இந்த வார இறுதியில் பார்த்த செய்திகளில் பாதித்தவை இரண்டு...
1. 5 வயது சிறுவன் 50 மணி நேர போரட்டத்திற்கு பின் தவறி விழுந்து இருந்த குழியில் இருந்து மீட்கப்பட்டான்..ஒரு பிஞ்சு உயிர் காப்பற்றப்பட்டது...மீட்டவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...இது தோல்வியில் முடிந்து விடுமோ என பயந்து கொண்டு இருந்தேன்...(இது போன்ற சில சம்பவங்கள் இதற்கு முன் தோல்வியில் முடிந்து கண்டு மணம் நொந்து இருந்தேன்).
அதே நேரம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? உயிரின் மதிப்பு அது போகும்போதுதான் கவனிக்கப்படுமா? இன்னும் எத்தனையோ பேர் இருந்து கொண்டே சாகிறார்கள்... இருக்கும் பொழுதே கவனிக்கலாமே... "மரணம் மட்டுமா மரணம்" என்ற லிவிங் ஸ்மைல் வித்யா வின் கவிதை நினைவுக்கு வருகிறது..கூடவே ஒரு சில அலுவலகங்கள் இருக்கும்பொழுது தேவைகளை கவனிக்கமல், வேலையை விட்டு போகிறேன் என சொன்னதும் onsite வாய்ப்பு கொடுப்பதும், சம்பளம் அதிகம் ஆக்கி கொடுப்பதும் ஞாபகத்துக்கு வருகிறது..
2. பிரியதர்ஷினி என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்து கொலை செய்யப்படுள்ளார்..அந்த வழக்கில் நீதிபதி இவன்தான் குற்றம் செய்தவன் என தெரிந்தும் சாட்சி சரியாக இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்து இருக்கிறார்கள். கொலை.. கற்பழிப்பு- இரண்டும் எவ்வளவு பெரிய குற்றங்கள்/பாவங்கள்?..இதனை செய்தவன் இப்பொழுது சட்டப்படிப்பு படித்து வருகிறான்.....பாவப்பட்ட அந்தப்பெண்ணின் 70 வயது தந்தை நியாயத்துக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்.
தப்பை சாட்சி இல்லாமல் செய்தால் தவறில்லையா? தண்டனை இல்லையா? இது ஒரு தவறான முன்னுதாரனமாக ஆகிவிடாதா?
கூடவே இவந்தான் தவறு செய்தது என எப்படி நீதிபதிக்கு சாட்சிகள் இல்லாமலும் எப்படி தெரிந்தது?...அப்பட்டமாக 100% தெரிந்தால் அதன் அடிப்படையில் தன்டனை கொடுக்க சட்டம் வழி செய்யுமா? அப்படி செய்தால் அது தவறாக பயன்படுத்தப்படுமே என்ற ஆதங்கமும் எழுகிறது.. என்னதான் இதற்கு தீர்வு?
Monday, July 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
Priyadarshini's father seeks retrial - NDTV.com - News on Priyadarshini's father seeks retrial:
Jul 23, 2006: Nation fights back, remembers Priyadarshini
Jul 19, 2006: Priyadarshini's father seeks retrial
Jul 15, 2006: RTI filed in Mattoo murder case
Timeline from NDTV:
Jul 4, 2006: Mattoo murder: Students to hold protest march
Apr 2, 2006: Mattoo case: Inquiry confirms CBI lapse
Apr 1, 2006: CBI criticized in Mattoo murder probe
Mar 30, 2006: Mattoo case: Family awaits justice
Mar 28, 2006: Priyadarshani case: Teenager seeks justice
Mar 25, 2006: Mattoo murder: CBI seeks urgent hearing
Mar 22, 2006: CBI pledges fresh action in Mattoo case
Mar 22, 2006: Priyadarshini's father seeks justice
Mar 14, 2006: CBI seeks legal option in Priyadarshini case
Mar 5, 2006: Accused in Mattoo case 'becomes' lawyer
Apr 26, 2000: Delhi High Court admits CBI appeal in Priyadarshini Mattoo case
Mar 1, 2000: Mattoo case: CBI files appeal in Delhi High court
Dec 20, 1999: CBI scrutinises documents in Mattoo case
Dec 9, 1999: Mattoo Murder Case
Dec 9, 1999: CBI Under Scrutiny
//மீட்டவர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...//
உங்கள் வாழ்த்துக்களில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
//இது தோல்வியில் முடிந்து விடுமோ என பயந்து கொண்டு இருந்தேன்...(இது போன்ற சில சம்பவங்கள் இதற்கு முன் தோல்வியில் முடிந்து கண்டு மணம் நொந்து இருந்தேன்).//
நானும் பயத்துடன்..அதே மனநிலையில் தான் இருந்தேன்.நல்ல வேளை காப்பாற்றிவிட்டார்கள்.
//இவந்தான் தவறு செய்தது என எப்படி நீதிபதிக்கு சாட்சிகள் இல்லாமலும் எப்படி தெரிந்தது?.//
நீதிதுறை இதற்க்கு ஏதாவாது சாக்குப் போக்கான நியாயங்களை எடுத்துரைப்பார்கள்,
அவ்வளவு ஏன் இங்கும்(வலைப்பதிவில்) கூட அதிகம் படித்த மேதாவிகள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும் யாராவது இதற்க்கும் வக்காளத்து வாங்குவார்கள்.
அன்புடன்...
சரவணன்.
அந்த உயிர் காப்பாற்றப் பட்டு விட்டது என்ற செய்தி கேட்ட போது மனசு சந்தோசப் பட்டது.
சிறுவனுக்கு நடந்த்து விபத்துன்னாலும், அதை தவிர்த்து இருக்கலாம். ஆண்டவன் புண்ணியம் பொழச்சுகிட்டார். இரண்டாவது.... சதி
இப்போல்லாம் கொஞ்சம் டெக்னாலஜி இம்ப்ரூவ்டு அதுனால இந்த மாதிரி இக்கட்டுல அதிகம் பேர் காப்பாத்த படுகிறார்கள்...ஆனால் நீங்கள் சொன்னது போல அந்த மாதிரி சம்பவங்கள் நடக்காம பார்த்துக்கனும்...
நீதிபதி மேட்டர்ல அரசாங்கம் பார்த்து நல்ல யோசனை எடுக்கனும்...
பாலா...சுட்டிகளின் உதவிக்கு மிக்க நன்றி.
//நீதிதுறை இதற்க்கு ஏதாவாது சாக்குப் போக்கான நியாயங்களை எடுத்துரைப்பார்கள்,//
//இரண்டாவது.... சதி//
//நீதிபதி மேட்டர்ல அரசாங்கம் பார்த்து நல்ல யோசனை எடுக்கனும்...//
இந்த தீர்ப்பு தவறான முன்னுதாரனமாக ஆகிவிடுமே?? இதன் பின்
சாட்சிகள் இல்லாமல் தவறு செய்யலாம்..சட்டம் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்து அனைவருக்கும் வந்து விடுமே....இந்த தீர்ப்பை மெற்கோள் காட்டி பின்னாளில் குற்றவாளிகளின் வக்கீல்கள் வாதாடுவார்களே...
//அந்த உயிர் காப்பாற்றப் பட்டு விட்டது என்ற செய்தி கேட்ட போது மனசு சந்தோசப் பட்டது.//
//சிறுவனுக்கு நடந்த்து விபத்துன்னாலும், அதை தவிர்த்து இருக்கலாம். ஆண்டவன் புண்ணியம் பொழச்சுகிட்டார். //
////இப்போல்லாம் கொஞ்சம் டெக்னாலஜி இம்ப்ரூவ்டு அதுனால இந்த மாதிரி இக்கட்டுல அதிகம் பேர் காப்பாத்த படுகிறார்கள்...ஆனால் நீங்கள் சொன்னது போல அந்த மாதிரி சம்பவங்கள் நடக்காம பார்த்துக்கனும்...//
இவ்வாறு அலட்சியங்களால் ஏற்படும் தவறுகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்..அனைவருக்கும் தம் கடமைகள் பற்றிய பொறுப்புணர்ச்சி எற்பட வழிவகை செய்யப்பட வேண்டும்..
இருக்கும்பொழுதே அனைவரின் தேவைகள் கவனிக்கப்பட வேண்டும்...
நல்ல விதயங்கள் ஹமீது!
முதல் விசயத்தில் அந்த சிறுவனை உயிருடன் மீட்கப்பட்டதற்கு இறைவனுக்கும் அந்த பணியில் எடுப்பட்ட அனைவருக்கும் என் நன்றிகள். ஆனால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம். இதனால் எவ்வள்வு மனஊளச்சல், பொருள் விரயம், கால விரயம். அந்த பள்ளத்தை சுற்றி ஒரு தடுப்பு ஏற்படுத்தி இருந்தால் இது அத்தனையும் தடுத்து இருக்கலாம். ஆனால் அதை பற்றி யாரும் பேச காணாம். இது போல சிறு சிறு விசயங்களில் எல்லாம் அஜாக்கிரதையாக இருப்பது கடைசியில் மிக பெரிய ஆபத்தில் தான் கொண்டு போய் முடியும். என்று தான் திருந்த போகின்றார்களோ!
இரண்டாவது நடந்து இருப்பது கொடுமை, வர வர நம்ம நீதித்துறை படு கேவலமாக போய் கொண்டு இருப்பதை காட்டுகின்றது. குற்றவாளி இவன் தான் என்று தெரிந்த பிறகும் அவன் தப்பித்தது நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானம். கண்டிப்பாக இதற்கு காரணம் அரசியல் குறுக்கீடாக தான் இருக்கும்.
I blog hopped from Nagai Siva's blog.
I was happy that the little boy was saved, but I found it quite disturbing when the incident was telecast live (24 hrs) in some tv channels
இந்த இரு பிரச்சினைகளுக்கும் அப்பார்ப்பட்ட ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த NDTV மற்றும் CNN-IBM போன்ற செய்தி நிறுவனங்கள் செய்வது பெரும்பாலும் பப்லிஸிட்டிக்காகவே. சில நாட்களுக்கு முன்பு ஜெசிக்கா லால் கொலை வழக்கை விடாமல் follow-up செய்துக் கொண்டிருந்தார்கள். சென்ற வார இறுதியில் இரு நாட்கள் பிரின்ஸ் செய்தியை உயிருடன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதே போல பிரியதர்ஷினி கொலை வழக்குகள். இவர்களுக்கு தாங்கள் எப்பொழுதும் ஒரு வித பரபரப்பு மற்றும் படபடப்புடனே நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு கேவலமான முன்னுதாரணம்.
//இவன்தான் குற்றம் செய்தவன் என தெரிந்தும் சாட்சி சரியாக இல்லாததால் விடுதலை செய்வதாக //
அப்படியே இவன் வெளில வந்தாலும் மக்கள் இவனை பார்வையாலயே கொல்லனும்.
சட்டம் என்பது கடையில் வாங்கற பொருள் ஆச்சு இப்போ.
இருக்கறவன் காசு கொடுத்து வாங்கறான்
இல்லாதவன் நடுத்தெருவுல நிக்கறான்.
இதுக்கு வக்காளத்து வாங்கினானே அவனை சொ(கொ)ல்லனும்.
என்ன செல்லம், நம்ம பதிலுக்கு பதில் சொல்லுவ சொல்லுவ நானும் தினமு வந்து பாக்குறேன். ஒன்னயும் காணாம்.
தங்கமணி ஊருக்கு போறாங்க. அதுக்கு அப்புறம் பதிவு மேல பதிவா போடுறேன் சவுண்ட்வுட்டுகிட்டு இருந்த என்னாச்சு. தங்கமணி ஸ்டில் தேர்ரா?
//ஆனால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதற்கு என்ன காரணம். இதனால் எவ்வள்வு மனஊளச்சல், பொருள் விரயம், கால விரயம். அந்த பள்ளத்தை சுற்றி ஒரு தடுப்பு ஏற்படுத்தி இருந்தால் இது அத்தனையும் தடுத்து இருக்கலாம். //
அதேதான் சிவா...இன்னமும் எத்தனையோ இடங்கள் இது போல நிச்சயம் இருக்கும்... சரி.பட்ட பிறகாவது திறுந்துவார்களா என்றால் திறுந்துகிர பாட்டை கணோம்..
அவரவர் கடமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என தோன்றுகிறது..எதும் கவுன்சலிங் மாதிரி அரசாங்கம் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது,,
//குற்றவாளி இவன் தான் என்று தெரிந்த பிறகும் அவன் தப்பித்தது நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானம். கண்டிப்பாக இதற்கு காரணம் அரசியல் குறுக்கீடாக தான் இருக்கும்.//
வேதனையான விஷயம்.. இது போன்ற சம்பவங்கள் நீதியின் மேல் இருகும் (கொஞ்ஜ நஞ்ஜ) நம்பிக்கையையும் அழித்து விடும்.
//but I found it quite disturbing when the incident was telecast live (24 hrs) in some tv channels//
ஆமாம் ராஜி...எனக்கும் அந்தக்கவலையும் இருந்தது..எதுவும் தப்பாக நடந்து இருந்தால்?... தன் பையனின் கஷ்டங்களை கண் முன்னே பார்த்தும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அந்தப் பெற்றொரின் மணம் எவ்வளவு துடித்து இருக்கும்.. பார்க்கும் சிலருக்கு பதிப்புகளும் வரலாம்..ஆனால் அதனை பற்றி யார் கவலை படுகிறார்கள்?
//எப்பொழுதும் ஒரு வித பரபரப்பு மற்றும் படபடப்புடனே நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு கேவலமான முன்னுதாரணம்.//
சீனு..உங்களோடு முழுதும் உடன்படுகிறேன்..
//சட்டம் என்பது கடையில் வாங்கற பொருள் ஆச்சு இப்போ.
இருக்கறவன் காசு கொடுத்து வாங்கறான்
இல்லாதவன் நடுத்தெருவுல நிக்கறான்.
இதுக்கு வக்காளத்து வாங்கினானே அவனை சொ(கொ)ல்லனும்.//
தம்பி.."என்னம்மா.. தெவி ஜக்கம்மா.. உலகம் தலைகீழா தொங்குது ஏனம்மா?"ன்னுதான் சொல்ல தோனுது..என்ன உலகமடா இது....
//என்ன செல்லம், நம்ம பதிலுக்கு பதில் சொல்லுவ சொல்லுவ நானும் தினமு வந்து பாக்குறேன். ஒன்னயும் காணாம்.//
சொன்னா மறுபடி வர மாட்ட இல்ல.. அதான்...:-)
சிவா... இந்த பதிவு செய்திய பார்த்த எரிச்சல்ல எழுதினது.. நாலு பேர்கிட்ட சொல்லி புலம்பறதுக்கு...பதில் ஒன்னும் பெரிசா சொல்றதுக்கு இல்ல...அதனால சொல்லல..வேற ஒன்னும் இல்ல...தப்பா எடுத்துக்காத...
//தங்கமணி ஊருக்கு போறாங்க. அதுக்கு அப்புறம் பதிவு மேல பதிவா போடுறேன் சவுண்ட்வுட்டுகிட்டு இருந்த என்னாச்சு. தங்கமணி ஸ்டில் தேர்ரா?//
இல்ல.. போய் விட்டுட்டு வந்து ரெண்டு நாள் ஆகுது :-)..போட்டுடலாம்..
(இதோ பாரு.. இப்படி, அப்ப சொன்னியே... அது இதுன்னு எல்லாம் கேக்கப்பிடாது.. சரியா? இது பரவ இல்ல.. வேற எதும் இந்த மாதிரி(ADMK ல சேர்ந்தப்புரம் வைகோ பேசினத எல்லாம் போட்டு காட்டின மாதிரி) பன்னிபுடாத)
நீ சொன்ன சரி தான்.
சே...சே... உன் மனம் புண்படும்படி நான் ஏதும் கேட்டேனா. அப்ப யாருக்காச்சும் எடுத்து மட்டும் தான் கொடுப்பேன். அவங்க அத சரி புடிச்சிகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது.
:)
//அப்ப யாருக்காச்சும் எடுத்து மட்டும் தான் கொடுப்பேன். அவங்க அத சரி புடிச்சிகிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது.//
நாரதருக்கும் உனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.. அவர் கலகம் நன்மையில் முடியும்னு சொல்லுவாங்க....
//நாரதருக்கும் உனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.. அவர் கலகம் நன்மையில் முடியும்னு சொல்லுவாங்க.... //
ஆமாப்பா, அவரு கலகம் நன்மையில் முடியும், நம்ம இது நன்மையோ நன்மையில் முடியும். இல்ல நட்பில் முடியம் என்ன சொல்லுற
//இல்ல நட்பில் முடியம் என்ன சொல்லுற//
என் வரையில் இது சந்தோஷமான உண்மை..:-)
சரி.. சிவா... நம்ம ஆட்டத்த அடுத்த பதிவுல வச்சிக்கலாம்.. இதுல வேண்டாம்.. (சீரியஸ் பதிவு ..இல்லயா..அதான்)..
OK வா?:-)
இரண்டு விஷயங்களும் - மனதை தொடும் விஷயங்கள்...
மீட்கப்பட்ட சிறுவனுக்கு வாழ்த்து...
தப்பித்த குற்றவாளி - சட்டத்துக்கு அவமரியாதை..
ப்ரியதர்ஷினி வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
reference URL : http://thatstamil.oneindia.in/news/2006/10/31/hc.html
Post a Comment