சமீபத்தில் அருமையான படைப்புக்களோடு தேன்கூடு போட்டி இனிதே நடந்து முடிந்தது..நல்ல படைப்புக்களை எழுத ஊக்குவிப்பதும், அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் இனிமையானவை.
அந்த போட்டியில் வாக்களிக்கும்பொழுது எனக்கு தோன்றிய சில யோசனைகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
யோசனை 1:
ஒருவர் அதிக பட்சம் 3 படைப்புகளுக்கு மட்டுமே வாக்கு அளிக்கலாம்.. தன்னுடைய விருப்ப வரிசையையும் (1,2,3) தெரிவிக்க வேண்டும்..
தேன்கூடு அமைப்பளர்கள் ஒவ்வொருவருடைய முதல் விருப்ப பதிவிற்கு 3 புள்ளிகளும், இரன்டாம் விருப்ப பதிவிற்கு 2 புள்ளிகளும், மூன்றாம் விருப்ப பதிவிற்கு 1 புள்ளிகளும் வழங்க வேண்டும்.
வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 2:
ஒவ்வொரு வாசகருக்கும் மொத்தம் 10 புள்ளிகள் அளிக்கலாம்.. அவர்கள் அதனை அவர்களுடைய விருப்பப்படி எத்தனை படைப்புகளுக்கு வேண்டுமனாலும் பகிர்ந்து அளிக்கலாம்..
வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
யோசனை 3:
ஒவ்வொரு படைப்பிற்கும் வாசகர்கள் 1 முதல் 10 வரையில் புள்ளிகள் அளிக்கலாம்..
வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
-------------------------
மேலும் வாக்களிப்பு முறையை தெளிவாக வாக்கு அளிக்கும் இடத்தில் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும்..
இதை படிக்கும் அனைவரும் (தேன்கூடு அமைப்பளர்கள்/ வாக்களர்கள்/ படைப்பாளிகள்) இதை பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கெட்டுக் கொள்கிறேன்.
பி.கு : எனக்கு பிடித்த வலைதளமான தேன்கூட்டிற்கு எதுவும் சிறு பங்களிப்பு செய்ய முடியுமா என்ற நோக்கில்தான் இந்த பதிவை எழுதினேன்..குற்றமோ, குறையோ சொல்ல அல்ல.. இதை படிக்கும் வாசகர்கள்/தேன்கூடு அமைப்பளர்கள் அதனை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.. யாருக்கும் எதுவும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும்.. உடனே இந்த பதிவு நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசகர்களிடம் இருந்து வந்த யோசனைகள்
1. எழுதுபவரின் பெயரை தெரியப்படுத்தக்கூடாது.
(இதில் சில சிரமங்கள் இருக்கின்றன..
படைப்புக்களை தேன்கூட்டிற்கு நேரடியாக அனுப்பவேண்டும். இதற்காக ஒரு தனி பெயரில் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்பட வேண்டும்)
Wednesday, June 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
எழுதுபவரின் பெயரும் தெரியப்படுத்தக்கூடாது என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
மற்ற எல்லாவற்றையும் விட இது எனக்கு மிக்கியமாக படுகிறது.. நன்றி அனானி..
ஆமா, உங்க பெயர் சொல்லி இருக்கலாமே?
இரண்டாம், மூன்றாம் யோசனைகள் நன்றாக இருக்கிறது
கருத்துக்கு நன்றி KVR.
Update : வாசகர்களிடம் இருந்து வந்த யோசனைகள்
நல்ல யோசனைகள்தான். 'பரிச்சயமானவர்களுக்குதான்' வாக்களிக்கிறார்கள் என்பதை தவிர்க்க முடியும். முதலாம் யோசனை சரியாக இருக்கும் என்பது என் கருத்து.
ஹமீத நல்ல யோசனைகள் சொல்லியிருக்கீங்க:)
நல்ல யோசனைகள்...இதை கால தாமத படுத்தாமல் உடனடியாக அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்....
எப்படிங்க உக்காந்து யோசிப்பீங்களோ :-)
நிலாவின் பதிவில் நான் சொன்ன யோசனை:
நீங்க சொன்னபடி, படைப்பாளியின் பெயரை வெளியிடாமல் இருக்கலாம். ஆனால், இது மாதிரி அதிக எண்ணிக்கையிலான ஆக்கங்கள் வரும் போது, படைப்பாளியின் பெயரும் படைப்பைப் படிக்க ஒரு தூண்டுதல் ஆகாதா? குறைந்த பட்சம், அந்தப் படைப்பின் மிகச் சிறந்த இரண்டு வரி, அது மாதிரி எடுத்துப் போட்டாத்தான் மக்கள் படிக்கவே வருவாங்க..
நிலாவின் பதில்:
அப்படிப்பார்த்தா படைப்பைவிட படைப்பாளியோட பாப்புலாரிட்டிதான் இதில் முக்கியத்துவம் பெறுகிறது, இல்லையா?
இதுல இன்னொரு பிரச்சனை -மிகச் சிறந்த இரண்டு வரியை யார் தேர்ந்தெடுக்கிறது? ஒருத்தருக்கு சிறந்த வரிகளாகப் படறது அடுத்தவங்களுக்கு இல்லாமப் போகலாம்.
என் பதில்:
படைப்பாளியே செய்யணும்னு தாங்க சொல்றேன். நம்ம படைப்பின் சிறந்த வரிகள், நமக்குத் தானே தெரியும்?
இதைத் தனிப் பதிவா போட்டதுக்கு நன்றி மனதின் ஓசை..
இல்லைங்க பொன்ஸ், இந்த இரண்டு வரி மேட்டர் எல்லாம் சரியா வராது. பெயர் போடாமல் இருக்க வேண்டும் என்பது சரியான கருத்தாக படுகின்றது. ஆனால் அது எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை.
ஹமீத் கூறியது போல படிக்கும் வாசகர்க்கள் ஒவ்வொரு பதிவுக்கு மதிப்பெண்கள் அளிக்கலாம்.(படைப்பாளிகளின் பெயர் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும்) அனைத்து பதிவுகளை ஒரு நடுவர் குழு அமைத்து அவர்க்களையும் மதிப்பீடு செய்ய சொல்லாம். இரண்டு மதிப்பெண்களை கூட்டி முடிவுகளை அறிவிக்கலாம்.
பொன்ஸ், நிலாவின் பதிலில் முழுவதும் உடன்படுகிறேன்.. அவர் சொல்வது முற்றிலும் சரி.. நானும் கூட அனைத்து பதிவுகளையும் படிக்கவில்லை...முடியவில்லை என்பதும் ஒரு காரணம்.
அதே சமயத்தில் இதனை நடைமுறை படுத்தும் வழிகளை கொஞ்ஜம் யொசிக்க வேண்டி இருக்கிறது.. உங்களுக்கு ஏதும் ஐடியா இருந்தா
சொல்லுங்க..
//படைப்பாளியே செய்யணும்னு தாங்க சொல்றேன். நம்ம படைப்பின் சிறந்த வரிகள், நமக்குத் தானே தெரியும்?// எனக்கு சரியாகத்தான் தோன்றுகிறது..
வாக்கெடுப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன? எந்த முறை சரியாக இருக்கும்?
வேறு எதுவும் தோன்றினாலும் சொல்லுங்கள்.. முடிவில் தேன்கூட்டிற்கு தெரியப்படுத்துவோம்..
நான் இந்த பதிவிற்கு இன்னும் பல வாசகர்களிடம் இருந்து யோசனைகள் எதிர்பார்த்தேன்.... கொஞ்ஜம் வருத்தமாக இருக்கிறது :-(
//எழுதுபவரின் பெயரை தெரியப்படுத்தக்கூடாது// என்பது நல்ல கருத்தாக தெரிகிறது. இது படைப்பக்களை விருப்பு வெருப்பின்றி படித்து மதிப்பீடு செய்ய பேருதவியாக இருக்கும்.
////படைப்பாளியே செய்யணும்னு தாங்க சொல்றேன். நம்ம படைப்பின் சிறந்த வரிகள், நமக்குத் தானே தெரியும்?//
படைப்பாளிக்களுக்கு சிறந்தாக தெரியும் வரிகள், படிப்பவர்க்களுக்கு சாதாரணமாக தெரியலாம். சாதாரணமாக உள்ள வரிகள், மிக சிறந்த வரிகளாக தெரியலாம். இது படிப்பவர்க்களை கொண்டு மாறுப்படும்.
//இன்னும் பல வாசகர்களிடம் இருந்து யோசனைகள் எதிர்பார்த்தேன்.... கொஞ்ஜம் வருத்தமாக இருக்கிறது //
ஹமீத்! எதையும் எதிர்ப்பார்த்தாலே ஏமாற்றம் தான் மிஞ்சும். நல்ல முயற்சி எடுத்து உள்ளீர்க்கள். வருத்த பட வேண்டாம்.
எல்லா முறையிலும் சில பிளஸ், மைனஸ் இருக்கத்தான் செய்யும். நன் மனம், நான் சிறந்த பதிவாய் நினைத்த சில கதைகளின் பட்டியலை பார்த்தீர்களா? அவைகளில் பல பின்னால் இருந்தன.
மிக அவசரமாய் இதை அடிக்கிறேன். விரைவில் விரிவாய் பதில் அளிக்க முயலுகிறேன்.
//இல்லைங்க பொன்ஸ், இந்த இரண்டு வரி மேட்டர் எல்லாம் சரியா வராது. //
எனக்கு சரியா வரும்னு தோனுது சிவா..
//பெயர் போடாமல் இருக்க வேண்டும் என்பது சரியான கருத்தாக படுகின்றது. ஆனால் அது எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை.//
விவாதங்கள் மூலம் வழி கன்டுபிடிக்கலாம் என தோன்றுகிறது சிவா..இதற்காக ஒரு தனி ப்லாக் தொடங்கலாம்.அனைத்து பதிவுகளையும் அங்கே பதிவுகலாக போடலாம். இதனால் ஒரெ இடத்தில் அனைத்து போட்டி பதிவுகளையும் படிக்கலாம்.. பல அனூகூலங்கள் இருப்பதாக படுகிறது.. உங்கள் பங்குக்கு எதும் யோசனை சொல்லுங்களேன். :-)
//ஹமீத் கூறியது போல படிக்கும் வாசகர்க்கள் ஒவ்வொரு பதிவுக்கு மதிப்பெண்கள் அளிக்கலாம்.(படைப்பாளிகளின் பெயர் தெரியாமல் இருந்தால் நன்றாக இருக்கும்) //
எந்த முறைக்கு உங்கள் ஆதரவு( 1/2/3)?
//அனைத்து பதிவுகளை ஒரு நடுவர் குழு அமைத்து அவர்க்களையும் மதிப்பீடு செய்ய சொல்லாம். இரண்டு மதிப்பெண்களை கூட்டி முடிவுகளை அறிவிக்கலாம்.//
சென்ற போட்டியில் வென்றவர்கள் நடுவராக இருக்க வேண்டும் என சொல்லலாமா? அவர்கள் அளிக்கும் மதிப்பெண்களுக்கு கூடுதல் புள்ளிகள் தரலாமா?
இது சரியா வருமா? அரசியல் கலக்காமல் இருக்குமா?
//படைப்பாளிக்களுக்கு சிறந்தாக தெரியும் வரிகள், படிப்பவர்க்களுக்கு சாதாரணமாக தெரியலாம். சாதாரணமாக உள்ள வரிகள், மிக சிறந்த வரிகளாக தெரியலாம். இது படிப்பவர்க்களை கொண்டு மாறுப்படும்.//
நண்பரே, இது சரியான கருத்துதான்.. அதே சமயம், அதிகமான பதிவுகள் இருக்கும்பொழுது அனைத்தையும் படிப்பது கடினம்.. அத்ற்கு இது உதவும்...விமர்சன படைப்பில் கொடுத்தது மாதிரி.
படைப்பளி எந்த வரிகள் வாசகரை படிக்க தூண்டும் என கருதுகிறாறோ அந்த வரிகளை அளிக்கட்டும்..
//ஹமீத்! எதையும் எதிர்ப்பார்த்தாலே ஏமாற்றம் தான் மிஞ்சும். நல்ல முயற்சி எடுத்து உள்ளீர்க்கள். வருத்த பட வேண்டாம்.//
நன்றி சிவா.. இது போதும் எனக்கு..:-)
பல பேர் அவர்கள் யோசனையை சொன்னால் நன்றாக இருக்குமே..அவற்றில் சிறந்தவைகளை தேன்கூட்டிற்கு அனுப்பலாம்.. அவர்களுக்கு இது உத்வியாக இருக்குமே என்ற ஆதங்கம்தான்..
மதிப்பிற்குறிய உஷா அவர்களே,
என் பதிவில் உங்களின் முதல் பின்னூட்டம்.. மகிழ்ச்சியாக இருக்கிறது..மிக்க நன்றி.. நேரம் கிடைத்தால் இந்த பக்கம் எட்டிப்பார்க்கவும்.
//எல்லா முறையிலும் சில பிளஸ், மைனஸ் இருக்கத்தான் செய்யும்.//
உண்மைதான்... முடிந்தவரை சிறந்ததாக அனைவருக்கும் தோன்றுவதை தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம்தான்.
// நன் மனம், நான் சிறந்த பதிவாய் நினைத்த சில கதைகளின் பட்டியலை பார்த்தீர்களா? அவைகளில் பல பின்னால் இருந்தன.//
நன் மனம்???
எனக்கும் அப்படி தோன்றியது..அதுவும் ஒரு காரணம் இந்த புள்ளிகள் பற்றி நான் யோசித்தற்கு.
//மிக அவசரமாய் இதை அடிக்கிறேன். விரைவில் விரிவாய் பதில் அளிக்க முயலுகிறேன். //
உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் உஷா அவர்களே..
கலை அரசன் அவர்களே..
முதல் முறை வருகிறீர்கள் என நினைக்கிறேன்.. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.. :-)
பெயர் தெரியாமல் போட்டி ஆக்கங்கள் வந்தால் கூட அப்போதும் எனது படைப்பு இதுதான் என ஒரு கதை சுருக்கம் அல்லது முழுதாக நண்பர்களுக்கு தனி மடலில் தந்து அடையாளம் காட்ட மாட்டார்களா? இப்பொழுது கூட படைப்பின் தரம் விட அந்த படைப்பாளியின் நண்பர்கள் பலமே முடிவை நிர்ணையிக்கிறது என சொல்வேன்.ஏனெனில் போட்டிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பமாக இருப்பதுவே.
மொத்தம் 119 வாக்குகள் தான் பதிவாகியுள்ளது.
போட்டியில் கலந்து கொண்ட பதிவுகள் 34 ,இதில் நிலா மட்டும் தான் இரண்டு நுழைவு என நினைக்கிறேன் எனவே 33 பதிவாளர்கள்.
அவர்களின் வாக்குகளை கழித்தால் 86 பேர் தான் உண்மையான வாக்காளர்கள்.
1000 பேருக்கும் மேல் தமிழ் வலைப்பதிவாளர்கள் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இது 8.6 சதவீத வாக்குப்பதிவாகும்.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஒரு பதிவுக்கு 4 வாசகர்களை விட குறைவாக தான் படித்துள்ளார்கள்.
உதாரணமாக அதிகம் அறிமுகம் இல்லாத எனக்கே 11 வாக்குகள் கிடைக்கிறது எனில் அறிமுகம் அதிகம் ஆன பிரபலத்திற்கு 34 நான்கு வாக்குகள் எனில் என்னை போல தோரயமாக 3 மடங்கு எனக்கொண்டால், அது ஒன்றும் பெரிய பிரமாதமான காரியம் அல்லவே.
எனவே இது போன்ற குறைந்த வாக்கு பதிவு உள்ள சூழலில் தெளிவான முடிவு தரத்தின் அடிப்படையில் கிடைப்பது கடினம்.
இதற்கு என்ன வழி? ஒரே வழி அதிக வாக்கு பதிவு ஆக வேண்டும், அதிக வாக்கு பதிவாக அதிகம் பேர் படிக்க வேண்டும் ,எல்லாருக்கும் தெரிய வேண்டும்.
1) வாக்கு பதிவுக்கான கால இடைவெளி ஏன் 20முதல் 25 வரை என 5 நாட்கள் மட்டும் உள்ளது அதிகபடுத்தி 20 முதல் 30 வரை என வைக்கலாமே அல்லது மாதத்தின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரை என வைக்கலாம்.
2) தேன்கூட்டில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் வாக்களிக்க முடியும் என்பதை தெளிவாக எங்கும் கூறவில்லை அதனையும் கூறலாம்.
3) அதிக வாக்களர்கள் வரவைக்க வாக்களிப்போருக்கும் ஒரு லக்கி டிரா போல வைத்து ஒரு 3 பரிசுகள் தரலாம்.அவர்களை வைத்தே அடுத்த போட்டிக்கான தலைப்பு அறிவிக்க சொன்னால் இன்னும் ஆர்வத்துடன் போட்டிக்கு வாக்களிக்க வருவார்கள்.(வாக்களர்களுக்கு லஞ்சம் என இதை சொல்லக் கூடாது :-)) )
4) கூடுதலாக படைப்பளியின் பெயர் மறைத்து வெளியிடலாம்.
இந்த கருத்துகள் எல்லாம் எப்படி இன்னும் போட்டியினை மேம்படுத்தலாம் என விவாதிக்கிரார்கள் என்பதால் தான் சொல்கிறேன் அன்றி இது போட்டியையோ,
படைப்பாளியையோ தரம் தாழ்த்த அல்ல என்பதை கூறிக்கொள்கிறேன்.
ஏனெனில் இப்படி குறைவான வாக்குகள் தான் பதிவாகும் எனில் ஒருவர் கொஞ்சம் "மெனக்கெட்டால்" போதும் வெற்றிக்கான வாக்குகளை வாங்கிவிடலாம்
//படைப்பாளிக்களுக்கு சிறந்தாக தெரியும் வரிகள், படிப்பவர்க்களுக்கு சாதாரணமாக தெரியலாம். சாதாரணமாக உள்ள வரிகள், மிக சிறந்த வரிகளாக தெரியலாம். இது படிப்பவர்க்களை கொண்டு மாறுப்படும்.//
சிவா, ஒரு பத்து, இருபது படைப்பு இருக்கும் போது, அது அத்தனையும் படிச்சு மார்க் போட மக்களுக்கு நேரம் இருக்குமா? நான் கூட எல்லா ஆக்கத்தையும் படிக்கலை.. கடைசி நாட்கள்ல வந்த நாலைந்து பதிவுகள் நான் படிக்க நேரம் இருக்கலை. அதுனால, அந்த மலைப்பைத் தாண்டி, படைப்புக்கு உள்ள போக ஒரு ஆவல் ஏற்படுத்த இந்த இரண்டு வரிகள் உதவும்
உங்க படைப்பை மக்கள் படிக்கணும்னு ஆர்வம் இருந்தா, நீங்க தான் சரியான இரண்டு வார்த்தையைத் தேர்ந்தெடுக்கணும்.. இது ஒரு மாதிரி மார்க்கெட்டிங் ப்ரின்ஸிபிளாத் தான் சொல்றேன்.
உஷா, இது பற்றி உங்க மற்ற கருத்துக்களைத் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன்.
தம்பி,
//முதலாம் யோசனை சரியாக இருக்கும் என்பது என் கருத்து//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தேவ்,
என்ன இப்படி ஒரு வரியில சொல்லிட்டீங்க? நீங்க உங்க பங்குக்கு யோசனை சொல்லுங்க தேவ்.
சியாம்,
//நல்ல யோசனைகள்...//
நன்றி.
//இதை கால தாமத படுத்தாமல் உடனடியாக அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்....//
இன்னும் சிறிது காலம் மற்றவர்களின் எண்ணங்களையும் தெரிந்து கொன்டு அமல் படுத்தும் வழிகளை யொசிப்போம்.
//எப்படிங்க உக்காந்து யோசிப்பீங்களோ :-)//
இதுக்கு பேர்தான் உள்குத்தா? :-)
வருகைக்கு நன்றி வவ்வால்.
//பெயர் தெரியாமல் போட்டி ஆக்கங்கள் வந்தால் கூட அப்போதும் எனது படைப்பு இதுதான் என ஒரு கதை சுருக்கம் அல்லது முழுதாக நண்பர்களுக்கு தனி மடலில் தந்து அடையாளம் காட்ட மாட்டார்களா? //
செய்யலாம்.. வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், நிச்சயமாக செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன்...அப்படி செய்வதும் காலப்போக்கில் தெரிந்து விடும் என நான் கருதுகிறேன். இது பற்றி மற்றவர்கள் கருத்தும் தெரியவேண்டும்.
//இப்பொழுது கூட படைப்பின் தரம் விட அந்த படைப்பாளியின் நண்பர்கள் பலமே முடிவை நிர்ணையிக்கிறது என சொல்வேன்//
படைப்பாளியின் பிரபலம் அவர்களின் படைப்பை படிக்க ஒரு கூடுதல் தூண்டுகோள் என்று தான் நான் நினைக்கிறேன். மற்றபடி தரம் இல்லாத படைப்புக்கு வாக்கு அளிப்பது இல்லை என்றே தோன்றுகிறது.
//உதாரணமாக அதிகம் அறிமுகம் இல்லாத எனக்கே //
இதெல்லாம் ரொம்ப ஓவர்..ஆமாம்.
//எனவே இது போன்ற குறைந்த வாக்கு பதிவு உள்ள சூழலில் தெளிவான முடிவு தரத்தின் அடிப்படையில் கிடைப்பது கடினம்.
இதற்கு என்ன வழி? ஒரே வழி அதிக வாக்கு பதிவு ஆக வேண்டும், அதிக வாக்கு பதிவாக அதிகம் பேர் படிக்க வேண்டும் ,எல்லாருக்கும் தெரிய வேண்டும்.//
முழுதும் உடன்படுகிறேன்.
உங்கள் ஆலோசனைகள் 1,2,4 உடன் நான் ஒத்துப் போகிறேன்.
3-வது : லக்கி டிரா வைக்கலாம்.. ஆனால் அடுத்த போட்டியின் தலைப்பை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு குடுக்க கூடாது என நினைக்கிறேன்.
//இந்த கருத்துகள் எல்லாம் எப்படி இன்னும் போட்டியினை மேம்படுத்தலாம் என விவாதிக்கிரார்கள் என்பதால் தான் சொல்கிறேன் அன்றி இது போட்டியையோ,
படைப்பாளியையோ தரம் தாழ்த்த அல்ல என்பதை கூறிக்கொள்கிறேன்.//
பதிவின் நோக்கமும் அதுவே.
//அந்த மலைப்பைத் தாண்டி, படைப்புக்கு உள்ள போக ஒரு ஆவல் ஏற்படுத்த இந்த இரண்டு வரிகள் உதவும்//
நான் கருதுவதும் அதே..
//உஷா, இது பற்றி உங்க மற்ற கருத்துக்களைத் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன்.//
நாங்க எல்லாரும் கூடத்தான்...
இன்னும் கூடவே மற்றவர்கள் கருத்துக்களையும்.. முக்கியமாக போட்டியில் பங்கு பெற்ற, வெற்றி பெற்றவர்களின்.. ஒரு சிலரை(நிலா, இலவஞ்சி போன்றோறை) இங்கு அழைக்கலாம் என்று இருக்கிறேன்..
மன்னிக்க, மன்னிக்க! உங்களை யாரூ திரும்ப திரும்ப மனசு, நன் மனம், மனதின் ஓசை இப்படி எல்லாம் பெயர் வைத்துக்கொள்ள சொன்னது? உருப்படாதது, பினாத்தல், இலவசகொத்தனார், வெளிகண்டநாதர் இப்படி வைத்தால் நினைவில் வைக்க எவ்வளவு சுலபமாய் இருக்கும்:-) இதில் எண்ணங்கள் என்று வரும் ஆயிரத்தெட்டு பதிவுகள், நுனிப்புல் போன்று அழகாய் வைத்தால் மறக்க முடியுமா??????
நிலா பதிவில் முகமூடி கொடுத்த லிங்கைப் பார்க்கவும். ஆனால் மாதம் ஒரு முறை நடக்கும் போட்டிகளுக்கு பெரிய தலைகளைப் பிடிக்க முடியாது. அதற்கு பதில் பொதுவில் கேட்டு, நடுவராய் இருக்க வருபவர்களை பிடித்து, நடுவராக்கலாம். நீங்க கேட்டீங்க சொல்லிட்டேன். பெயர் சொல்லி வெளிவரும் போட்டி கதைகளில், பிரபலமானவர்கள் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
மனதின்ஓசை,
1. // ஒருவர் அதிக பட்சம் 3 படைப்புகளுக்கு மட்டுமே வாக்கு அளிக்கலாம்.. தன்னுடைய விருப்ப வரிசையையும் (1,2,3) தெரிவிக்க வேண்டும்.. // OK. ஆனால் இது உட்பட மற்ற அனைத்துமே வாக்களிப்பவர்கள் அனைத்து படிப்புகளையும் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வருகிறது. பொதுவான ஒருவர் (அ) ஒரு குழு தேர்வாளராக இருக்கும் பொழுது இது சரியானதாக இருக்கும். படிக்கும் வாசகர்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லும்பொழுது, மீண்டும் நாம் அனைத்தையும் படிக்காமல், படித்ததில் பிடித்த ஆக்கங்களுக்கு மட்டும் வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது. இப்பொழுது இருக்கும் முறையில் மல்டிபிள் ஆப்ஷன் இருப்பதால் அதிக வாசகர்களால் விரும்பப்பட்ட ஆக்கம் பரிசு பெறுகிறது. இது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது.
2. பெயர் வெளியிடாமல் ஆக்கங்களை வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல். ஆனால் சென்றமாத போட்டியில் 34 ஆக்கங்கள் பங்கு பெற்றதற்கு முக்கிய காரணம், அவரவர் வலைப்பதிவில் பதிந்ததும், அதனை வந்து படித்தவர் நிறைகுறைகளை விமர்சித்ததும், அதன் மூலம் ஊக்கம் பெற்றவர்கள் பங்கேற்றதுமே காரணம் என நினைக்கிறேன்! ஏன்... நானே பிறர் ஆக்கங்களின் மூலம் ஊக்கம் பெற்று எழுதியதுதான் என் பதிவு! இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கலைந்துவிட்டால் இம்முறை மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். பெயர் வெளியிடாமல் போட்டிக்கு அனுப்பிய பின்பு மின்னஞ்சல் மூலம் ஆக்கத்தின் பெயரைச்சொல்லி மார்க்கெட்டிங் செய்ய வாய்ப்பிருக்கிறது.ஆனால் இது குறிப்பிடத்தக்க அளவு இருக்காதென்பது என் எண்ணம்.
3. நடைமுறைச் சிக்கல்களை எப்படிக் களையலாம்? இதற்கென தனியாக ஒரு பதிவு ஆரம்பிக்கலாம்! தேதி 1 முதல் 20 வரையிலாக வரும் அனைத்து ஆக்கங்களையும் அங்கே பதிவிடலாம். பின்னுட்ட வசதியிருப்பதால் நிறைகுறைகளை அங்கே வாசகர்கள் வெளிப்படுத்த வழியுண்டு. ஆனால் இதில் படைப்பினை அனுப்பியவர் பின்னூட்டங்களுக்கான கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல வழியில்லை!
4. இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது தேர்ந்தெடுப்போர் வாசகர்கள்! ஆசிரியர் குழு அல்ல! ஒருவர் ஒரு முறைக்கு மேல் ஓட்டளிக்கக்கூடாது என்பதால்தான் மின்னஞ்சல் அடிப்படையில் தேன்கூட்டில் உறுப்பினர் ஆனவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆக்கங்கள் பரவலாகப் படிக்கப்படாமல் ஒரே இடத்தில் இருப்பதன் மூலம் இந்த வாக்கு எண்ணிக்கைகளும் குறைய வாய்ப்புகள் உண்டு. எனவே வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?
5. எல்லாவற்றிக்கும் மேலாக பிரபலங்களுக்கும், நண்பர்களுக்கும் மட்டுமே வாசகர்கள் வாக்களிக்கிறார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையில்லை. கடந்த இரு மாதங்களில் போட்டியில் கலந்துகொண்டவர்களின் பெயர்களைப் பார்த்தாலே இது புலப்படும். பிரபலமானவர்கள் பெயர்கள் அவர்களது பதிவுகளைப் படிக்கத் தூண்டலாம். ஆனால் அது மட்டுமே வாக்குகளாக மாறிவிடாது. பிரபலம் என்பது படிப்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமே தவிர வாக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாது.
அதெப்படி? அதிகம் பேர் படித்தால் அதிகம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு என்றும் கொண்டால் முதல் இரண்டு யோசனைகளைத் தவிர வேறு வழியில்லை.
6. எனது ஆக்கம் எனது பதிவில் எனக்குப் பிடித்த படங்களுடன் என் விருப்ப வடிவமைப்பில் படிக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்! போட்டி என்ற ஒரே காரணத்திற்காக அனைத்து ஆக்கங்களும் ஒரு பதிவில் ஒரே வடிவமைப்பில் படிக்கப்படுவதை தவிர்க்க என்ன செய்யலாம்?
6. வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும் பொழுது இவையெல்லாம் அடிபட்டுப்போக வாய்ப்புகள் இருக்கிறது என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன்!
இவையெல்லாம் என் கருத்துக்கள் மற்றும் கேள்விகள்!
கடைசியாக, இங்கு கிடைத்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தொகுத்து தேன்கூட்டிற்கு அனுப்பி வைக்க மறக்காதீர்! :)
இளவஞ்சி சொன்ன ரெண்டு மூணு விஷயம் ரொம்ப ரொம்பச் சரி.. அப்படியே வழிமொழிவதை எடுத்து எழுதி இருக்கேன்.
//2. பெயர் வெளியிடாமல் ஆக்கங்களை வாக்காளர்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்பதிலும் எனக்கு ஒப்புதல். ஆனால் சென்றமாத போட்டியில் 34 ஆக்கங்கள் பங்கு பெற்றதற்கு முக்கிய காரணம், அவரவர் வலைப்பதிவில் பதிந்ததும், அதனை வந்து படித்தவர் நிறைகுறைகளை விமர்சித்ததும், அதன் மூலம் ஊக்கம் பெற்றவர்கள் பங்கேற்றதுமே காரணம் என நினைக்கிறேன்! ஏன்... நானே பிறர் ஆக்கங்களின் மூலம் ஊக்கம் பெற்று எழுதியதுதான் என் பதிவு!//
- நானும் அதே
//5. பிரபலமானவர்கள் பெயர்கள் அவர்களது பதிவுகளைப் படிக்கத் தூண்டலாம். ஆனால் அது மட்டுமே வாக்குகளாக மாறிவிடாது. பிரபலம் என்பது படிப்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமே தவிர வாக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாது. //
-- Very much True
//6. வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும் பொழுது இவையெல்லாம் அடிபட்டுப்போக வாய்ப்புகள் இருக்கிறது என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன்!
//
-- இதுக்கு என்ன செய்யலாம் என்று நிச்சயம் யோசிக்க வேண்டும்... வவ்வால் சில கருத்துகள் சொல்லி இருக்கிறார். அதில் வாக்காளர்களுக்குப் பரிசு என்னும் திட்டம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது (அப்புறம் நான் உட்கார்ந்து கதை எழுதவே வேணாம்... ஓட்டு போட்டே தட்டிகிட்டு போய்டலாம் :)))
//6. எனது ஆக்கம் எனது பதிவில் எனக்குப் பிடித்த படங்களுடன் என் விருப்ப வடிவமைப்பில் படிக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்! போட்டி என்ற ஒரே காரணத்திற்காக அனைத்து ஆக்கங்களும் ஒரு பதிவில் ஒரே வடிவமைப்பில் படிக்கப்படுவதை தவிர்க்க என்ன செய்யலாம்?//
- போட்டி முடிஞ்ச பின்னாடி எடுத்து உங்க பதிவுல உங்களுக்கு விருப்பமான படத்தோட போட்டுக்கலாமே வாத்தியார்? :)
இளவஞ்ஜி,
உங்கள் கருத்துக்கு பதில் கருத்துக்களை விளக்கமாக சொல்ல நினைத்ததால் நேற்று வேலை பளு காரணமாக சொல்ல இயல வில்லை.
1.//OK. ஆனால் இது உட்பட மற்ற அனைத்துமே வாக்களிப்பவர்கள் அனைத்து படிப்புகளையும் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வருகிறது.//
உண்மை. இதனை தவிர்க இயலாது என தோன்றுகிறது.. நாம் வாசகரை எல்லா படைப்புகளையும் படிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது..படிக்க தூண்டும் வழிகள் எதும் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
//இப்பொழுது இருக்கும் முறையில் மல்டிபிள் ஆப்ஷன் இருப்பதால் அதிக வாசகர்களால் விரும்பப்பட்ட ஆக்கம் பரிசு பெறுகிறது. இது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது//
ஒரு வாசகர் ஒரு சில படைப்புக்களையோ அல்லது அனைத்து பதிவுகளையுமோ படித்து விட்டு வாக்களிக்க எண்ணுகிறார் என வைத்துக் கொள்வோம்.. அவருக்கு ஒரு பதிவு மிக பிடிக்கிறது.. இன்னும் இரண்டு பதிவுகள் பிடிக்கிற்து..அது போக இன்னும் சில பதிவுகளை அவர் பார்வையில் பரிசுக்கு தகுதி இல்லாவிட்டலும் அங்கீகரிக்க வேண்டும் என நினைக்கிறார்... இப்பொதுள்ள முறையில் அவர் என்ன செய்ய முடியும்?
(அ)ஒன்று மிக பிடித்த முதல் பதிவிற்கு மட்டும் வாக்கு அளிக்கலாம்.
(ஆ)அல்லது பிடித்த அனைத்திற்கும் வாக்கு அளிக்கலாம்..
(இ) அல்லது முதல் மூன்று பரிசுக்கு தகுதி உள்ளதாக தோன்றுவதற்கு மட்டும் வாக்களிக்கலாம்.
(இந்த மூன்று வழிகளையும் அனைவரும் ஒரே மாதிரி பின்பற்றினாலும் பரவயில்லை..ஆனால் இப்பொது ஆளாளுக்கு இவற்றில் எதேனும் ஒரு வழியை பின்பற்றுகின்றனர். )
இந்த வழிகளால்
(அ) அங்கிகாரம் பெற வேண்டிய பதிவுகளும், 2-ம், 3-ம் இடத்திற்கு வர வேண்டிய ப்திவுகளும் அதன் வாக்குகளை இழக்கின்றன.
(ஆ) பதிவுகளின் தரத்தின் வித்தியாசம் காணாமல் போய் விடுகிறது. (இது என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாததாய் இருக்கிறது)
(இ) அங்கிகாரம் பெற வேன்டிய பதிவுகள் அதன் வாக்குகளை இழக்கின்றன.
இவற்றை நான் சொன்ன முறைகளில் சரி செய்ய முடியும் என தோன்றுகிறது. உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
2.உங்கள் எண்ணம் எண் 2-உடன் முழுதும் உடன்படுகிறேன்.
3.//ஆனால் இதில் படைப்பினை அனுப்பியவர் பின்னூட்டங்களுக்கான கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல வழியில்லை! //
உண்மை....முக்கியமான பிரச்சினை இது..
4.உடன்படுகிறேன்.
//எனவே வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?//
முக்கியமான கேள்வி.. தற்பொழுது நல்ல பதில்கள் என்னிடம் இல்லை..யொசிக்கிறேன்.
5.// பிரபலம் என்பது படிப்பர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமே தவிர வாக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாது. //
முழுக்க சரி.. இதையேதான் நானும் வவ்வாலிக்கு சொல்லிய பதிலில் கூறினேன்.
6. ஒப்புக்கொள்கிறேன்..
//வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும் பொழுது இவையெல்லாம் அடிபட்டுப்போக வாய்ப்புகள் இருக்கிறது என்பதனையும் குறிப்பிட விரும்புகிறேன்! //
(அ)இதற்கு வவ்வால் சொன்ன லக்கி டிரா நல்ல யோசனையாக படுகிறது.
(ஆ)மேலும் வாக்களிக்கும் அவகாசத்தை அதிகரிக்க வேண்டும்.
எனக்கு போட்டி தலைப்பை 2 மாதங்களுக்க்கு முன் அறிவித்து விடலாம் என தோன்றுகிறது.. இதன் மூலம் படைபாளிகளுக்கு அதிக கால அவகாசம் கிடைக்கும்.. அதாவது ஆகஸ்ட் 30-ம் தேதி கோடுக்கும் தலைப்பு அக்டோபர் 1 முத்ல் 20 தேதிக்குள் அனுப்பவேண்டிய படைப்புக்களின் தலைப்பு. வாக்களிக்கும் காலம் 20 - 30 என அறிவிக்கலாம்.
இன்னும் வேறு வழிகளும் தேட வேண்டும்.
//கடைசியாக, இங்கு கிடைத்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தொகுத்து தேன்கூட்டிற்கு அனுப்பி வைக்க மறக்காதீர்! :) //
நிச்சயமாக.
ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்ததற்கு மிக்க நன்றி இளவஞ்ஜி.
தேன்கூட்டிற்கு அனுப்பிய மடல் :
***************
தேன்கூடு நிர்வாகிகளுக்கு,
தேன்கூடு போட்டி இனிமையாக நடந்து கொண்டு இருக்கிறது..அந்த போட்டியில் வாக்களிக்கும்பொழுது எனக்கு தோன்றியது :
"ஒரு வாசகர் ஒரு சில படைப்புக்களையோ அல்லது அனைத்து பதிவுகளையுமோ படித்து விட்டு வாக்களிக்க எண்ணுகிறார் என வைத்துக் கொள்வோம்.. அவருக்கு ஒரு பதிவு மிக பிடிக்கிறது.. இன்னும் இரண்டு பதிவுகள் பிடிக்கிற்து..அது போக இன்னும் சில பதிவுகளை அவர் பார்வையில் பரிசுக்கு தகுதி இல்லாவிட்டலும் அங்கீகரிக்க வேண்டும் என நினைக்கிறார்... இப்பொதுள்ள முறையில் அவர் என்ன செய்ய முடியும்?
(அ)ஒன்று மிக பிடித்த முதல் பதிவிற்கு மட்டும் வாக்கு அளிக்கலாம்.
(ஆ)அல்லது பிடித்த அனைத்திற்கும் வாக்கு அளிக்கலாம்..
(இ) அல்லது முதல் மூன்று பரிசுக்கு தகுதி உள்ளதாக தோன்றுவதற்கு மட்டும் வாக்களிக்கலாம்.
இந்த மூன்று வழிகளையும் அனைவரும் ஒரே மாதிரி பின்பற்றினாலும் பரவயில்லை..ஆனால் இப்பொது ஆளாளுக்கு இவற்றில் எதேனும் ஒரு வழியை பின்பற்றுகின்றனர்.
இந்த வழிகளால்
1. அங்கிகாரம் பெற வேண்டிய பதிவுகளும், 2-ம், 3-ம் இடத்திற்கு வர வேண்டிய ப்திவுகளும் அதன் வாக்குகளை இழக்கின்றன.
2. பதிவுகளின் தரத்தின் வித்தியாசம் காணாமல் போய் விடுகிறது. (இது என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாததாய் இருக்கிறது)
3. அங்கிகாரம் பெற வேன்டிய பதிவுகள் அதன் வாக்குகளை இழக்கின்றன."
அப்பொழுது எனக்கு தோன்றிய சில யோசனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்கள் கருத்துக்களையும் தெரிந்து கொண்டேன்.. இங்கு பார்க்கவும் : http://manathinoosai.blogspot.com/2006/06/blog-post_28.html
அதன் மூலம் கிடைத்த ஆலோசனைகளை இங்கு தொகுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..
1.ஒருவர் அதிக பட்சம் 3 படைப்புகளுக்கு மட்டுமே வாக்கு அளிக்கலாம்.. தன்னுடைய விருப்ப வரிசையையும் (1,2,3) தெரிவிக்க வேண்டும்..
தேன்கூடு அமைப்பளர்கள் ஒவ்வொருவருடைய முதல் விருப்ப பதிவிற்கு 3 புள்ளிகளும், இரன்டாம் விருப்ப பதிவிற்கு 2 புள்ளிகளும், மூன்றாம் விருப்ப பதிவிற்கு 1 புள்ளிகளும் வழங்க வேண்டும்.
அல்லது
ஒவ்வொரு வாசகருக்கும் மொத்தம் 10 புள்ளிகள் அளிக்கலாம்.. அவர்கள் அதனை அவர்களுடைய விருப்பப்படி எத்தனை படைப்புகளுக்கு வேண்டுமனாலும் பகிர்ந்து அளிக்கலாம்
அல்லது
ஒவ்வொரு படைப்பிற்கும் வாசகர்கள் 1 முதல் 10 வரையில் புள்ளிகள் அளிக்கலாம்..
வாக்கெடுப்பு முடிந்த பின் மொத்ததில் அதிக புள்ளிகளை பிடித்த 3 பதிவுகளை அந்த வரிசைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம்.
2.வாக்களிப்பு முறையை தெளிவாக வாக்கு அளிக்கும் இடத்தில் வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும்..
3.எழுதுபவரின் பெயரும் தெரியப்படுத்தக்கூடாது என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
4.அனைத்து பதிவுகளை ஒரு நடுவர் குழு அமைத்து அவர்க்களையும் மதிப்பீடு செய்ய சொல்லாம். இரண்டு மதிப்பெண்களை கூட்டி முடிவுகளை அறிவிக்கலாம்.
5.அதிக வாக்கு பதிவு ஆக வேண்டும், அதிக வாக்கு பதிவாக அதிகம் பேர் படிக்க வேண்டும் ,எல்லாருக்கும் தெரிய வேண்டும்.
(1) அதிக வாக்களர்கள் வரவைக்க வாக்களிப்போருக்கும் ஒரு லக்கி டிரா போல வைத்து ஒரு 3 பரிசுகள் தரலாம்.
(2)அவர்களை வைத்தே அடுத்த போட்டிக்கான தலைப்பு அறிவிக்க சொன்னால் இன்னும் ஆர்வத்துடன் போட்டிக்கு வாக்களிக்க வருவார்கள்
மேலும் வாக்களிக்கும் அவகாசத்தை அதிகரிக்க வேண்டும்.
(3)போட்டி தலைப்பை 2 மாதங்களுக்க்கு முன் அறிவித்து விடலாம்.. இதன் மூலம் படைபாளிகளுக்கு அதிக கால அவகாசம் கிடைக்கும்.. அதாவது ஆகஸ்ட் 30-ம் தேதி கோடுக்கும் தலைப்பு அக்டோபர் 1 முத்ல் 20 தேதிக்குள் அனுப்பவேண்டிய படைப்புக்களின் தலைப்பு. வாக்களிக்கும் காலம் 20 - 30 என அறிவிக்கலாம்.
இன்னும் வேறு வழிகளும் தேட வேண்டும்.
இவற்றை ஆய்வு செய்து, நடைமுறைக்கு ஒத்துவரும் என தோன்றினால் செயல்படுத்தவும். இன்னும் என்னால் இயன்ற உதவியை செய்ய ஆவலாக உள்ளேன்.இதனை பற்றிய உங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தவும்.. தங்கள் சேவை பல காலம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.மிக்க நன்றி...
***************
Response from Thenkoodu Team :
******************
Dear Mr.Hamid,
Thank you for contacting us.
Our sincere appreciations to you for showing great interest on this contest. Thanks for those constructive feed backs, views and suggestions.
We'll discuss on all the aspects you have mentioned with our team and get back to you soon.
Thanks once again.
Regards,
Thenkoodu Team.
***********
My Reply to them :
*****************
Dear Thenkoodu Suport Team,
Thanks for hearing the voices of the readers and responding back. It feels really good.
I will be very happy if I can make some contributution to your efforts and the service provided by you people to tamil bloggers.I do hope it continues forever.
If time permits, kindly let us know the result of the discussions you are having reg the same.
Also, do let me know in case you need any help from my side.
FYI : I am publishing these emails in my blog for updating others readers.
Thanks & Regards,
Hamid.
*****************
தேன்கூடு - போட்டி நடத்துனாங்களா? அட இது தெரியாமப்போச்சே !!! இப்ப உள்ள நுழைய வாய்ப்பிருக்கா தலைவா?
அன்புடன்
கார்த்திகேயன்
Post a Comment