Wednesday, June 14, 2006

சூப்பர் ஸ்டாரை பார்த்த போது...

இது எனக்கு எற்பட்ட ஒரு அனுபவம்... இதுக்கெல்லாம் ஒரு பதிவா என்று சன்டைக்கு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.(கொல்கிறேன்??):-)

ஒரு நாங்கைந்து வருடங்கள் முன்பு பொன்னியின் செல்வன் நாடகம் நந்தனத்தில் YMCA மைதானத்தில் நடக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன்... அந்தக்க்கதையை தூக்கம் மறந்து படித்தவன் நான்..எனக்கு பல முறை படித்தும் அலுக்காத கதை அது...படிக்கும் போதே மனத்திரையில் காட்சிகள் ஓடும்.. அப்படிப்பட்ட கதையை, 5 பாகங்கள் கொண்ட நீண்ண்ண்ட கதையை எப்படி நாடகமாக காட்டப் போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் போயே தீருவது என்று முடிவு செய்தேன்.

சோதனையாக அந்த வீக் என்டில் திருப்பதியில் உள்ள ஒரு நண்பனின் வீட்டுக்கு போவது என என் நண்பர்கள் முடிவு எடுத்தார்கள்..சன்டே மதியம் கிளம்பி வந்து விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் நானும் கிளம்பினேன்..ஆனால் அவர்கள் சொன்னபடி செய்ய வில்லை..என் நண்பர்கள் அல்லவா?...நான் மட்டும் கிளம்பி வந்து விட்டேன்..

மாலை 5 அல்லது 6 மனி அளவில் அங்கு போய் செர்ந்தேன்..உள்ளே நுழையும் இடத்தில் நாசர் அவர்கள் நின்று இருந்தார்கள்... பரவாயில்லேயே.. நாசர் போன்ற சினிமா நட்சத்திரம் எல்லாம் வந்து இருக்கங்களே என்ற வியப்புடன் உள்ளே சென்றென்..சற்று நேரத்தில் ரேவதி அவர்களும் வந்தார்கள்.. இன்னும் கொஞ்ஜம் நேரம் கழித்து நான் மிகவும் வியந்து ரசிக்கும் கமல் அவர்கள் வந்தார்கள்...எனக்கு ஒன்றும் புரிய வில்லை.."அப்படி போடு" என்று தோன்றியது..சந்தோசமாக இருந்தது..

இன்னும் கொஞ்ஜ நெரம் சென்ற பின் பயங்கர விசில் சத்தம்.. வேற என்ன.....ஆமாம்..ஆமாம்.. அவரேதான்... தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களும் அங்கு தன் மனைவி மற்றும் இன்னும் ஒருவரோடு( லதாவின் தம்பி ராகவேந்திரா என்று சொன்னார்கள்..உண்மையா என்று தெரியாது) வந்தார்...என் சந்தோசத்தை சொல்லவும் வேண்டுமா?..
ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால் இதுவரை பார்த்தது இல்லை.. பார்க்க செல்ல வேன்டும் என்று தோன்றியதும் இல்லை.. ஆனால் இப்போது பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் பொங்கியது...சிறிது நேரத்தில் நாடகம் தொடங்கியது.. நான் பிறகு அதில் மூழ்கி விட்டேன்..

மிகவும் அருமையாக அந்த நாடகத்தை வழங்கினார்கள்.. நாசர் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த "அதித்த கரிகாலன்" ஆக அருமையாக நடித்தார்கள்..முக்கியமான நிகழ்ச்சிகளை அருமையாக தேர்ந்து எடுத்து மற்றவைகளை இரண்டு கட்டியங்காவலர்கள் மூலம் சொல்லி முழுமை
படுத்தினார்கள்..திருப்தியாக 11.45 மணி அளவில் நாடகம் முடிந்தது... மறுபடியும் தலைவர் ஞாபகம் வந்தது.....

எப்படியாவது பக்கத்தில் பார்த்து விட வேண்டும் என்று வேகமாக கீழே இறங்கிணேன்..ஆனால் யாரையும் வெளியே விடாமல் ரஜினி மற்றும் மற்றவர்களை முதலில் வெளியே அனுமதித்தனர்.. இரண்டு அடி தொலைவில் ரஜினியை பார்த்தேன்..சிறிது நேரம் கழித்து மற்றவர்களை வெளியில் செல்ல அனுமதித்தனர்.. ரஜினியின் கார் பக்கத்திலேயே இருந்தது.. அம்பாஸ்சிடர்.. TMU 6009 என நினைக்கிறேன்... அவர்கள் ஏறிக்கொண்டு கண்ணாடியை எற்றி விட்டுக்கொண்டு கிளம்பினார்கள்..

நான் நம்பரை ஞாபகம் வைத்துக் கொண்டு வேக வேகமாக தூரத்தில் நிறுத்தி இருந்த என்னுடைய பைக்கை எடுக்க ஓடினேன்.. எடுப்பதற்க்குள் நிறைய நேரம் ஆகி விட்டது... சரி.. பரவாயில்லை..அதான் இவ்ளோ பக்கத்தில் பார்த்தோமே என்று நினைத்துக்கொண்டு வண்டியை எடுத்துக் கொன்டு வேகமாக (எப்போதும் போல்) சென்றேன்.. அப்போது சிறிது தூரத்தில் ஒரு அம்பாஸ்சிடர் ரைட் டர்ன் சிக்னல் போட்டுக்கொண்டு நிற்பது தெரிந்தது...

ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னும் வேகமாக வண்டியை முறுக்கிக்கொண்டு சென்றேன்.. பக்கத்தில் நெருங்க நெருங்க அது சூப்பர் ஸ்டார் வண்டி என்பது உறுதியானது..வேகமாக வந்து பக்கத்தில் நிறுத்தினேன்.. அங்கு யாருமே இல்லை...வண்டி நின்ற சத்தம் கேட்டு முன்னே அமர்ந்து இருந்த ரஜினி திரும்பினார்...முகத்தில் ஒரு புன்னகையுடனே திரும்பினார்...இரவு நேரம் ஆதலால் கண்ணாடியை இறக்கி விட்டு இருப்பார் என நினைக்கிறேன்..

எனக்கு எதுவும் புரிய வில்லை.. என்ன பேசுவது என்றே தெரிய வில்லை.. "ஹல்லோ சார்.. எப்படி சார் இருக்கீங்க" என்றேன்..உற்சாகக் குரலில்... அவர் "நல்லா இருக்கேன்" என்றார் சிரித்துக்கொண்டே...எனக்கு வேறு எதுவும் தோன்ற வில்லை..."தேங்ஸ் சார்" என்றென். ஏன் அப்ப்டி சொன்னேன்??..ஒரு வேலை என்னிடம் பேசியதற்கு நன்றி சொல்லி இருப்பேன் என நினைக்கிறேன். அவரும் "சரி வருகிறேன்" என கூறிவிட்டு சென்று விட்டார்..

அது நடந்து ஒரு சில நிமிடத்திற்கு பிறகு தான் எல்லாம் தெளிவாக புரிந்தது... ஆகா.. எதாவது பேசி இருக்கலாமே?ஆட்டோகிராப் வாங்கி இருக்கலாமே..கை குலுக்கி இருக்கலாமே, என்று எத்தனையோ இருக்கலாமே தோன்றியது...என்ன செய்வது.. அவர் பக்கத்தில் இருந்த நேரத்தில் ஒன்றும் தோன்ற வில்லயே...அன்று நான் நொந்து கொண்டேனா இல்லை சந்தொஷப்பட்டேனா என தெரியாமல் ஏதொ ஒரு போதையுடன்(அந்த போதை இல்லீங்க) அறைக்கு வந்து சேர்ந்தேன்....

பி.கு : பதிவு எழுத வேண்டும் என்று ஆரம்பித்த பின் என்ன எழுதுவதென்று தோன்றவில்லை.. அப்போது தான் சூப்பர் ஸ்டாரை நேரில் பார்த்தும் பேசவேண்டும் என்று தோன்றாத இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.. வாழ்க்கை இப்படித்தான்.. நாம் ரொம்ப எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது வார்த்தை வராமல் போய்விடுகிறது .

16 comments:

ஜெ. ராம்கி said...

Interesting! Posted here..

http://rajinifans.blogspot.com

நாமக்கல் சிபி said...

ஆரம்பமே சூப்பர் ஸ்டாரோடயா!

கலக்குங்க!

ரவி said...

நன்றாக எழுதுகிறீர்கள்....தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்...

ப்ரியன் said...

தெய்வத்தை பார்க்கும்போது வரம் கேட்க மறந்து போகும்!

நீங்களாவது பார்த்து பேசிருக்கீங்க! :) நான் சூட்டிங்ல தூரத்துல பார்த்துட்டு 2 நாள் தலைகால் புரியாமே எல்லோரிடமும் சொல்லித் திரிஞ்சேன் :)

Unknown said...

Nice post Hamid,

Thats the magic of Super Star

Anonymous said...

இதே போன்றுதான் சென்ற மார்ச் முதல் வாரத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து கைகுலுக்கி இரண்டு வாக்கியங்கள் மட்டும் பேசி அவர் துபாய் விமானம் ஏறிய பிறகுதான் ஒரு ஆட்டோக்ராபாவது வாங்கியிருக்கலாமே என்று உரைத்தது.
பண்பான மனிதர். கனிவான அவரது வார்த்தைகளை நான் அன்று எதிர்பார்த்திருக்கவே இல்லை.

நல்ல பதிவு நண்பர்.

நன்றி

சிவா

மனதின் ஓசை said...

//Interesting! Posted here..

http://rajinifans.blogspot.com //
Thanks a lot Ramki..

//ஆரம்பமே சூப்பர் ஸ்டாரோடயா!

கலக்குங்க!//

சிபி, மிகவும் நன்றி..
உங்களுக்கு ஒரு மடல் அனுப்பினேன். bounce ஆகி விட்டது.. mailid யை சரி பார்க்கவும்.
//நன்றாக எழுதுகிறீர்கள்....தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்//
மிக்க நன்றி செந்தழல் ரவி அவர்களே..உங்கள் ஆதரவு தொடறும் அளவுக்கு எழுத முயற்சி செய்கிறேன்.

மனதின் ஓசை said...

//தெய்வத்தை பார்க்கும்போது வரம் கேட்க மறந்து போகும்!//
ஆமாங்க... அது தெய்வம் போன அப்புறம்தான் புரியுது..
//நீங்களாவது பார்த்து பேசிருக்கீங்க! :) நான் சூட்டிங்ல தூரத்துல பார்த்துட்டு 2 நாள் தலைகால் புரியாமே எல்லோரிடமும் சொல்லித் திரிஞ்சேன் :) //
அப்போ என்ன சுத்தி இருந்தவங்கள்ள, இத பத்தி தெரியாதவங்களே கிடையாது தெரியுமா? மைக் வச்சி சொல்லத குறைதான்.. ரொம்ப பேருக்கு இதுல எரிச்சல் வேற..

//Nice post Hamid,//

Thanks Dev..

//Thats the magic of Super Star //
true..

மனதின் ஓசை said...

//இதே போன்றுதான் சென்ற மார்ச் முதல் வாரத்தில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து கைகுலுக்கி இரண்டு வாக்கியங்கள் மட்டும் பேசி அவர் துபாய் விமானம் ஏறிய பிறகுதான் ஒரு ஆட்டோக்ராபாவது வாங்கியிருக்கலாமே என்று உரைத்தது.//

கையெல்லாம் குலுக்கினீங்களா? என் காதுல புகை வருதுங்க..


//நல்ல பதிவு நண்பர்.

நன்றி

சிவா //

மிக்க நன்றி சிவா அவர்களே. தொடர்ந்து வருகை தரவும்.

பொன்ஸ்~~Poorna said...

சூப்பர் ஸ்டாரைப் பார்க்கிறதுன்னா சும்மாவா.. நல்லா எழுதி இருக்கீங்க. கலக்குங்க :)

பொன்ஸ்~~Poorna said...

சூப்பர் ஸ்டாரைப் பார்க்கிறதுன்னா சும்மாவா.. நல்லா எழுதி இருக்கீங்க. கலக்குங்க :)

வவ்வால் said...

மனதின் ஓசை,

இதே தான் ரஜினி ராம்கி பதிவில் சஸ்பென்ஸ்ல முடியுதேனு பார்த்தேன்,ம்ம் நல்லா இருக்கு , சூப்பர் ஸ்டாரைப் பார்த்த வளரும் சூப்பர் ஸ்டார் நீங்க!

மனதின் ஓசை said...

//சூப்பர் ஸ்டாரைப் பார்க்கிறதுன்னா சும்மாவா.. //

நெஜமாங்க..அதுவும் இந்த மாதிரி எதிர்பாக்காம பாத்தது இரட்டிப்பு சந்தோஷத்த குடுத்தது...

//நல்லா எழுதி இருக்கீங்க. கலக்குங்க :) //

எல்லாம் உங்க ஆசீர்வாதம்..தொடர்ந்து வருகை தரவும்..

மனதின் ஓசை said...

//இதே தான் ரஜினி ராம்கி பதிவில் சஸ்பென்ஸ்ல முடியுதேனு பார்த்தேன்,ம்ம் நல்லா இருக்கு //

ரொம்ப நன்றி வவ்வால் அவர்களே..

// சூப்பர் ஸ்டாரைப் பார்த்த வளரும் சூப்பர் ஸ்டார் நீங்க!//

ஏற்கனவே வளர்ந்ததே (உயரம் கொஞ்ஜம் அதிகம்..) அதிகம்னு எல்லாரும் திட்டராங்க.. அதனால இது போதுங்க... :-)

Unknown said...

//நாம் ரொம்ப எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது வார்த்தை வராமல் போய்விடுகிறது .//
ரொம்ப சரி. என்ன பெரிய ஆட்டோகிராப்.. தன்னை பக்கத்துல பார்த்தும் ஆட்டோகிராப் கேக்காத வித்தியாசமானவர்னு உங்களை ரஜினி இன்னமும் ஞாபகம் வெச்சிருக்காரோ என்னவோ ;-)

மனதின் ஓசை said...

//ரொம்ப சரி. என்ன பெரிய ஆட்டோகிராப்.. தன்னை பக்கத்துல பார்த்தும் ஆட்டோகிராப் கேக்காத வித்தியாசமானவர்னு உங்களை ரஜினி இன்னமும் ஞாபகம் வெச்சிருக்காரோ என்னவோ ;-)//
இது கூட நல்லா இருக்கே..சூப்பர்ங்க.. :-) நன்றி ரமணி,

நான் நெற்று முதல் உங்கள் மறுமொழி மட்டிருத்தல் வசதியை உபயோகப்படுத்தி வருகிறேன்.. நன்றாக இருப்பது போல் தோன்றுகிறது..:-)