Thursday, June 22, 2006

6

ஆறு விளையாட்டிற்கு இந்தப் புதியவனை அழைத்த நண்பர் நாகை சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..... பதிவுலகில் எனக்கு பெரும் உதவி செய்த பொன்ஸ் மற்றும் Devக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதோ எனது ஆறு உங்கள் பார்வைக்கு..

மறக்க முடியாதவை 6 :

1. குழந்தையுடன் வெளியில் வந்த செவிலி(நர்ஸ்), கை நீட்டிய யாரிடமும் கொடுக்காமல், என்னிடம் கொடுத்து உங்ககிட்ட தான் முதல்ல கொடுக்க வேண்டும் என்று குழந்தை பிறந்தவுடன் என் மனைவி கூறியதாக சொல்லிய அந்த வார்த்தைகளும், கண்ணீர் + பயத்துடன் வாங்கிய அந்த பிஞ்சு உடம்பின் முதல் ஸ்பரிசமும்..

2. பெண்ணை பார்த்து/பேசி விட்டு வெளியில் வந்ததும், அனைவருக்கும் பிடித்ததால், அடுத்த ஐந்தாவது நிமிடம் நான் கேட்டுக்கொண்ட படி என் தந்தை தொலைபேசியில் பெண்ணிடம் கேட்டு அவர் சொன்ன பதில் " எனக்கு 100% பிடிச்சு இருக்கு".

3. முதல் மாத சம்பளம்.

4. நண்பனுடன், சென்னை நெடுஞ்சாலையில் காற்றை கிழிக்கும் வேகத்தில் எதிர் வரும் லாரி ஓட்டுனரும், தாண்டிக் கொண்டு இருக்கும் பஸ் ஓட்டுனரும் கத்த அவர்களுக்கு நடுவில் ஒவர்டேக் செய்தது...

5. ஒன்பதாம் வகுப்பில், விடுதியில் சேர்ந்த ஒரு வாரத்தில் வீட்டு நினைப்பு வந்து யாருக்கும் தெரியாமல் நண்பன் உதவியுடன் தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து உதை வாங்கியது..

6. இரவு நேரத்தில் ரஜினியை தனியாக பார்த்து ஒரு வார்த்தை பேசியது.

முடியாதவை 6:

1. சனி, ஞாயிறுகளில் எட்டரைக்கு முன் எழுவது + 1 மணிக்கு முன் குளிப்பது

2. படுத்தவுடன் தூங்குவது

3. அணாவசிய செலவுகளை தவிர்ப்பது.

4. எதையும் கடைசி நெரத்திற்கு தள்ளிப் போடாமல் ஆரம்பத்திலேயே செய்வது..

5. முடிந்து போன விஷயங்களில் இப்படி நடந்து இருக்க கூடதா என எண்ணாமல் இருப்பது.

6. பேப்பரில் விளையாட்டு/அரசியல் செய்திகளோடு மற்ற செய்திகளையும் படிப்பது..

தவறுகள் 6 :

1. 40000 ரூபாய்க்கு கிரசன்ட் கல்லூரியில் B.E கிடைத்தும் பணம் கொடுத்து படிக்க மாட்டேன் என்று வீராப்பு பேசியது..

2. கல்லூரி பேருந்தில் நான் சொன்ன ஒரு சாதாரன ஜொக்கிர்கு அசாதாரனமாய் சிரித்த பெண்ணை கவனிக்க ஆரம்பித்து கொஞ்ஜ நாளிலேயே "லவ் பன்றேன் இவளை" என்று பந்தாவுக்காக சொன்னது.

3. நாம் நினைப்பது தான் சரி என்ற எண்ணத்தில் வீட்டில் தந்தையுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போக கிளம்பியது..
4.
5.
6.
இடம் கொஞம் விட்டு வைப்போம், இனி செய்யப் போகும் தவறுகலுக்கு :-)

அடிக்கடி பார்ப்பவை 6 :

1.தேன்கூடு
2.தமிழ்மனம்
3.முத்து(தமிழினி)
4.குழலி
5.பொன்ஸ் பக்கங்கள்
6.நுனிப்புல்

பிடித்த பாடல்கள் 6 :

1.பூவே பூச்சூடவா
2.ஷென்பகமே.. ஷென்பகமே..
3.செந்தாழம்பூவில்..
4.பருவ நிலா.. நணைகிறதே
5.பில்லை நிலா
6.சுராங்கனி

அழைக்கும் ஆறுவர் :
1.இட்லிவடை : தேர்தல் சமயத்தில் செய்திகளை சூடாக பரிமாறியவர்..நகைச்சுவை பதிவுகளையும் அவ்வப்பொழுது நன்றாக கொடுப்பவர். நடுநிலைவாதியாக காட்டிக்கொன்டாலும் ஆ.தி.மு.க மேல் கொஞ்ஜம் பாசம் அதிகம் கொன்டவர் என்பது என் எண்ணம்.

2.துபாய்வாசி : பல நல்ல பதிவுகளுக்கு சொந்தக்காரர்..மனிதாபிமானமும், நகைச்சுவையும் கொண்டவர்...சொர்க்கத்துக்கு போரேன்னு சொல்லிகிட்டு இருக்கிறவர்..

3..லக்கிலுக் : காமிக்ஸ் பிரியர்...கலைஞர் அபிமானி.. ஒரு திராவிட தமிழர்.

4.நன்மனம் : பெயரை போலவே நல்ல உள்ளம் கொண்டவர்.. எனக்கு முதலில் சுரதாவை அறிமுகப்படுத்தியவர்(சரி..சரி..அவர திட்டதீங்க).. என் பதிவில் உள்ள எழுத்துப்பிழைகளை தனிமடலில் அன்பாக சுட்டிக் காட்டிய அன்பர்

5.syam : எதாவது எழுத ஆரம்பிங்க..அப்புரம் பாத்துக்கலாம் என்று என்னை எழுத தூண்டியவர்..சியாம் அன்னச்சி, 6 பதிவயாவது தமிழ்ல பொட்டுடுங்க..தங்கிலீஷ்ல வேணாம்..

6.கைப்புள்ள : நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல...

34 comments:

Unknown said...

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஹமீத்... ஆறோட்டம் நன்றாக உள்ளது.

மனதின் ஓசை said...

வருகைக்கும் வாழ்த்திர்க்கும் மிக்க நன்றி தேவ்.. அடிக்கடி வரவும்..

dondu(#11168674346665545885) said...

குழந்தைக்கு இப்போது வயது எவ்வளவு இருக்கும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மனதின் ஓசை said...

உயர்திரு டோண்டு அய்யா அவர்களே,
என் குழந்தை பிறந்த தேதி 08-03- 2005.அவனுக்கு இப்போது வயது, ஒரு வருடம் 3 மாதங்கள் ஆகிறது..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. நேரம் கிடைத்தால் என்னுடைய மற்ற பதிவுகளையும் பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்.. தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..

நாகை சிவா said...

ஹமீத்!
என் அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக்க நன்றி. நன்றாக உள்ளது. பதிவை வெளியீடுவதற்கு முன்பு ஒரு முறை படித்து பார்த்தால் ஒரு சில எழுத்து பிழைகளை சரி செய்யலாம்.(குறில், நெடில்)

//40000 ரூபாய்க்கு கிரசன்ட் கல்லூரியில் B.E கிடைத்தும் பணம் கொடுத்து படிக்க மாட்டேன் என்று வீராப்பு பேசியது..//
இது எப்படி தவறாகும். எனக்கும் இது நடந்தது. ஆனால் இதை என் தவறாக நினைக்கவில்லை. என் வெற்றியாக தான் நினைக்கிறேன். ஒரு விசயம் செய்வதற்கு முன்பு தான் பலமுறை யோசிக்க வேண்டும். செய்து விட்டால், அதனால் நன்மையோ, தீமையோ வருத்தபடாமல் எதிர்க்கொள்ள வேண்டியது தான்.

//நண்பனுடன், சென்னை நெடுஞ்சாலையில் காற்றை கிழிக்கும் வேகத்தில் எதிர் வரும் லாரி ஓட்டுனரும், தாண்டிக் கொண்டு இருக்கும் பஸ் ஓட்டுனரும் கத்த அவர்களுக்கு நடுவில் ஒவர்டேக் செய்தது...//
Same Pinch. ஆனால் ஒரு முறை அல்ல பலமுறை. தமிழகத்தின் பல இடங்களில், ECR உட்பட......

ரவி said...

ஸ்பெல்செக் செய்யுங்க ஒவ்வொரு முறையும்.....

உங்கள் மறக்க முடியாதவை ஆறு வில் முதல் பாயின்ட் இதுவரை எங்கும் கேள்விப்படாதது...சூப்பர்...

நன்மனம் said...

ஹமீத்.

நான் உங்களுக்கு ஈ-கலப்பை தான் அறிமுக படுத்தியதாக ஞாபகம்.

//(சரி..சரி..அவர திட்டதீங்க)..// கால மட்டும் எடுங்கனு சொல்லாம சொல்றாப்ல இருக்கு:-)

ஆற ஆரம்பிச்ச யாழிசை அழைச்சிருக்காரு ஆனா என்னவோ எழுதற எண்ணம் வரவே இல்ல:-(

மனதின் ஓசை said...

//பதிவை வெளியீடுவதற்கு முன்பு ஒரு முறை படித்து பார்த்தால் ஒரு சில எழுத்து பிழைகளை சரி செய்யலாம்.(குறில், நெடில்)//
னாகை சிவா.,
மன்னிக்கவும்..அடுத்த பதிவில் இருந்து இந்த தவறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன். சுட்டி காட்டியதற்க்கு நன்றி.

////40000 ரூபாய்க்கு கிரசன்ட் கல்லூரியில் B.ஏ கிடைத்தும் பணம் கொடுத்து படிக்க மாட்டேன் என்று வீராப்பு பேசியது..//
இது எப்படி தவறாகும். எனக்கும் இது நடந்தது. ஆனால் இதை என் தவறாக நினைக்கவில்லை. என் வெற்றியாக தான் நினைக்கிறேன். ஒரு விசயம் செய்வதற்கு முன்பு தான் பலமுறை யோசிக்க வேண்டும். செய்து விட்டால், அதனால் நன்மையோ, தீமையோ வருத்தபடாமல் எதிர்க்கொள்ள வேண்டியது தான்.//

நான் இம்ப்ரொவெமென்ட்-க்கு விண்ணப்பித்து விட்டு காத்திருந்த காலத்தில் புதிதாக தொடங்கிய கல்லுரியில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து இடம் கிடைத்தது..ஒரு வருடம் வீணாக போகக் கூடாதே என்று அந்த கல்லுரியில் சேர்ந்தேன். ஆனால் அங்கு சரியான பயிற்றுவிப்போறும், சரியான வசதிகளும் இல்லை..மேலும் ஒழுங்கான எதிர்காலத்தை பற்றிய பார்வையும் இல்லை.. எனக்கே நான் உருப்படுவேன் என்ற எண்ணம் அப்பொது இல்லை..இன்றைய என்னுடைய நல்ல நிலை, இப்பொது நினைத்து பார்த்தாலும் எனக்கே ஆச்சரியமாக தான் இருக்கிறது..சரி.. இது ஒரு கதையாக நீள்கிறது..அன்று நான் அங்கு சேர்ந்து இருந்தால் இன்னும் சீக்கிரம் முன்னுக்கு வந்து இருப்பேன்.. அது தவிர பணம் கொடுத்து படிப்பது என்பது எனக்கு இப்பொழுது தவறாக தெரிய வில்லை.

//Same Pinch. ஆனால் ஒரு முறை அல்ல பலமுறை. தமிழகத்தின் பல இடங்களில், ECR உட்பட...... //
:-) நம்மள மாதிரிதானா? சந்தோஷம்.. இன்னமும் அப்படிதானா? நான் இப்பொதெல்லாம் (கல்யாணத்திற்கு பின்) நினைத்தாலும் போக முடிவது இல்லை..பயம் வருகிறது..

நிறைய முறை இப்படி சென்றாலும் அன்று நாங்கள் பிழைத்தது உண்மையில் அதிசயம்தான்..
அன்று நடந்தது இன்று நினைத்தாலும் உடம்பு நடுங்குகிறது..தாண்டியதும் உடம்பு படபடப்பில் ஆடியது, உடனெ ஓரமாய் நிறுதி விட்டேன்..ஐந்து நிமிடம் நின்று விட்டு நண்பனிடம் ஓட்ட சொல்லி விட்டு மிக பொறுமையாக வந்து செர்ந்தோம்..

மனதின் ஓசை said...

//ஸ்பெல்செக் செய்யுங்க ஒவ்வொரு முறையும்.....//
மன்னிக்கவும்..அடுத்த பதிவில் இருந்து இந்த தவறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன். சுட்டி காட்டியதற்க்கு நன்றி.

//உங்கள் மறக்க முடியாதவை ஆறு வில் முதல் பாயின்ட் இதுவரை எங்கும் கேள்விப்படாதது...சூப்பர்... //
நன்றி.. செந்தழல் ரவி அவர்களே... அடிக்கடி வருகை தரவும்..

மனதின் ஓசை said...

//நான் உங்களுக்கு ஈ-கலப்பை தான் அறிமுக படுத்தியதாக ஞாபகம். //
ஆமாங்க.. நாந்தான் தப்பா போட்டுட்டேன்.. :-) ஆனா ஈகலப்பை இங்க install பன்னவே முடியலீங்க..

////(சரி..சரி..அவர திட்டதீங்க)..// கால மட்டும் எடுங்கனு சொல்லாம சொல்றாப்ல இருக்கு:-)//

ஆஹா.. அவ்வளவு மோசமாவா எழுதறேன்.. :-(

//ஆற ஆரம்பிச்ச யாழிசை அழைச்சிருக்காரு ஆனா என்னவோ எழுதற எண்ணம் வரவே இல்ல:-( //

அப்படியா? நான் கவனிக்கல... ஆமாம் ஏன் தயக்கம்? சும்ம பூந்து விளையடுங்க.. கண்டிப்பா எழுதணும்..இது என் அன்பு வேண்டுகோள்.

நன்மனம் said...

//ஆஹா.. அவ்வளவு மோசமாவா எழுதறேன்.. :-(//

"திட்டாதீங்க" க்கு பதிலா "திட்டதீங்க" னு எழுதி இருக்கீங்க அதனால

//கால மட்டும் எடுங்கனு சொல்லாம சொல்றாப்ல இருக்கு//
:-)

அண்ணாமலை ல "வந்தேண்டா பால்காரன்" பாட்டுல "உனக்கு என்ன வரலாறு" அப்படீன்னு ஒரு வரி வரும் (சரியா) அதபோல ஒன்னும் பெரிசா இல்லீங்க சொல்லறதுக்கு அதான் எழுதல.

மனதின் ஓசை said...

////ஆஹா.. அவ்வளவு மோசமாவா எழுதறேன்.. :-(//

"திட்டாதீங்க" க்கு பதிலா "திட்டதீங்க" னு எழுதி இருக்கீங்க அதனால//

:-( எனக்கு புத்தியே வர மாட்டேங்குது..

இப்ப புரியுதுங்க :-)

//அண்ணாமலை ல "வந்தேண்டா பால்காரன்" பாட்டுல "உனக்கு என்ன வரலாறு" அப்படீன்னு ஒரு வரி வரும் (சரியா) அதபோல ஒன்னும் பெரிசா இல்லீங்க சொல்லறதுக்கு அதான் எழுதல.//
ஆஹா..உண்மை சொன்ன தகராறு வராத மாதிரி பாத்துக்கலாம்.. வந்து ஆடுங்க..

பொன்ஸ்~~Poorna said...

மனதின் ஓசை,
//ஒரு விசயம் செய்வதற்கு முன்பு தான் பலமுறை யோசிக்க வேண்டும். செய்து விட்டால், அதனால் நன்மையோ, தீமையோ வருத்தபடாமல் எதிர்க்கொள்ள வேண்டியது தான்.//

இது தாங்க நம்ம பாலிஸியும்.. முடிஞ்சுபோன மேட்டர்ல, இப்போ வருத்தப் பட்டு, அப்படிச் செய்திருக்கலாம், இப்படிப் பேசி இருக்கலாம்னா, அவ்வளவு தான்.. வாழ்க்கையில் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் :)

உங்க மகன்/ள் பத்தி சொன்னது நிஜமாவே நெகிழ்ச்சியா இருந்தது..

சரி சரி, நாலாவது பதிவுலயே நன்றி சொன்னா எப்படி? ஏதோ ஒரு நூறு பதிவு போட்டுட்டு நன்றின்னு போட்டீங்கன்னா, பார்த்து நானும் பெருமைப் படலாம் :) சீக்கிரம் மேலும் மேலும் பதிவு போட வாழ்த்துகள்

நாகை சிவா said...

//இன்னமும் அப்படிதானா? நான் இப்பொதெல்லாம் (கல்யாணத்திற்கு பின்) நினைத்தாலும் போக முடிவது இல்லை..பயம் வருகிறது..//
போன வருடம் வரை அப்படி தான். வெளிநாடு வந்த பிறகு போன முறை இந்தியா சென்ற போது, சிலசமயம் உள்மனது எச்சரித்தது. அதனால் அந்த அளவு இப்பொழுது பறப்பது இல்லை. நீங்கள் கூறிய அதே மாதிரியான சம்பவம் ஒரு முறை சென்னையில் இருந்து நாகை சென்ற போதும், விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக பாண்டி வரும் போதும் நடந்தது. எல்லாம் ஆண்டவன் கருணை தான், இன்னும் உயிரோடு நடமாடுவது.

மனதின் ஓசை said...

//இது தாங்க நம்ம பாலிஸியும்.. முடிஞ்சுபோன மேட்டர்ல, இப்போ வருத்தப் பட்டு, அப்படிச் செய்திருக்கலாம், இப்படிப் பேசி இருக்கலாம்னா, அவ்வளவு தான்.. வாழ்க்கையில் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் :)//

கரெக்டுதாங்க... ஆனா புத்தி வேற, மனசு வேற இல்லெங்களா? புரிந்தாலும் சில சமயம் தோன்றுவது உண்டு...அததான் நான் //5. முடிந்து போன விஷயங்களில் இப்படி நடந்து இருக்க கூடதா என எண்ணாமல் இருப்பது.// என்று சொன்னேன்.

மனதின் ஓசை said...

//வெளிநாடு வந்த பிறகு போன முறை இந்தியா சென்ற போது, சிலசமயம் உள்மனது எச்சரித்தது. //
நல்லதுதாங்க.

//நீங்கள் கூறிய அதே மாதிரியான சம்பவம் ஒரு முறை சென்னையில் இருந்து நாகை சென்ற போதும், விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் வழியாக பாண்டி வரும் போதும் நடந்தது. //
அதெல்லாம் ஒரு சாகசம் தாங்க..அந்த வயசுல இருக்க வேண்டியதுதான்...

//எல்லாம் ஆண்டவன் கருணை தான், இன்னும் உயிரோடு நடமாடுவது.//

ஆமாங்க.. இருந்தாலும் நாமும் கொஞ்ஜம் ஜாக்கிரதையாக இருக்கலாம்..
இதை எனக்கு யாரும் சொல்லி இருந்தாலும் கேட்டு இருக்க மாட்டேன்...நிறைய விஷயங்கள் அப்படித்தான்..தானாக புரியும்போதுதான் புரியும்..:-)

லக்கிலுக் said...

/////உங்களை ஆறு ஆட்டத்திற்கு அழைத்துள்ளேன்.. வந்து ஆடவும்..:-)

http://manathinoosai.blogspot.com/2006/06/6.html /////

அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன் ஓகேவா.... நான் கொஞ்சம் சோம்பேறி... கொஞ்சம் லேட்டா தான் விளையாடுவேன்... பரவாயில்லையா?

மனதின் ஓசை said...

//அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன் ஓகேவா.... நான் கொஞ்சம் சோம்பேறி... //
ஓ கே.. ஓ கே...நீங்களும் நம்மள மாதிரிதானா?

//கொஞ்சம் லேட்டா தான் விளையாடுவேன்... பரவாயில்லையா? //
தலைவர் பாணியில வரப் போறீங்க போல.. பரவ இல்ல..வாங்க வாங்க..

Syam said...

//எதாவது எழுத ஆரம்பிங்க..அப்புரம் பாத்துக்கலாம் என்று என்னை எழுத தூண்டியவர்..சியாம் அன்னச்சி//

நெஞ்ச தொட்டுடீங்க...தமிழ்ல பதிவு தான போட்டுட்டா போச்சு, பொன்ஸ் அக்கா சொன்ன மாதிரி பின் விளைவுகள் பத்தி கவலை படாம போட்டு தள்ளிடுரேன்....

மறக்க முடியாத 6 ல முதல் பாயிண்ட் நானும் அனுபவிச்சு 2 வாரம் தான் ஆச்சு..

Marutham said...

Arumaiyaana post!
First time here!!
MaraKka Mudiyadhavai- anaiThum arumai.
Mudiyadhaivai'il 3- Idhai Unardhadhey podhum, viraivil Idhu Mudiyum :)

Arumaiyaana ThamiZh blg!! Vaazhthukkal....

கைப்புள்ள said...

//கைப்புள்ள : நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல...//

என்னங்க எல்லாரைப் பத்தியும் சொல்லிட்டு நம்மளை மட்டும் அம்போன்னு டீல்ல விட்டுட்டீங்க. எதாச்சும் சொல்லிருந்தீங்கனா நானும் சந்தோஷப் பட்டிருப்பேன்ல?
:)

ஆறு ஆட்டம் ஆட என்னையும் அழைத்ததற்கு நன்றி ஹமீது. சீக்கிரம் எழுதுகிறேன்.

மனதின் ஓசை said...

//நெஞ்ச தொட்டுடீங்க...தமிழ்ல பதிவு தான போட்டுட்டா போச்சு, பொன்ஸ் அக்கா சொன்ன மாதிரி பின் விளைவுகள் பத்தி கவலை படாம போட்டு தள்ளிடுரேன்....//
:-) வாங்க... வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க..

//மறக்க முடியாத 6 ல முதல் பாயிண்ட் நானும் அனுபவிச்சு 2 வாரம் தான் ஆச்சு.. //
சந்தோஷமான விஷயம்...வாழ்த்துக்கள்.. மனைவி, பையன்/பொண்ணு நல்லா இருக்காங்களா? முடிங்ச அளவு கூடவே இருங்க..நல்லா பாத்துக்குங்க...congrats again..

மனதின் ஓசை said...

//Arumaiyaana post!
First time here!! //
வருகைக்கு மிக்க நன்றி.. இனி அடிக்கடி வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.

//MaraKka Mudiyadhavai- anaiThum arumai.
Mudiyadhaivai'il 3- Idhai Unardhadhey podhum, viraivil Idhu Mudiyum :)//
உணர்ந்து எல்லாம் ரொம்ப நாளாச்சுங்க.. ஆனா ஆவரது ஆகட்டும்கற தெனாவட்டுதான்.. என்ன பண்றது.. இப்ப கொஞ்ஜம் குறைந்து இருக்கு. பாக்கலாம்..

//Arumaiyaana ThamiZh blg!! Vaazhthukkal.... //
:-)நன்றி

மனதின் ஓசை said...

//என்னங்க எல்லாரைப் பத்தியும் சொல்லிட்டு நம்மளை மட்டும் அம்போன்னு டீல்ல விட்டுட்டீங்க. எதாச்சும் சொல்லிருந்தீங்கனா நானும் சந்தோஷப் பட்டிருப்பேன்ல?
:)//

ஆண்டவா.. யார பத்தி யாரு சொல்றது.. ஒரு தகுதி வேணாம்? அதுதான் சொல்லல..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
(ஊருக்கே தெரியாதா உங்கள பத்தி..வாங்கி வாங்கி வீங்கி போணவறுன்னு நான் வேற சொல்லணுமா? :-) )

//ஆறு ஆட்டம் ஆட என்னையும் அழைத்ததற்கு நன்றி ஹமீது. சீக்கிரம் எழுதுகிறேன். //
என் அழைப்பை எற்றுக் கொண்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி..விரைவில் எதிர் பார்க்கிறேன்..

மனதின் ஓசை said...

//இது தாங்க நம்ம பாலிஸியும்.. முடிஞ்சுபோன மேட்டர்ல, இப்போ வருத்தப் பட்டு, அப்படிச் செய்திருக்கலாம், இப்படிப் பேசி இருக்கலாம்னா, அவ்வளவு தான்.. வாழ்க்கையில் யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் :)//

போன் ஸ்.. நேத்து அவசரத்துல முழுசா பதில் சொல்ல முடியல..நீங்க சொல்றது சரிதான்.. செஞ்ச தப்ப நினைத்து வருத்தப்பட்டு அப்படியே உட்கார்ந்து விட்டால் அவ்வளவுதான்.. ஆனா, தப்ப தப்புன்னு இனம் கண்டு கொள்ள வேண்டும் இல்லயா? நான் செஞ்சது தப்புன்னு புரிஞ்சிக்கிறேன்.. அதை நினைத்து வருத்தப்படுவேன் சில சமயம்.. ஆனா அதுக்காக உடைந்து போய் விட மாட்டேன். :-)

//உங்க மகன்/ள் பத்தி சொன்னது நிஜமாவே நெகிழ்ச்சியா இருந்தது.. //
:-)
அதை அனுபவிக்கனும்க.. அப்பதான் முழுசா புரியும்...எனக்குள் நிறைய மாற்றங்களை எற்படுத்திய தருணம் அது...

//சரி சரி, நாலாவது பதிவுலயே நன்றி சொன்னா எப்படி? ஏதோ ஒரு நூறு பதிவு போட்டுட்டு நன்றின்னு போட்டீங்கன்னா, பார்த்து நானும் பெருமைப் படலாம் :) சீக்கிரம் மேலும் மேலும் பதிவு போட வாழ்த்துகள் //

உங்க ஆசிர்வாதம்.

Syam said...

//மனைவி, பையன்/பொண்ணு நல்லா இருக்காங்களா? முடிங்ச அளவு கூடவே இருங்க..நல்லா பாத்துக்குங்//

வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி,மனைவி, பையன்(முகில்) இருவரும் நலம், முடிந்தவரை அவர்களுடன் தான் இருக்கிறேன், 6 எழுத ஆரம்பித்து விட்டேன் விரைவில் வெள்ளித்திரையில்.... :-)
(ஏனுங்க நான் நல்லா இருக்கனானு ஒரு வார்த்த கேக்காம வுட்டுடீங்களே)

Costal Demon said...

நல்லாருக்குங்க...

Syam said...

6 பத்தி போட்டாச்சய்யா போட்டாச்சு...வந்து பாருங்க :-)

மனதின் ஓசை said...

//ஏனுங்க நான் நல்லா இருக்கனானு ஒரு வார்த்த கேக்காம வுட்டுடீங்களே//

என்ன சியாம்..இப்படி கெட்டுட்டீங்க..அவங்கள கேட்டதே நீங்க நல்லா இருக்கணும்னு தானே...அவங்க நல்லா இருந்தாதானே நீங்க நல்லா இருப்பீங்க(பதிலுக்கு சென்டியா போட்டச்சு பாத்தீங்களா?)

மனதின் ஓசை said...

//நல்லாருக்குங்க...//

rams... இங்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி..
அடிக்கடி வரவும்..

மனதின் ஓசை said...

//6 பத்தி போட்டாச்சய்யா போட்டாச்சு...வந்து பாருங்க :-)//

பாத்தாச்சுய்யா பாத்தாச்சு.....

அழைப்பை எற்று பதிவு போட்டதற்கு நன்றி syam..
அந்த "அடிக்கடி பார்ப்பவை" அருமையோ அருமை..

கைப்புள்ள said...

ஹமீது,
என்னோட ஆறு பதிவையும் போட்டாச்சு. இங்கே பாருங்க.

http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html

Unknown said...

நன்றி மனதின் ஓசை

விடுமுறையிலிருந்து இப்போது தான் வந்துள்ளேன். சென்னையிலேயே இப்பதிவைப்பார்த்தாலும், பதிலளிக்க வசதியில்லை. என்னைப்பற்றி எனக்கே தெரியாத்தை எல்லாம் எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

இன்னும் இந்த ஆறு ஆட்டம் ஒத்து வருமா எனத் தெரியவில்லை (மிகவும் தாமதமாகி விட்டதால்!). எனினும் அழைப்புக்கு நன்றி.

மனதின் ஓசை said...

//விடுமுறையிலிருந்து இப்போது தான் வந்துள்ளேன். //
துபாய்வாசி...வாங்க வாங்க.. சொர்க்கம் எப்படி இருந்தது... எதும் சுவராஸ்யமான விஷயம் இருந்தால் (நிச்சயம் இருக்கும்) எழுதவும்..

//இன்னும் இந்த ஆறு ஆட்டம் ஒத்து வருமா எனத் தெரியவில்லை (மிகவும் தாமதமாகி விட்டதால்!). எனினும் அழைப்புக்கு நன்றி.//
அதனால் என்ன.. மூணாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சிடுவோம்.. அடிச்சு ஆடுங்க...கமான்...