Wednesday, June 18, 2008

பாமாக- திமுக-ஆதிமுக-காங்கிரஸ்

ராமதாஸ் : பார்த்தீங்களா..பார்த்தீங்களா.
ஜெயா : கேட்டீங்களா..கேட்டீங்களா
மு.க : (2-3 மாதம் கழித்து) : வாங்கிட்டீங்களா..வாங்கிட்டீங்களா
_____________________________

திமுக - பாமாக முறிவு நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததுதான். வெளியேறுவார்களா/வெளியேற்றப்படுவார்களா என்பதற்கு மட்டும் முடிவு தெரிந்துவிட்டது.

பாமாகவுக்கு ஆதிமுக(கூடவே பாஜாக)வுடன் கூட்டு சேர ஆசைப்பட்ட எதிர்பார்த்த சந்தர்ப்பம். மத்தியில் பாஜாக தான் அடுத்து வரும் போல் தெரிகிறது.பாமாக ஜெயிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஆசசப்படும் என்பது தெரிந்ததுதான்.

இது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (கனிமொழி/ஸ்டாலின் - அழகிரி /அழகிரி மகள்/ராயல் கேபிள் விஷன்) - குடும்ப அரசியல் விவாதம் மறுபடியும் ஆரம்பிக்கும். இதற்கு திமுகாவிடம் சரியான பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.

இப்போது காங்கிரஸுக்கு செல்வாக்கு அதிகம். அது அவர்களின் பல கோஷ்டிகளை எப்படி யோசிக்கவைக்கும்/பேசவைக்கும் என்பது கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். மொத்தத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

ஆதிமுக, அதாவது ஜெயலலிதா அமைதியாக ஆணவம் இல்லாமல் இருந்தாலே அடுத்த ஆட்சியை பிடித்து விடலாம். இருப்பாரா?

மதிமுக : ?

24 comments:

மனதின் ஓசை said...

இனி இல்லை எல்லை, அதிகமாக குரல் கொடுப்போம்: ராமதாஸ்

MyFriend said...

பதிவையூம் நீங்களே போட்டு முதல் கமேண்டையும் நீங்களே போட்டால் நாங்கல்லாம் என்ன பண்றது?????? ;-)

முகவை மைந்தன் said...

தமிழக அளவில் மக்களாட்சி முறை ஒரு மாதிரி மாறாத இரு கூட்டணி அளவை எட்டி இருக்கிறது என்று நினைத்த நேரத்தில் இந்தப் பிளவு வருத்தம் கொள்ளவே செய்கிறது.

மக்களாட்சியில் மட்டுமே இவ்வாறு தன்னை காலத்துக்கேற்றவாறு நெறிப் படுத்திக் கொள்ள முடிகிறது. இதுவும் அது போன்ற விளைவுன்னு நம்பிக்கையா இருப்போம்.

இது ரொம்பப் பெரிய விவாதத் தலைப்பு. இப்போதைக்கு நிப்பாட்டிக்கிறேன்.

மனதின் ஓசை said...

//பதிவையூம் நீங்களே போட்டு முதல் கமேண்டையும் நீங்களே போட்டால் நாங்கல்லாம் என்ன பண்றது?????? ;-)//

:-) யாருமே கமெண்ட் போடல்லன்னா என்ன பன்றதுன்னுதான்..

மை ஃபிரண்ட் இருக்க பயமேன்றது இப்பதான் புரியுது:-)

மனதின் ஓசை said...

//தமிழக அளவில் மக்களாட்சி முறை ஒரு மாதிரி மாறாத இரு கூட்டணி அளவை எட்டி இருக்கிறது என்று நினைத்த நேரத்தில் இந்தப் பிளவு வருத்தம் கொள்ளவே செய்கிறது. //

வருத்தம்? புரிய வில்லை.

இன்னும் இரு கூட்டணி ஆட்சி முறைதானே. ராமதாஸு தனிச்சு போட்டியிடுவார் என நம்புகிறீர்களா?

//நெறிப் படுத்திக் கொள்ள முடிகிறது. //
ஏதோ கிண்டல் பன்றீங்கன்னு மட்டும் புரியுது.

//இது ரொம்பப் பெரிய விவாதத் தலைப்பு. இப்போதைக்கு நிப்பாட்டிக்கிறேன்.//

மக்களாட்சி Vs முடியாட்சி பத்தி பேசறீங்களா?

TBR. JOSPEH said...

நான் உங்க பதிவை பாக்காமயே இதப்பத்தி எழுதிட்டேன்.

நீங்க சொல்றதும் மிகச் சரி. ஆனா ஒன்னு இதுல பாமகவுக்கும் பாதகம் இருக்கு. அவர் ஜெ பக்கம் சேரணும்னாலும் அந்தம்மாதான் கூப்புடணும். இவரா போய் சேர்ந்தா அங்கயும் மதிப்பு இருக்காது. தனியா நின்னார்னா சுத்தமா காணாம போயிருவாரு. அதுவும் ஒருவகையில் தமிழகத்துக்கு நல்லதுதான்.

மனதின் ஓசை said...

ஜோசப் சார்,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

//நீங்க சொல்றதும் மிகச் சரி. ஆனா ஒன்னு இதுல பாமகவுக்கும் பாதகம் இருக்கு. அவர் ஜெ பக்கம் சேரணும்னாலும் அந்தம்மாதான் கூப்புடணும். இவரா போய் சேர்ந்தா அங்கயும் மதிப்பு இருக்காது.//

அங்க எப்படி போனாலும் மதிப்போ மரியாதையோ இருக்காது. இதையெல்லாம் யோசிக்காமலா இந்த சவுண்டு வுட்டு இருப்பார் டாக்டர்?

//தனியா நின்னார்னா சுத்தமா காணாம போயிருவாரு.//
நிச்சயமா தனியாவெல்லாம் அவர் நிற்கவே மாட்டார்.

// அதுவும் ஒருவகையில் தமிழகத்துக்கு நல்லதுதான்.//
:-)
எதுவுமே நல்லது மாதிரி தெரியல
:-((((

Sanjai Gandhi said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

பதிவையூம் நீங்களே போட்டு முதல் கமேண்டையும் நீங்களே போட்டால் நாங்கல்லாம் என்ன பண்றது?????? ;-)//
அதானே :P

Sanjai Gandhi said...

//இது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (கனிமொழி/ஸ்டாலின் - அழகிரி /அழகிரி மகள்/ராயல் கேபிள் விஷன்) - குடும்ப அரசியல் விவாதம் மறுபடியும் ஆரம்பிக்கும். இதற்கு திமுகாவிடம் சரியான பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.//
நண்பருக்கு ஒரு நினைவூட்டல்.
நீங்கள் இந்தியக் கட்சிகள் பத்தி பேசறிங்கனு மறந்துட்டிங்க போல... ஓட்டு போடும் பலருக்கு வேட்பாளர் யார்னே தெரியாது. போடும் போது மட்டுமில்ல.. ஓட்டு போட்டு அவர் ஜெயிச்ச பின்பும் அவர் யார்னு தெரியாது. அதே வேட்பாளர் அல்லது அந்த தொகுதிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒருவர் அடுத்த முற போட்டி இடுவார். அப்போதும் அவர் யார்னே தெரியாமத் தான் ஓட்டு போடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் கட்சியின் தலைவரும் சின்னமும் மட்டுமே. இவை இரண்டுக்குத் தான் இங்கு ஓட்டு. ஆகவே நீங்கள் குறிப்பிடும் விவாதத்தினால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. வட மாவட்டங்களில் கருணாநிதி+ஸ்டாலின்+உதய சூரியனுக்கு ஓட்டு விழும். தென் மாவட்டங்களில் கருணாநிதி+அழகிரி+உதயசூரியனுக்கு ஓட்டு விழும். பிறகு கூட்டணி பலம் ஆட்ச்சி செய்வது யார் எனத் தீர்மானிக்கும். மற்றபடி விவாதம், பிரச்சனைகள் எதுவும் கட்சி ஓட்டுகளை பாதிககாது...

கட்சி ஓட்டுக்களில் எந்த கட்சிக்கும் பாதிப்பு இருக்காது. ஓட்டு போடாமல் தேர்தல் நாளை விடுமுறை நாளாக கொண்டாடும் சோம்பேறி முண்டங்கள் வாக்கு சாவடிக்கு வந்தால் தான் மாற்றம் வரும். ஆனால் அவர்களும் யாரை ஆதரிப்பார்கள்?... எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் தானே ஊறுகிறது... மாற்றம் வர வேண்டுமானால் புதியதாக யாராவது வர வேண்டும். ..

...சோடா ப்ளீஸ்.. :P

மனதின் ஓசை said...

வாங்க சஞ்சய் (பெயர் சரியா நண்பா?).

மேலோட்டமா நீங்க சொல்றது சரிதான்.. ஓட்டு வங்கிகள்-சமூகத்தின் சாபங்கள். ஏற்கனவே சொன்னதுதான் - கண்மூடித்தனமான ஆதரிப்பும் எதிர்ப்பும் இருக்கும்வரை இதுதான் கதி.

ஆனா எல்லாருமே அப்படியில்லையே.. படிச்சவன் ஓட்டு போட போறதில்லைன்னாலும் படிக்கதவன் பொடத்தான் செய்கிறான். அவனுக்காகத்தான் 2 ரூவா அரிசியும் இலவச டீவியும் தேர்தல் நேரத்தில் காசும். அவனும் இப்பொ யோசிக்க ஆரம்பிச்சிட்டான். பலதையும் யோசிக்க ஆரம்பிச்சாச்சு.. இந்த கூத்தெல்லாம் கவனிச்சிகிட்டுதான் இருக்கான்.. அதன் எதிரொலி தேர்தலில் தெரியும்.

சுருக்கமா,

ஓட்டு வங்கிய வச்சு பார்த்தாலும் பாமாக பிரிந்தது பலவீனமே.

செயல்பாடுகள் வைத்து பார்த்தாலும் திமுக சரியாக செயல்படவில்லை. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசின் செல்வாக்கும் சரிந்து கொண்டு வருகிறது..

மோகன் கந்தசாமி said...

///செயல்பாடுகள் வைத்து பார்த்தாலும் திமுக சரியாக செயல்படவில்லை////
இது பா.மா.க. -வின் மொட்டை குற்றச்சாட்டுகளுக்கே சவால் விடும் குற்றச்சாட்டாக இருக்கிறதே!

மனதின் ஓசை said...

வாங்க மோகன் கந்தசாமி,

//இது பா.மா.க. -வின் மொட்டை குற்றச்சாட்டுகளுக்கே சவால் விடும் குற்றச்சாட்டாக இருக்கிறதே!//

பாமாக மொட்டையாக எந்த குற்றச்சாட்டும் சொன்னது போல் எனக்கு நினைவில்லை. அவர்கள் நடைமுறைக்கு ஒத்துவரும் எந்த தீர்வையும் சொல்லாமல் புரிதல் என்பதே இல்லாமல் குற்றம் மட்டுமே சுமத்தினார்கள். அதுவும் மிக காட்டமாக. அது நிச்சயம் தீர்வுக்கு வழிவகுக்க அல்ல எனபது அனைவரும் அறிந்ததே


அடுத்து
நான் மொட்டையாக சொன்னேனா? :-)

முக்கியமான விஷயங்கள் பலவற்றில் திமுகாவின் செயல்பாடுகள் (ஒகனேக்கல் ஒரு எடுத்துகாட்டு)தெளிவான முடிவெடுக்க வில்லை. குடும்ப பாசம்/குடும்ப அரசியல், அதிலும் உள்ளேயே குழப்பங்கள் வேறு. நடைமுறைபடுத்தப்பட்ட திட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடுத்து
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் எல்லாவற்றையும் சொல்லித்தெரியவேண்டியதில்லை என்பதால் சிலதை சொல்லி மற்றதை விட்டுவிட்டேன்.

சரிதானே?

மோகன் கந்தசாமி said...

////பாமாக மொட்டையாக எந்த குற்றச்சாட்டும் சொன்னது போல் எனக்கு நினைவில்லை////
மொட்டை குற்றச்சாட்டு என்பது என்ன? காரணமில்லாமல் குற்றம் சொல்வது மட்டுமா? தீர்வென்று எதுவும் சொல்லாமல் குற்றம் சாட்டுவது மட்டுமா? நடைமுறையையும் சூழ்நிலையையும் ஆராயாமல் குற்றம் சாட்டுவதும் மொட்டை குற்றச்சாட்டே!, ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுகளில் வெகு அரிதான சில மட்டுமே முடி மொளச்ச குற்றச்சாட்டுகள், பெரும்பாலும் மொட்டைதான், உங்கள் மனதின் ஓசையை மறுமுறை எழுப்பிக் கேளுங்கள், கடந்த ஆட்சியைவிட விவேகமற்ற ஆட்சி ஒன்று தமிழத்திலே இருந்ததா? அதைவிட செயல்பாடுகளில் கோட்டைவிட்ட அரசாகவா இந்த அரசு இருக்கிறது!, மணல் கொள்ளை, கல்விக்கட்டன குளறுபடிகள், கேபிள் மாபியா போன்றவை எவர் ஆட்சி செய்தாலும் இருக்கும். சுத்தமான ஆட்சி வேண்டுமென்றால் கம்யூநிஷ்ட்டுகளுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும். அவர்கள் செயல்பாடும் இப்படித்தான் இருக்கும் என்று ஏதாவது விக்கு வைத்த குற்றச்சாட்டைச் சொன்னால், பேசாமல் எல்லோரும் ம.க.இ.க -வில் சேர்ந்து விடலாம்.

மனதின் ஓசை said...

மோகன்,
கோவப்படாதீங்க.

//நடைமுறையையும் சூழ்நிலையையும் ஆராயாமல் குற்றம் சாட்டுவதும் மொட்டை குற்றச்சாட்டே!//

நான் சொன்னது
//அவர்கள் நடைமுறைக்கு ஒத்துவரும் எந்த தீர்வையும் சொல்லாமல் புரிதல் என்பதே இல்லாமல் குற்றம் மட்டுமே சுமத்தினார்கள். அதுவும் மிக காட்டமாக. அது நிச்சயம் தீர்வுக்கு வழிவகுக்க அல்ல எனபது அனைவரும் அறிந்ததே//


சரி. .நாம் இருவரும் ஒரே கருத்தைதான் சொல்கிறோம். மொட்டை குற்றச்சாட்டு என்ற வார்த்தையில் மட்டுமே வேறுபாடு.. அது முக்கியமில்ல்லை என நினைக்கிறேன்.


//உங்கள் மனதின் ஓசையை மறுமுறை எழுப்பிக் கேளுங்கள், கடந்த ஆட்சியைவிட விவேகமற்ற ஆட்சி ஒன்று தமிழத்திலே இருந்ததா?//

கடந்த ஆட்சி நல்ல ஆட்சி என என்காவது சொல்லியிருக்கிறேனா?
(நான் ஆதிமுக விசிறி/திமுக எதிர்ப்பாளன் என நீங்கள் நினைத்தால் தயவு செய்து என் பழைய பதிவுகளை பாருங்கள்).

எல்லாரும் இப்படித்தான் இருக்குமென்றால் யார் வந்தால் என்ன? ஆதிமுகவை விட திமுக நன்றாக செயல்படும் என நம்பியது தவறென்றால் மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. ஆட்சிக்கு வந்த உடன் ஒரு நல்ல ஆட்சி இந்த முறை நடகும் என்ற எதிர்பார்ப்பு வந்தது .. அது புஸ்வானமாவதால் வந்த சலிப்பு

//மணல் கொள்ளை, கல்விக்கட்டன குளறுபடிகள், கேபிள் மாபியா போன்றவை எவர் ஆட்சி செய்தாலும் இருக்கும். //

ஹும்ம்.. சரிதான்.. அங்கு காசு காரணமாக இருக்கும்.. இங்கு குடும்ப பாசம் காரணமாக இருக்கிறது.

//சுத்தமான ஆட்சி வேண்டுமென்றால் கம்யூநிஷ்ட்டுகளுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும். அவர்கள் செயல்பாடும் இப்படித்தான் இருக்கும் என்று ஏதாவது விக்கு வைத்த குற்றச்சாட்டைச் சொன்னால், பேசாமல் எல்லோரும் ம.க.இ.க -வில் சேர்ந்து விடலாம்.//

நீங்க என்னதான் சொல்ல வறீங்க? ஒகனேக்கல் அணுகுமுறை, குடும்ப அரசியல், அழகிரியின் கேபில்/பாமாகாவின் பிரிவு இதெல்லாம் திமுக விற்கு பலவீனம் என சொல்லுகிறேன்.. ஆதிமுக ஆட்சியை பிடிப்பதற்கு வழிவகுக்கும் என சொல்கிறேன். அதை ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா?

மோகன் கந்தசாமி said...

/////கடந்த ஆட்சி நல்ல ஆட்சி என என்காவது சொல்லியிருக்கிறேனா?
(நான் ஆதிமுக விசிறி/திமுக எதிர்ப்பாளன் என நீங்கள் நினைத்தால் தயவு செய்து என் பழைய பதிவுகளை பாருங்கள்)./////
நான் ஒப்பீட்டிற்கு கடந்த ஆட்சியை குறிப்பிட்டேன். கடந்த ஆட்சியைப் பற்றி உங்கள் கருத்தை அறிய பழைய பதிவுகளை பார்க்கிறேன்.

///ஆதிமுகவை விட திமுக நன்றாக செயல்படும் என நம்பியது தவறென்றால்////
நம்பியது தவறல்ல, எதற்குமே திருப்தியுறாத சஸ்பீஷியன் -ஆகவே இருப்பதில் புரயோஜனம் என்ன, எவ்வளவுதான் விமர்சித்தாலும் இதற்கு மேல் நல்லாட்சி தரமுடியாது, மாறாக ஒரு மோசமான ஆட்சியை கொண்டு வந்துவிட துணை புரிந்து விடும்.

///நீங்க என்னதான் சொல்ல வறீங்க? ///
திருப்தியுற முயற்சி செய்யுங்கள், அல்லது "ஹார்ட் கோர்" அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் என்கிறேன். வெறும் விமர்சனம் செய்து பத்தாம் பசளிகளை ஆட்சியில் உட்கார வைத்துவிடாதீர்கள்.

////ஒகனேக்கல் அணுகுமுறை, குடும்ப அரசியல், அழகிரியின் கேபில்/பாமாகாவின் பிரிவு இதெல்லாம் திமுக விற்கு பலவீனம் என சொல்லுகிறேன்////
இதற்குத்தான் சூழலையும் சற்று கருத்தில் கொள்வோம் என்கிறேன்.

////.. ஆதிமுக ஆட்சியை பிடிப்பதற்கு வழிவகுக்கும் என சொல்கிறேன். அதை ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா?////
ஆம். ஆனால் ஆக்கப்பூர்வ விமர்சனமும், ஆட்சியின் நல்ல விசயங்களை பரப்புரையும் செய்வோமானால் பேரழிவைத் தவிர்க்கலாம்.

///மோகன்,
கோவப்படாதீங்க.///
கோபமில்லை, என் எழுத்து ஸ்டைல் அப்படி,

நன்றி.

முகவை மைந்தன் said...

@மோகன்?

உங்களுக்கு ஒரு வாய்ப்பு. ஒத்துக்கிறீங்களா, இல்லையா?

@சஞ்சய்
//...சோடா ப்ளீஸ்.. :P//
அபாரம்.

ம்ம்ம்ம்.. இன்னும் நிறையப் பேர் வாங்கப்பா! சூடு கிளம்புதுல்ல!

மனதின் ஓசை said...

மோகன்,


//எதற்குமே திருப்தியுறாத சஸ்பீஷியன் -ஆகவே இருப்பதில் புரயோஜனம் என்ன, எவ்வளவுதான் விமர்சித்தாலும் இதற்கு மேல் நல்லாட்சி தரமுடியாது, //

இதற்கு மட்டும் உடனடியாக.


நிச்சயமாக இந்த கருத்துடன் நான் உடன்படவில்லை.. இது தங்களின் தீவிர திமுக ஆதரவு போக்கையே காட்டுகிறது. :-(

மனதின் ஓசை said...

முகவை மைந்தா,

வருகைக்கு நன்றி.

உங்களுடைய முதல் பின்னூட்டம் தெளிவாக புரியவில்லை.. எனக்கும் புரியும்படி சொல்லவும் :-)
நன்றி.

மனதின் ஓசை said...
This comment has been removed by the author.
மனதின் ஓசை said...

மண்டபத்துல ரெண்டு பேர் பேசிகிட்டது

உள்ள இருந்து கத்தறத விட வெளிய போய் கத்தட்டும்..யாரும் கண்டுக்க் மாட்டாங்க..தேர்தல் நேரத்துல 2 சீட்டு சேர்த்து கொடுத்தா வந்துடப்போறாங்க.


அப்படியும் இருக்குமோ?

மனதின் ஓசை said...

//எவ்வளவுதான் விமர்சித்தாலும் இதற்கு மேல் நல்லாட்சி தரமுடியாது, மாறாக ஒரு மோசமான ஆட்சியை கொண்டு வந்துவிட துணை புரிந்து விடும்//

//வெறும் விமர்சனம் செய்து பத்தாம் பசளிகளை ஆட்சியில் உட்கார வைத்துவிடாதீர்கள்.
//

மோகன்.

விமர்சனம் கூடாது என நீங்கள் சொல்வது போல் உள்ளது.

அதாவது மோசமான ஆட்சி நடக்குது.. இத விமர்சனம் செஞ்சா இன்னும் மோசமானது வந்துடும்.. வேணாம்..இதான் நீங்க சொல்றதா?

//திருப்தியுற முயற்சி செய்யுங்கள்//
எப்படிங்க திருப்தியுர முடியும்? இவ்வளோதான்னு நொந்துகுங்கன்னு சொல்லுங்க.. அது கொஞ்சம் சரியா படுது.

//அல்லது "ஹார்ட் கோர்" அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள் என்கிறேன். //
அது யாருங்கண்ணா? நாங்க மட்டும் வாக்களிச்சா அவங்க ஆட்சிக்கு வந்துடுவாங்களா? ஓட்டு வங்கின்னு ஒன்னு இருக்கே..அதானே இங்க பிரச்சினையே.


//இதற்குத்தான் சூழலையும் சற்று கருத்தில் கொள்வோம் என்கிறேன்.//

நண்பா இது எனக்கு சப்பைகட்டாகவே தோன்றுக்கிறது. கலைஞரால் இதை விட பல மடங்கு சிறப்பாகசெயல்பட்டு இருக்கமுடியும் என நம்புகிறேன். திறந்த மனதோடு முன்முடிவு இல்லாமல் அனுகினால் இது அனைவருக்கும் புரியும் என நம்புகிறேன்.


//பேரழிவைத் தவிர்க்கலாம்.//
பேரழிவு பெரிய வார்த்தைங்க. இந்த ஆட்சிய அழிவுன்ன்னு ஒத்துகிட்டு ஜெ வந்தா பேரழிவுன்னு சொன்னா நியாயம்.
இதுல திருப்திபட்டுக்குங்கன்னு சொல்லிட்டு ஜே வந்தா பேரழிவுங்கறது சரியா நண்பரே?

மோகன் கந்தசாமி said...

////மக்களாட்சியில் மட்டுமே இவ்வாறு தன்னை காலத்துக்கேற்றவாறு நெறிப் படுத்திக் கொள்ள முடிகிறது////
மிகச்சரி, ஆரோக்கியமானது, குறிப்பாக மத்தியில் மிக்க பயன் தரக்கூடியது.

மோகன் கந்தசாமி said...

////தீவிர திமுக ஆதரவு போக்கையே காட்டுகிறது. :-(////
தி.மு.க. ஆதரவு போக்கு கேவலமானது அல்ல. எனது ஆதரவு நம்பி தி.மு.க -வும் இல்லை.

////விமர்சனம் கூடாது என நீங்கள் சொல்வது போல் உள்ளது./////
உண்மையச்சொல்லுங்க, நான் சொல்வது அப்படியா தோனுது?

////அதாவது மோசமான ஆட்சி நடக்குது.. இத விமர்சனம் செஞ்சா இன்னும் மோசமானது வந்துடும்.. வேணாம்..இதான் நீங்க சொல்றதா?////
மருந்து வேனாங்கிறவன் சின்ன ஜுரம் முத்தியே செத்து போய்டுவான்.

////எப்படிங்க திருப்தியுர முடியும்? இவ்வளோதான்னு நொந்துகுங்கன்னு சொல்லுங்க.. அது கொஞ்சம் சரியா படுது/////
அது சரிதான். இட ஒதுக்கீடு வேணுமா? அப்படியானால் கேபிள் மாபியாவை சற்றே பொறுத்துக்கொள்ளுங்கள், சேது சமுத்திரம் வேணுமா? அப்படியானால் குடும்ப அரசியலை கண்டுகொள்ளாதீர்கள், மாநில சுயாட்சி வேணுமா? அப்படியானால் எல்.டி.டி.இ விசயத்தில் டிப்ளமேட்டிக்காக அணுகுங்கள், வர்ண பேதம் எதிர்காலத்திலாவது ஒழியனுமா? பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வேண்டுமா?, கோயிலில் தமிழ் வேண்டுமா?, ஊழலை "செலேக்டிவாக" விமர்சியுங்கள்.
மொத்தமாக இந்த ஆட்சி அனைத்திலும் பெயில் என்றால் உங்கள் பாஸ் மார்க்கை மற்ற எந்த அரசும் எடுக்காது. வெறுமனே பரட்டை அரசியல் செய்து கொண்டு மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இல்லாவிட்டால் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்ளலாம். வசதியை பொறுத்து.

///அது யாருங்கண்ணா? நாங்க மட்டும் வாக்களிச்சா அவங்க ஆட்சிக்கு வந்துடுவாங்களா? ஓட்டு வங்கின்னு ஒன்னு இருக்கே..அதானே இங்க பிரச்சினையே.///
ஓட்டு வங்கி எப்படி பிரச்சினை ஆகும்?. மக்களாட்சி என்பது என்ன? நம்மிருவர் விருப்பமா அரசு என்பது? ஓட்டு வங்கி கழுதைச் சவாரி கேட்டாலும் குதிரைகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். ஓட்டு வங்கிக்கு அறிவில்லை என்றால் நம் மொட்டைக் குற்றச் சாட்டுகளும், உணர்ச்சி வயப்பட்ட விமர்சனங்களும் அதை மேலும் குழப்பும். கடைசியில் மொத்தமாக குழம்பி கோவேறு கழுதைச் சவாரி கேட்கும். நாமும் தயாராவோமா சவாரிக்கு?

//////இதற்குத்தான் சூழலையும் சற்று கருத்தில் கொள்வோம் என்கிறேன்.//
நண்பா இது எனக்கு சப்பைகட்டாகவே தோன்றுக்கிறது///
அரசனுக்கு இலக்கணத்தை வகுத்த வள்ளுவன் ஒருநாள் முதல்வராக இருந்திருந்தால் அந்த "அதிகாரத்தையே" மறு பரிசீலனை செய்திருப்பான். சூழலைக் கருத்தில் கொள்ளவில்லை என்றால் துக்ளக் தர்பார் தான் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் கடந்த ஆட்சி போல நடத்தலாம். ரெண்டும் ஒண்ணுதான்.

///திறந்த மனதோடு முன்முடிவு இல்லாமல் அனுகினால் இது அனைவருக்கும் புரியும் என நம்புகிறேன்.///
உண்மைதான். முயற்சித்துப் பாருங்கள்.

///பேரழிவு பெரிய வார்த்தைங்க. இந்த ஆட்சிய அழிவுன்ன்னு ஒத்துகிட்டு ஜெ வந்தா பேரழிவுன்னு சொன்னா நியாயம்.
இதுல திருப்திபட்டுக்குங்கன்னு சொல்லிட்டு ஜே வந்தா பேரழிவுங்கறது சரியா நண்பரே?////
சரி அழிவுதான், அதுவும் திருப்தியாகத் தானிருக்கு!

நன்றி நண்பா.

கோவை விஜய் said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com