Monday, August 04, 2008

குசேலன் - நேர்மையான விமர்சனம்

குசெலன் படத்தை ரிலீஸுக்கு முந்திய நாளே பார்த்து விட்டாலும் அடுத்த இரண்டு நாட்கள் இனையப்பக்கம் ஒதுங்க முடியவில்லை. நேற்று வந்து பார்த்ததில் படத்தை விமர்சனம் செய்த அனைவரும் கிட்டதட்ட கடித்து குதறி இருந்தனர். அதில் எனக்கு ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியே அதிகம் தெரிவதால் இந்த பதிவு.


படத்தில் பாராட்டுவதற்கும் குட்டுவதற்கும் தேவையான அளவு வசதி உள்ளது.



1. சண்டை காட்சி இல்லாமல் பன்ச் வசனங்கள் இல்லாமல் இது போன்ற கதையில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டது பாராட்டப்பட வேண்டியது. இது நாள்வரை மசாலா பாடங்களையே கொடுக்கிறார் என குற்றம் சாட்டியவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை. இதை பற்றி ஒரு சிறு பாராட்டை ஒரு பதிவில்கூட பார்த்ததாக நினைவில்லை.


2. பசுபதியின் கதாபாத்திரம் அருமை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் வறுமையில் செம்மை. ஒரு சிலர் பசுபதியின் மீது பரிதாபம் வரவில்லை என கூறி இருந்தனர். எனக்கு அவர்கள் மேல் பரிதாபமே வருகிறது. நேர்மையாகவும் அதில் நிம்மதியாகவும் வாழும் பாத்திரம் அது.நன்றாக செய்திருக்கிறார்.ஆனால் கிட்டதட்ட ஒரே விதமான நடிப்பை மட்டுமே வெளிக்காட்ட கூடிய கதை.

3. சொல்லம்மா பாடல் காட்சியில் வரும் பிண்ணனி காட்சிகள் அருமை(டால்பின்களை தவிர்த்து).

4. இது கடைசிகாட்சி வரை பசுபதி படமே. கடைசி காட்சியில் ரஜினி படமாக மாறி விடுவது ரஜினியின் அருமையான நடிப்பால். மனிதர் கலக்கி இருக்கிறார்.


5.படத்தில் இறுதி காட்சி அருமை. படம் ஆரம்பம் முதல் அனைத்து காட்சிகளும் இதனை நோக்கியே போகின்றது. படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்ததாலும் இறுதி காட்சியை எதிர்ப்பார்ப்பதாலும் முன்பாதி ஒருவேளை சலிப்பை பலருக்கு கொடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் இந்தளவுக்கு அதிகமாக ஓவர்பிலப் கொடுத்து இருந்தும் இறுத்க்காட்சி அனைவருக்கும் நிறைவை கொடுத்தது ரஜினியால்.

6.நயன்தாரா கவர்ச்சிக்காக மட்டுமே வருகிறார்.:-( அந்த பாடல் காட்சியும் தேவையில்லாதது.

7. காமெடி எனற பெயரில் வரும் காட்சிகள் கொடுமை. ரஜினியை சந்திக்கும் காட்சியை தவிர மற்ற காட்சிகளில் எல்லாம் வடிவேலு சொத்ப்போ சொதப்பல். சந்திரமுகி அளவு இல்லையென்றாலும் இரட்டை அர்த்த வசனங்கள் கடுப்பெற்றுகின்றன. இதெல்லாம் தேவையா?? வாசூஊஊஊ...


9. வாசு செய்த பில்டப் ஓவர்.. அவர் ஓவராக பில்டப் கொடுத்ததே பல பிரச்சினைகளுக்கு காரணம். ரஜினியும் ஆரம்பத்தில் தெளிவாகவே இருந்தார்.. ஆனால் வள்ளி போல் ஆகிவிடும் என பயமுறுத்தி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார் வாசு.

மொத்தத்தில் அதிக எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் நிச்சயம் ரசிக்கக்கூடிய படம். ரஜினி ரசிகர்களுக்கு படம் பிடிக்கும். பொதுவானவர்களுக்கு இறுதிக்காட்சி பிடிக்கும். ரஜினியை பிடிக்கதவர்களுக்கு? கண்டிப்பாக பிடிக்காது. தியேட்டர் பக்கம் ஒதுங்கவேண்டாம்.. இல்லை பார்த்து பின் திட்டியே தீருவேன் என்றால் நான் என்ன சொல்ல.

ரஜினி இன்னும் மசாலாக்களை குறைத்து நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடிக்க இந்த படம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெரும். சிவாஜிக்கும் தசாவதாரத்துக்கும் இது போன்றே நெகட்டிவ் விமர்சனங்கள் ஆரம்பத்தில் வந்தன. பிறகு அதன் வெற்றி பலருக்கு கண்ணை கட்டியது.. அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் நிச்சயம் வெற்றியடையும் எனவே நான் நம்புகிறேன்

படத்தில் பனிபுரிந்தவர்களுக்காக நிதியுதவி அளிக்கும் ரஜினிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

14 comments:

priyamudanprabu said...

என்ன சார் காமெடி பண்ணுரிங்க?
ரஜினி போன்ற வியாபாரிக்கு ஏன் கலைஞனுக்குறிய மறியாதை.

Anonymous said...

///prabu said...
ரஜினி போன்ற வியாபாரிக்கு///

நல்ல படங்களா குடுத்தவரேட 2 மசாலா ஹிட்டடிக்க தொடர்ந்து அந்தமாதிரி படங்கள தயாரிப்பாளர்களும் எதிர்பார்க்க அவரு என்னதா பண்ணுவார்? அன்னிலேர்ந்து அப்டியே மாத்திட்டாங்க.
நேத்து அவர் படத்துக்கு எங்கயோ எதிர்ப்புனா ஓடி வந்துகூட வேணா, ஏசி றும்லருந்துகூட யாரும் குரல் குடுக்கல.
அவரு படம் தயாரிச்சா தமிழர் பணத்த அள்ளுறார்னாங்க. அப்புறம் அதிக சம்பளம் வாங்குறார்னீங்க,
தமிழருக்கு சார்பா பேசினா பாராட்ட யாருமில்ல, சம்பந்தப்பட்டவங்க பிரச்சனக்கடக்கூடாதுனு வருத்தம் தெரிவிச்சா சும்மா உக்காந்திருக்கறவங்கெல்லா ஏசி றும விட்டு வெளிய வந்து கண்டன் சொல்றாங்க.
ஒரு வேள அவரு வருத்தம் தெரிவிக்கா இருந்திருந்தா குசேலனை சுப்பருன்னு சொல்லி இருக்கலாம்.

படங்கள்ள சுப்பரா இருக்கறவரு நெசத்திலும் அப்படி இருப்பாருனு எப்படி எதிர் பார்க்கலாம்?
ஆனாலும் எனக்கென்னமோ படங்கள்ள வார மாதிரி ” நீங்க என்னடா தடை போர்றது, நானே பேர்றேன்னுடு,” கர்னாடகாவில தன்னோ எந்த படத்தையும் வெளியிடக்கூடாதுனு இவரே தடை போடனும்னு ஆசப்பட்டேன்.

படம் உண்மையில் நல்லாருந்துது.
ஆனா ரஜினிங்கற மாஸ் தா படத்டதோட எதிரி. மம்முட்டிக்கு அப்படியொரு மாஸ் இல்வைங்கறதால அந்த படம் ஓகே.
பிழையா சொல்லி இருந்தா திருத்தவும்.

ஓசையோட பதிவு சுப்பர்.

Anonymous said...

படத்தில் மற்றவர்களுக்கு பெருங்குறைகளாகத் தெரிவதெல்லாம் உங்களுக்கு கண்ணில் படவேயில்லை போல!
அவ்வளவு நல்லவரா நீங்க?

Anonymous said...

//என்ன சார் காமெடி பண்ணுரிங்க?
ரஜினி போன்ற வியாபாரிக்கு ஏன் கலைஞனுக்குறிய மறியாதை.///

Repeateeeeeeeeeee

Anonymous said...

என்ன சார் காமெடி பண்ணுரிங்க?

Anonymous said...

சிலபேர் குற்றங்கண்டுபிடிக்கமட்டும் திரிவினம் . . .

மனதின் ஓசை said...

prabu, ஸ்ரீ மற்றும் அனானி,
வருகைக்கு நன்றி.

//என்ன சார் காமெடி பண்ணுரிங்க?//
எது உங்களுக்கு காமெடியா தெரியுதுன்னு எனக்கு தெரியல சார்.. சரி..இப்படி பொத்தம் பொதுவா பேசாமல் பதிவில் குறிப்பிட்டுள்ளவைகள் பற்றி சொல்லுங்கள்..
அதில் எது காமெடி என சொல்லுங்கள்.


படத்தை பற்றி அத்தனை மீடியாக்களும் நல்ல விமர்சனம் கொடுத்துள்ளன.. (உடனே அது பணம் கொடுத்து போடசொன்னதுன்னு சொல்லுவீங்க.. ஹும்ம்..
) ஒரு விமர்சனம் என்பது படத்தின் நிறைகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுவது.. தன் காழ்ப்புனர்ச்சியை அல்ல..


//ரஜினி போன்ற வியாபாரிக்கு ஏன் கலைஞனுக்குறிய மறியாதை.//

கலைஞன் எனறால் யார் சார்? அதுக்கு உங்களோட தனிப்பட்ட விளக்கம் என்ன?
30 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.. அசைக்க முடியாத முதலிடத்தில் ஒரு maas entertainerஆக இருந்து கொண்டு இருக்கிறார். நடிகன் என்பதை மீறி தன் நடிப்பால்/ஸ்டைலால் மிகப்பலரின் பாசத்தை பெற்று இருக்கிறார்.இவரை நீங்கள் கலைஞன் என ஒப்புக்கொள்ளாவிட்டால் அது ரஜினி என்ற மனிதனின் வெற்றியை ஒப்புக்கொள்ள முடியாத உங்களுடைய மனப்பான்மையையே காட்டுகிறது.


ஆம். ரஜினி ஒரு மிகச்சிறந்த வியபாரியும் கூட.. அதை என்றும் அவரோ அவரை சேர்ந்தவர்களோ மறுத்தது இல்லை. அது தவறா?????

மனதின் ஓசை said...

வாங்க சுபாஷ்,

//நல்ல படங்களா குடுத்தவரேட 2 மசாலா ஹிட்டடிக்க தொடர்ந்து அந்தமாதிரி படங்கள தயாரிப்பாளர்களும் எதிர்பார்க்க அவரு என்னதா பண்ணுவார்? அன்னிலேர்ந்து அப்டியே மாத்திட்டாங்க. //

ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரினால் ரஜினி என்ற நடிகனை இழந்து விட்டோம் என பாலச்சந்தர் சொன்னாருன்னு நினைக்கிறேன்.உணமை.


//நேத்து அவர் படத்துக்கு எங்கயோ எதிர்ப்புனா ஓடி வந்துகூட வேணா, ஏசி றும்லருந்துகூட யாரும் குரல் குடுக்கல. அவரு படம் தயாரிச்சா தமிழர் பணத்த அள்ளுறார்னாங்க. அப்புறம் அதிக சம்பளம் வாங்குறார்னீங்க,
தமிழருக்கு சார்பா பேசினா பாராட்ட யாருமில்ல, //

இது தெரிஞ்சதுதானே. புதுசில்லயே..

//சம்பந்தப்பட்டவங்க பிரச்சனக்கடக்கூடாதுனு வருத்தம் தெரிவிச்சா சும்மா உக்காந்திருக்கறவங்கெல்லா ஏசி றும விட்டு வெளிய வந்து கண்டன் சொல்றாங்க.
ஒரு வேள அவரு வருத்தம் தெரிவிக்கா இருந்திருந்தா குசேலனை சுப்பருன்னு சொல்லி இருக்கலாம்.//

இதில் நான் மாறுபடுகிறேன்.. ரஜினி இதனை செய்திருக்கவேண்டாம். என் முந்தைய பதிவை பார்க்கவும்.

//படம் உண்மையில் நல்லாருந்துது.
ஆனா ரஜினிங்கற மாஸ் தா படத்டதோட எதிரி. //

சரியா சொன்னீங்க.. அவரும் இது கெஸ்ட் ரோல் தான்.. தான் கொஞ்சம்தான் வருகிறேன்..இது பசுபதி படம் என சொன்னார்.. ஆனால் வாசு ஓவர் பில்டப் கொடுத்து கெடுத்து விட்டார்.

//ஓசையோட பதிவு சுப்பர்//

நன்றிங்கண்ணா..

மனதின் ஓசை said...

//படத்தில் மற்றவர்களுக்கு பெருங்குறைகளாகத் தெரிவதெல்லாம் உங்களுக்கு கண்ணில் படவேயில்லை போல!//

படத்தில் நிறையாக தெரியும் எதுவுமே (உங்கள் கண்களுக்கு தெரிந்தாலும்) அதை பற்றி பேச மனதில்லை போல..

சரி விடுங்கள்.. குறைகள் அதிகமாக இருக்கிறது.. இல்லை என சொல்லவில்லை.. பதிவிலும் குறிப்பிட்டு உள்ளேன்.. அதுவுமா உங்கள் கண்களுக்கு தெரியவில்லை.. அய்யோ பாவம்..

//சிலபேர் குற்றங்கண்டுபிடிக்கமட்டும் திரிவினம் . . .//

என்ன பண்றது.. விட்டுத்தள்ளுங்க..

மனதின் ஓசை said...

//படத்தில் மற்றவர்களுக்கு பெருங்குறைகளாகத் தெரிவதெல்லாம் உங்களுக்கு கண்ணில் படவேயில்லை போல!//

அனானி..

இந்த படத்தை என்ன எதிர்பார்த்து போனார்கள் என தெரியவில்லை.. படம் அதே "கத பறயும் போல்" இருக்கும் என நம்பி போனார்களா?

ரஜினிக்காக மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ரஜினி லேட்டாக வருவார்.. ஆனால் படம் முழுக்க இருப்பார். இது கண்டிப்பாக ஒரு ரஜினி படம் என வாசு சொன்னாரே..
அவர் வேறு டைரக்ட் செய்கிறார்.. இதையெல்லாம் தெரிந்தும் "கத பறயும் போல்" போலவோ அல்லது அதை விட நன்றாகவோ இருக்கும் என எதிர்பார்த்து போனார்கள் என்றால் உங்களை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.

படத்தை கெடுத்திருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.... எந்தளவு என்பதுதான் தெரியாமல் இருந்தது..


கத பறயும் போல் என்ற ஒரு நல்ல படத்துக்கு இந்தியா முழுக்க விளம்பரமும் கூடவே தேடித்தந்துள்ளார். அதற்காகவாவது சந்தோஷப்படுங்கள்.

Anonymous said...

///மனதின் ஓசை said...

வாங்க சுபாஷ்,/////

பொறுமையா வாசிச்சு உங்க point of view வ பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணா.

என் பின்னுட்டத்தில எவ்ளோ எழுத்துப்பிழைனு ஓசையண்ணாட பதில வாசிக்கறப்பதா புரிஞ்சுது. மன்னிச்சுக்கோங்கண்ணா. இப்பதா பதிவெழுதறத்தக்காக NHM install பண்ணி பழகிட்டிருக்கேன். (3 நாள்)
கிட்டத்தட்ட ஒரு பின்னுட்டத்துக்கே 10 நிமி எடுக்குது. ஹிஹி

விவாதம் நல்லா போய்ட்டிருக்கே.

மனதின் ஓசை said...

கிருஷ்ணா,

தரக்குறைவான கருத்தையுடைய தங்களுடைய பின்னூட்டத்தை வெளியிட இயலாது.

யாரையோ அசிங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தங்கள் தரத்தை தாழ்த்திக்கொள்ளவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றி.

மனதின் ஓசை said...

//என் பின்னுட்டத்தில எவ்ளோ எழுத்துப்பிழைனு ஓசையண்ணாட பதில வாசிக்கறப்பதா புரிஞ்சுது. மன்னிச்சுக்கோங்கண்ணா.இப்பதா பதிவெழுதறத்தக்காக NHM install பண்ணி பழகிட்டிருக்கேன். (3 நாள்)
கிட்டத்தட்ட ஒரு பின்னுட்டத்துக்கே 10 நிமி எடுக்குது. ஹிஹி//

சுபாஷ்,
இதெல்லாம் சகஜம்.. போகப்போக(பழக பழக) சரியாகிடும் :) வருகைக்கு மிக்க நன்றி.:-)

தமிழ் காமிக்ஸ் உலகம் said...

Dear Manadhin Osai,

Nice Post.

Wanted to know about the cornucopia of Tamil Comics World?

Kindly visit the new Kid in the Comics Blog Field. www.tamilcomicsulagam.blogspot.com

This is a Palce where you will find Comics Scans, Celebrity Postings, News On Comics, Comics Reviews, Availablity of Comics on Many Places, Interview with Some of the People involved in Making Comics (National / International), Star Bloggers, Comics Experts, Hardcore Comic Fans, etc.

Keep involved with www.tamilcomicsulagam.blogspot.com.

its your place to become what you always wanted to be = Youthfulness.

Thanks & Regards,

King Viswa.