குறைவு. அசின் - கடுப்பேற்றுகிறார். என்னடா லாஜிக் இது என்ற யோசனைக்கு வித்திடுகிறார். அது படம் முடியும்வரை தொட்ர்கிறது.

அனாவசிய செலவுகளாக எதுவும் தெரியவில்லை. தொழில்நுட்பம்/கேமரா அருமை.

கடவுள் இல்லை என சொல்லுகிறார்..ஆனால் அந்த பண்ணிரண்டாம் நூற்றாண்டு முடிச்சு உட்பட அனைத்தும் கடவுள் இருப்பதை உறுதி செய்வதாகவே உள்ளது.

கமலின் உழைப்பு, அதை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொறு பாத்திரத்தின் வசன உச்சரிப்பு/பாடி லாங்குவேஜ் வித்தியாசம் அருமை. hats off Kamal.

பாதி பாத்திரங்களின் மேக்கப் mask போட்டு விட்டது போலவெ இருந்தது.

fletcher-ஐ எனக்கு பிடித்தே இருந்தது. நன்றாகவே இருந்தது அந்த கதாபத்திரம். கூடவே பல்ராம் நாய்டு(மேக்கப் அருமை) & பூவராகவன். வழக்கமான கமல் சராசரிதான். ஒன்றும் புதிதாகவோ பாரட்டும்படியோ இல்லை

கலிபுல்லா,அவ்டார் சிங்(+ magic bullt) தேவையே இல்லாதவை (அசினும்தான்). புஷ் பாத்திரம் தமாஷ். அதைவிட பெரிய தமாஷ் இதை புஷ் பார்க்கப்போவதாக புரளிவிட்டது. தோற்றம் ஓரளவு புஷ் போலவே இருந்தது.

தாராளமாக பார்க்கலாம். (கண்டிப்பாக தியேட்டரில் மட்டுமே) பார்க்க வேண்டிய படம்.

4 comments:

MyFriend said...

இந்த வருடத்தின் முதல் பதிவு. :-)

நச்சுன்னு இருக்கு. :-)

//தாராளமாக பார்க்கலாம். (கண்டிப்பாக தியேட்டரில் மட்டுமே) பார்க்க வேண்டிய படம்.//

ரிப்பீட்டேய்.

மனதின் ஓசை said...

மை ஃபிரண்ட் ::. ,
வாங்க, வாங்க .

//இந்த வருடத்தின் முதல் பதிவு. :-)//

இந்த வருடத்தின் முதல் பின்னூட்டம் உங்களோடது :-)

//நச்சுன்னு இருக்கு. :-)//

அது.. ரொம்ப நன்றி.

////தாராளமாக பார்க்கலாம். (கண்டிப்பாக தியேட்டரில் மட்டுமே) பார்க்க வேண்டிய படம்.//

ரிப்பீட்டேய்.
//
கமலோட உழைப்புக்கு கொடுக்க வேண்டிய மரியாதை அது.. அப்புரம் படத்தின் பிரம்மாண்டம் தியேட்டரில் பார்த்தால்தான் உணர முடியும்.

முகவை மைந்தன் said...

இரண்டாவது பின்னூட்டம் உன்னோடது, மூணாவது என்னோடது ;-)

ஏன் இப்படி பல நிறங்களில் எழுதி தொல்லை பண்ற? ஒருவேளை, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு உள்குத்து இருக்குமோ? திரும்ப몮 பாக்குறேன்.

மனதின் ஓசை said...

//மூணாவது என்னோடது ;-)//

ஆஹா.. இந்த விளையாட்டு நல்லா இருக்கே. :-)

//ஏன் இப்படி பல நிறங்களில் எழுதி தொல்லை பண்ற? //

அடப்பாவி..

//ஒருவேளை, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு உள்குத்து இருக்குமோ? //
நேர்குத்துதான் இருக்கு.
பச்சை - +
சிகப்பு - - :-)

//திரும்ப몮 பாக்குறேன்//
பார்த்தியா?