கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து நானும் என் நண்பனும் Bachelor's paradise எனப்படும் திருவல்லிக்கெனியில் ஒரு அறை எடுத்து தங்கி இருந்தோம்..அந்த விடுதியில்(Mansion) இடது பக்கத்தில் வரிசையாக அறைகள் இருக்கும்..வலது பக்கம் மாடி படி ஏறினால் 2 அறைகள் மட்டும் இருக்கும்..குளியல் அறை இணைப்பு கொன்டவை அவை....நாங்கள் அதில் ஒன்றை எடுத்து தங்கி இருந்தோம்.. அங்கே இரண்டு கட்டில்கள் இருக்கும்.. ஒரு கட்டிலுக்கு பின்னால் கதவுடன் கூடிய சிறிய பலகனி(Balcony) இருக்கும்..அந்த கதவை திறந்தால் இரவு நேரங்களில் கும்மிருட்டு தான் புலப்படும்..அந்த கட்டிலைத்தான் நான் உபயோகப்படுத்துவேன்...சிறிது இடைவெளி விட்டு அறைக்கு உள்பக்கதில் என் நண்பனின் கட்டில் இருக்கும்..பலகனிக்கு கீழே ஒரு சிறிய பாதை இருக்கும்...ஒரு பெரிய மரமும் எங்கள் அறைக்கு அருகாமையில் இருக்கும்...எப்போதும் அந்த கதவை திறந்து வைத்துக்கொண்டுதான் உறங்குவோம்.. அப்போது தான் கொஞ்சமாவது காற்று வரும்.வழக்கம் போல ஒரு நாள் தூங்கிக்கொண்டு இருந்தோம்.. அதிகாலை அல்லது நள்ளிரவு 3 மனி இருக்கும்...
அப்போது... திடீர் என்று என் நெஞ்சில் ஏதோ/யாரோ அழுத்துவது போல ஒரு உணர்வு எற்பட்டது.. "ஹா" என்ற கொஞ்சம் பெரிய சத்ததுடன் நான் எழுந்தேன்... அந்த சத்தம் கேட்டு முழித்த/பயந்த என் நண்பன் "அய்யோ அய்யோ" என்று பயங்கரமாக அலற ஆரம்பித்தான்..அதனால் மேலும் அரன்ட நான் அவனுடைய கட்டிலுக்கு தாவி அவன் வாயை பொத்தி "இரு இரு சத்தம் போடாதே" என்றேன் மெல்லமாக பயந்த குரலில்..அவனும் இன்னும் சற்று பயந்த குரலில் "என்ன ஆச்சு ஏன் கத்தின" என்று கேட்டான்..."என் நெஞ்சில் ஏதோ அழுத்தியது பொல இருந்தது" என்றேன்....அவன் அவசரமாக எழுந்து விளக்கை போட்டான்..என்னிடம் "முதலில் அந்த கதவை சாத்து" என்றான். நானும் வேகமாக கதவை சாத்தினேன்..கடிகாரத்தை பார்தோம்.. அது 3 AM என்றது,,, என்ன செய்வது என்று ஒரிரு வினாடிகள் யோசித்தோம்... உடனே அந்த அறையை விட்டு வெளியேருவது என்று முடிவு செய்தோம்...அவசர அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து கீழே இறங்கிச் சென்றோம். என்னுடைய வண்டியை எடுத்துக்கொன்டு மெரீனாவிற்க்கு விரைந்தோம். அங்கு இருந்த சிமென்ட் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தோம்.. விடிந்து வெளிச்சம் வந்த பின் அறைக்கு வருவது என்று முடிவு செய்தோம்..
பிறகு பேச ஆரம்பித்தொம்...அப்பொழுது அவன் நான் அலறிய சத்தம் கெட்டு எதுவோ பலகனியில் வந்து விட்டது என்று நினைத்து பயந்ததாக கூறினான்...எனக்கு என் வீட்டில் சிறு வயதில் ஒரிரவில் தூக்கம் வராமல் போர்வை வழியாக Zero watts பல்பை பார்த்துக்கொன்டு இருந்த பொழுது அறை வாசலில் மூன்று வேறு வேறு நிறத்தில் புடவை உடுத்திய பெண்கள் என்னைப்பார்த்து "வா.. வா.." என்று அழைத்தது... நான் பயந்து போனது,.. கனவா/உண்மையா/பிரமையா என்று தெரியாமல் நீண்ட நாட்கள் குழம்பியது... அதை சுத்தமாக மறந்தது எல்லாம் இப்பொது ஒட்டு மொத்தமாக ஞாபகத்துக்கு வந்தது...இன்னும் பிறர் சொல்லி நாங்கள் சிரித்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து இப்போது பயமுறுத்தப் பார்த்தது ..எப்படியோ காலை 5.30 மணி வரை அங்கே பல்லை கடித்து கொண்டு இருந்து விட்டு பிறகு அறைக்கு சென்றொம்...சென்று மெதுவாக கதவை திறந்து உள்ளே போனோம்..
வேறு ஒரு நண்பனிடம் நடந்தவற்றை கூறி அவனை அன்று துணைக்கு வரச்சொன்னோம்.. அவனும் இரவு வேளைகளில் இரண்டு நாட்கள் வந்தான்.. பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூடவே Gold flake Kings நிறைய வாங்கி வைத்துக்கொண்டு தனியாக உறங்க சென்றோம். புதிதாக நண்பன் வந்ததால் இழுத்து ஒன்றாய் போட்ட என் கட்டிலை இழுத்து தனியாக போட்டோம்.. பிறகு பேசிக்கொன்டே புகை பிடித்தபடியே அறையை நோட்டம் விட்டேன்.. என் பார்வை அடுத்த கட்டிலுக்கு அடியில் சென்றது... அங்கு..........
என் கட்டிலுக்கு மேல் மாட்டி வைத்து இருந்த காலண்டர் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முன்று நாட்களுக்கு முந்திய தேதியுடன் புன்னகையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது ...
பி.கு : இது என் முதல் பதிவு.. வலைப்பதிவு நண்பர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..அடங்குடா என்று சொன்னால் நத்தை போல சுருக்கிக்கொண்டு அவ்வப்பொது தலையை மட்டும் நீட்டி பின்னூட்டம் இடுவதோடு நிறுத்திக் கொள்வேன்.. பரவா இல்லை எழுது என்பீர்களேயனால்...சரி...சரி..நிப்பாட்டிக்கிறேன்....நீங்க இனி பேசுங்க...
இந்த சம்பவம் எனக்கு பொன்ஸ் அவர்களின் இந்த பதிவை படித்த பொழுது ஞாபகத்துக்கு வந்தது.. மெலும் பொன்ஸ் , நாமக்கல் சிபி , Syam அவர்களின் வாழ்த்தும் ஊக்கமும் எழுத தூன்டியது..அவர்களுக்கு என் நன்றிகள்...( குறைந்தது 3 பின்னூட்டமாவது கிடைக்கும்னு நினைக்கிறேன்.. பதில் சொல்லி 6 ஆக்கிடலாம் :-) ......பார்க்கலாம்..
Wednesday, May 31, 2006
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
நல்லாவே இருக்கு தொடர்க நண்பரே... வா.வ.சங்கத்து அக்கா, தளபதி தயவால் இன்னொரு வரவு.
//கூடவே Gold flake Kings நிறைய வாங்கி வைத்துக்கொண்டு தனியாக உறங்க சென்றோம்.//
இவ்வளவு ராஜா இருக்கும் போது எப்படீங்க தனியானு சொல்லரீங்க:-))
வருக வருக... தங்கள் வரவு நல்வரவாகுக.
அந்த "word verification" தூக்கிடுங்களேன்.
நன்றாக எழுதியுள்ளீர்கள்.
படிக்கும்போது போது "பக் பக்" பழைய
நினைவுகள் நினைவிற்கு வந்தது. எழுத்தின் போக்கும்,முடிவும் அருமை.
பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
அன்புடன்,
(துபாய்)ராஜா.
(இந்தurlஐ தமிழ்மணத்தில் ஏற்றினீரா)
//நல்லாவே இருக்கு தொடர்க நண்பரே.//
தேவ்.. ரொம்ப நன்றிங்க...சங்கத்து ஆளுங்களோட ஆதரவு இருந்தா எனக்கு பொதுங்க..ப்லொக் ல முன்னேறிடுவேன்..
சங்கத்து ஆளுங்கல இப்படி கொஞ்ஜ நேரம் அனுப்புங்க தல...
//இவ்வளவு ராஜா இருக்கும் போது எப்படீங்க தனியானு சொல்லரீங்க:-))//
நன்மனம், ராஜா இருந்த தைரியத்துலதாங அன்றைக்கு அறைக்கு உள்ளயே போனோம்.
//வருக வருக... தங்கள் வரவு நல்வரவாகுக.//
மிகவும் நன்றி நன்மனம் அவர்களே..
//அந்த "word verification" தூக்கிடுங்களேன்//
தூக்கியாச்சுங்க...அத பத்தி சரியா தெரியாம பொட்டுட்டேன்..
//நன்றாக எழுதியுள்ளீர்கள்
படிக்கும்போது போது "பக் பக்" பழைய நினைவுகள் நினைவிற்கு வந்தது. எழுத்தின் போக்கும்,முடிவும் அருமை.
பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்..//
மிக்க நன்றி ராஜா.
//(இந்தURLஐ தமிழ்மணத்தில் ஏற்றினீரா)//
இன்னும் இல்லங்க...தமிழ்மனம் நான் அதிகம் பார்த்தது இல்லை.. தேன்கூடு மட்டும்தான்..இனி அதையும் பார்க்கிறேன்..
naalla muyaRchi.
thodarungkaL ungga kathaiai:)
nice story keep it up
என்னங்க இது! இவ்ளோ நல்லா எழுதறீங்க! இன்னும் என்ன தயக்கம்!
டாப் கியர்ல எழுதுங்க!
கீப் இட் அப்!
ஆரம்பமே திகிலா இருக்கு! வாழ்த்துக்கள்.
:-)
மனதின் ஓசை பலருக்கும் பிடிக்கும், சற்றே தொந்தரவு செய்தாலும்.
உம் எழுத்தும் பலராலும் விரும்பப்படும். ஒலிக்கட்டும் உம் மனதின் ஓசைகள்.
எழுத்து நடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள், வீண் சண்டைகளுக்கு போகாதீர்கள் :-)
நல்லா எழுதி இருக்கீங்க ஹமீது.. தனிமடலில் மற்றவை :)
rishi , alif ahamed,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..:-)
//என்னங்க இது! இவ்ளோ நல்லா எழுதறீங்க! இன்னும் என்ன தயக்கம்!
டாப் கியர்ல எழுதுங்க!
கீப் இட் அப்! //
//ஆரம்பமே திகிலா இருக்கு! வாழ்த்துக்கள்.
:-) //
நாமக்கல் சிபி,
நீங்க எல்லாம் சொல்றத பர்த்தால் நெஜமாவே படிக்கிற மாதிரி தான் எழுதி இருக்கேன் போல இருக்கு.. சந்தோசமா இருக்குங்க..ரொம்ப நன்றி.
//மனதின் ஓசை பலருக்கும் பிடிக்கும், சற்றே தொந்தரவு செய்தாலும். //
முடிந்த வரை தொந்தரவு செய்யாதவைகளை மட்டும் ஒலிக்க விடுகிறேன்... முடிவு உங்கள் கையில். ...:-)
//உம் எழுத்தும் பலராலும் விரும்பப்படும். ஒலிக்கட்டும் உம் மனதின் ஓசைகள்.//
மிக்க நன்றி Krishna.
//எழுத்து நடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள், வீண் சண்டைகளுக்கு போகாதீர்கள் :-) //
அழைப்பை ஏற்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி தேசிகன் அவர்களே....உங்கள் ஆலோசனையை மனதில் எப்பொதும் ஞாபகம் வைத்துக் கொள்வேன்...
அப்புறம் என்ன பண்ணினீங்க?
சரியாத் தேதியைக் கிழிச்சு, கலண்டரை எடுத்து திரும்பவும் பழைய இடத்துலேயே மாட்டினீங்களா!!?:))
அடுத்த பதிவுல,
நீங்க அந்தக் குறிப்பிட்ட தேதியை வச்சு ரிஸர்ச் பண்ணி,
சரியா 6 வருஷத்துக்கு முன்னாலே,
அதே ரூமுல ஒரு பொண்ணு கொலை செய்யப்பட்டு,
ஆவியா, கரெக்டா அந்தத் தேதியில மட்டும், 3 மணிக்கு வர்ராங்கன்னு கண்டுபுடிச்சேன்னு எழுதுங்க!
அப்பத்தான், சிலபேர், நல்லா எழுதினீங்க; சொதப்பலைன்னு சர்டிfஇகேட் கொடுப்பாங்க!!
))))
வாழ்த்துகள்!!
நண்பர் நன்மனமும் தேவும் எழுத்துப்பிழைகளை தனி மடலில் அன்பாக சுட்டிக்காட்டினார்கள்..முடிந்தவரை சரி செய்து இருக்கிறேன்..
இந்தப் பதிவில் இருக்கும் மற்ற குறைகளை சுட்டிக் காட்டினால் மேலும் வளர்வதற்கு உதவியாக இருக்கும்..இந்த பதிவை படித்த அனைவருக்கும் என் நன்றி...
வாங்க SK,
//அப்புறம் என்ன பண்ணினீங்க?
சரியாத் தேதியைக் கிழிச்சு, கலண்டரை எடுத்து திரும்பவும் பழைய இடத்துலேயே மாட்டினீங்களா!!?:))
//
சரியா சொன்னீங்க..
//அடுத்த பதிவுல,
நீங்க அந்தக் குறிப்பிட்ட தேதியை வச்சு ரிஸர்ச் பண்ணி,
சரியா 6 வருஷத்துக்கு முன்னாலே,
அதே ரூமுல ஒரு பொண்ணு கொலை செய்யப்பட்டு,
ஆவியா, கரெக்டா அந்தத் தேதியில மட்டும், 3 மணிக்கு வர்ராங்கன்னு கண்டுபுடிச்சேன்னு எழுதுங்க!
அப்பத்தான், சிலபேர், நல்லா எழுதினீங்க; சொதப்பலைன்னு சர்டிfஇகேட் கொடுப்பாங்க!!
))))//
எங்க கோவமா இருக்கீங்களா?
//வாழ்த்துகள்!!//
வாழ்த்துகளுக்கு நன்றி SK.
ஹமீது, நான் கூட ஒரு கமென்டு போட்டேனே, நல்லா இருக்குன்னு சொல்லி, அது எங்க?!!
எஸ்.கே, வேணாம்.. இப்பத் தான் ஒருத்தர் வந்து இவருக்கு வீண் சண்டைகளில் சிக்கிக் கொள்ளாதீர்னு சொல்லி இருக்காரு.. நம்ம டீலிங்க்ஸை எல்லாம் முதல் பதிவர் கிட்ட வச்சிக்கிடறது அத்தனை நல்லா இல்லை சொல்லிட்டேன் :)
//ஹமீது, நான் கூட ஒரு கமென்டு போட்டேனே, நல்லா இருக்குன்னு சொல்லி, அது எங்க?!!//
கொஞ்சம் மேல பாருங்க ..இருக்குது.. ( இப்பத்தான் publish பண்ணினேன்..:-) )
வாழ்த்துக்கு நன்றி பொன்ஸ்
//எஸ்.கே, வேணாம்.. இப்பத் தான் ஒருத்தர் வந்து இவருக்கு வீண் சண்டைகளில் சிக்கிக் கொள்ளாதீர்னு சொல்லி இருக்காரு.. நம்ம டீலிங்க்ஸை எல்லாம் முதல் பதிவர் கிட்ட வச்சிக்கிடறது அத்தனை நல்லா இல்லை சொல்லிட்டேன் :) //
பொன்ஸ் இருக்க பயமேன்..
//...( குறைந்தது 3 பின்னூட்டமாவது கிடைக்கும்னு நினைக்கிறேன்.. பதில் சொல்லி 6 ஆக்கிடலாம் :-) ......பார்க்கலாம்.. //
3 to 6 எதிர்ப்பார்த்தீர்கள். என்னுடன் 22 ஆச்சு பாத்தீங்களா.
தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்.
//3 டொ 6 எதிர்ப்பார்த்தீர்கள். என்னுடன் 22 ஆச்சு பாத்தீங்களா. //
:-)
//தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்.//
நன்றி நாகை சிவா அவர்களே,
பதிவ எப்படி இருக்கு? அத பத்தி ஒன்னும் சொல்லலயே..
நல்லா எழுதி இருக்கீங்க ....
நல்லாருக்கு
+
செந்தழல் ரவி மற்றும் பிரபுராஜா அவர்களே..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
அப்புறம் என்ன ஆச்சுங்க :) அதே அறைதான் கடைசிவரைக்கும் இருந்தீங்களா?
தொடக்க பதிவே அருமை...வாழ்த்துக்கள்
//அப்புறம் என்ன ஆச்சுங்க :) அதே அறைதான் கடைசிவரைக்கும் இருந்தீங்களா?//
கொஞ்ஜ நாள் அங்கதாங்க இருந்தோம்.அப்புறம் நண்பர்கள் அதிகம் பேர் சென்னை வந்ததால் வீடு K.K நகரில் எடுத்து சில மாதம் தங்கினோம். அப்புரம் தி.நகர், ராயபேட்டா என வாழ்க்கை ஓடியது.
//தொடக்க பதிவே அருமை...வாழ்த்துக்கள்//
உஙள் ஆதரவிர்க்கும் வாழ்த்திர்க்கும் நன்றி.
Keep on posting. The post is good. Good Luck.
Anony, Thanks for your wishes..
kadasiyil enna than aachu
/kadasiyil enna than aachu//
கார்த்தி,
ஒன்னுமே ஆகலங்க..
கடைசி பத்திய படிங்க புரியும் :-)
சரியா?
(தமிழ்ல எழுதலாமே...முயற்சி பண்ணி பாருங்க..
try this : http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm)
Post a Comment