Thursday, August 03, 2006

பெப்ஸி கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து..

பெப்ஸி கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து இருக்கிறது என விஞ்ஞானம், சுற்றுச்சூழல் கழகம் ஆய்வு நடத்தி தெரிவித்து உள்ளது...

http://thatstamil.oneindia.in/news/2006/08/03/pepsi.html
http://www.ibnlive.com/news/pesticide-cola-poison-content-is-now-deadlier/17411-3.html

கொசுறு : அமரிக்கவில் பெப்ஸி கோக் சாம்பில்ஸை ஆய்வு செய்த பொழுது அதில் இந்த நச்சுப்பொருட்கள் எதுவும் இல்லை- நேற்றைய CNNIBN-ல் விவாதத்தில் சொன்ன செய்தி.


பெப்ஸி கோக் குடிக்கலாமா கூடாதா?

44 comments:

நாகை சிவா said...

யம்பா, பூச்சி மருந்து இருந்தா நல்லது தானே
வயிற்றில் இருக்கும் பூச்சி எல்லாம் செத்து போயிட்டும். என்ன நான் சொல்லுறது
:)

மனதின் ஓசை said...

//யம்பா, பூச்சி மருந்து இருந்தா நல்லது தானே
வயிற்றில் இருக்கும் பூச்சி எல்லாம் செத்து போயிட்டும். என்ன நான் சொல்லுறது//

ஆஹாஆஆ... இப்படி வேறயா?

சரி சிவா.. நேரா பூச்சி மருந்தையே வாங்கி குடிச்சிடலாம் இல்ல? எதுக்கு அத கலந்து எல்லாம் குடிச்சிகிட்டு? வாங்கி அனுப்பட்டுமா?

உங்கள் நண்பன்(சரா) said...

நாகை சிவா said...
//யம்பா, பூச்சி மருந்து இருந்தா நல்லது தானே
வயிற்றில் இருக்கும் பூச்சி எல்லாம் செத்து போயிட்டும். என்ன நான் சொல்லுறது:)//

நாகையாரே என்னையவும் யோசிக்க வச்சிட்டீங்க...

//எதுக்கு அத கலந்து எல்லாம் குடிச்சிகிட்டு? வாங்கி அனுப்பட்டுமா? //

ஒருத்தரக் காலி பன்னுரதுக்கு இவ்வளவு அவசரமா...?


அன்புடன்...
சரவணன்.

கதிர் said...

இந்த பெப்சி கோக் வந்ததுக்கப்புறம்
நன்னாரி சர்பதை எல்லாரும் மறந்துட்டாங்கபா...

உச்சி வெய்யில்ல அலைஞ்சி திரிஞ்சி வர்றப்போ ஜில்லுனு ஒர் நன்னாரிய உள்ள விட்டோம்னா எப்டி இருக்கும் தெரியுமா?

இப்போ எல்லாம் ஊர் திருவிழால மட்டும்தான் திடீர் சர்பத் கடை போடறான்.

(அட யாருபா அது நன்னாரிப்பயலே னு திட்டுறது)

மனதின் ஓசை said...

//நாகையாரே என்னையவும் யோசிக்க வச்சிட்டீங்க...//

நல்லாவே ரொசிக்கிறீறு..உங்களுக்கும் அனுப்பிட வேண்டியதுதான். சரியா?

//ஒருத்தரக் காலி பன்னுரதுக்கு இவ்வளவு அவசரமா...?//
பப்ளிக்கா இப்படி சொல்லிபுட்டு தனி மடல்ல சீக்கிரம், சிவாக்கு மனசு மாறறதுக்குள்ள வாங்கி அனுப்பிடுன்னு சொல்றது என்ன மாதிரி கயமைத்தனம்??இதுக்கெல்லாம் கேட்பார் யாரும் இல்லயா?

மனதின் ஓசை said...

//இந்த பெப்சி கோக் வந்ததுக்கப்புறம்
நன்னாரி சர்பதை எல்லாரும் மறந்துட்டாங்கபா...

உச்சி வெய்யில்ல அலைஞ்சி திரிஞ்சி வர்றப்போ ஜில்லுனு ஒர் நன்னாரிய உள்ள விட்டோம்னா எப்டி இருக்கும் தெரியுமா?

இப்போ எல்லாம் ஊர் திருவிழால மட்டும்தான் திடீர் சர்பத் கடை போடறான்.//

தம்பி....அதையேன் ஞாபகப்படுத்தறீங்க? எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்த கடையில அக்கவுன்ட்டே வச்சி இருந்தேன்..எனக்கு மட்டும் பாதி விலை..

அலஞ்சி திரியறது..வீட்டுல திட்டுவாங்கன்னு தெரின்ச்சும் வெயில்ல போய் கிரிக்கெட் விலயாடறது... கூட்டமா சேர்ந்து உப்பாரி/ஜோடி புறா.. etc etc.. விளையாடறது... அது எல்லாம் ஒரு காலம்...

இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள் இப்பொழுது இருக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா?


//(அட யாருபா அது நன்னாரிப்பயலே னு திட்டுறது) //

நாங்க இல்லீங்கோ.

ALIF AHAMED said...

அப்பப்பா என்னா வெயிலு அண்ணே ஜில்லுனு ஒரு பெப்சி குடுங்க :))

மனதின் ஓசை said...

//அப்பப்பா என்னா வெயிலு அண்ணே ஜில்லுனு ஒரு பெப்சி குடுங்க :)) //

வாய்யா மின்னலு..வா வா வா வா... வராதவுக எல்லாம் வந்து இருக்கீக..உங்களுக்கு இல்லாமயா..ஒன்னு என்ன ஒன்னு.. எத்தன வெணும்னாலும் குடி...இந்தா புடி...

ALIF AHAMED said...

//
எத்தன வெணும்னாலும் குடி...இந்தா புடி...
//


ஒருத்தரக் காலி பன்னுரதுக்கு இவ்வளவு அவசரமா...?

என் காசில எனக்கே பூச்சி மருந்தா?

சொந்த செலவில் சூனியமா ??

சந்திப்பு said...

கோக் - பெப்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்ட அலைகள் எழாமல் இது மாறப்போவதில்லை. இருக்கவே இருக்கிறது நம் கிரிக்கெட் இரண்டு ஒன்டே மேட்ச்சை பான்சர் பண்ணினால் போதும் நம்மவர்களுக்கு. உடனே கோக் பக்கம் போய்விடுவார்கள். கோக் - பெப்சி போன்ற அந்நிய குளிர்பானங்களுக்கு எதிரான பெரும் போராட்டத்தை நடத்திட வேண்டிய சரியான தருணம் இதுவே.

Unknown said...

என்ன தான் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், நம்ம ஆளுங்களுக்கு புத்தி வரப்போவதில்லை.

குடிக்கக்கூடாது என்பது எல்லாருக்குமே தெரியும், தெரிந்தும் குடிப்பவர்கள் தான் அதிகம்.

இளநீர் குடிங்கப்பா, அதான் பெஸ்ட் கண்ணா பெஸ்ட்!

யாத்ரீகன் said...

பூச்சி மருந்தை விடுங்க... நம்ம நிலத்தடி நீரை உறிஞ்சி.. நம்ம கிட்டயே.. அநியாய இலாபத்துக்கு விற்கும் இந்த முறை சரிதானா ? பெப்சி கோக் நிறுவன எந்த ஒரு பொருளையும் தவிர்ப்பது பெரிய விஷயமில்லை.. தயவு செய்து தவிர்த்திடுங்கள்..

அசுரன் said...

நல்ல கட்டுரை,

இதே விசயத்தை பற்றிய எனது கட்டுரையை படித்து கருத்து சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html

நன்றி,
அசுரன்.

கதிர் said...

//அலஞ்சி திரியறது..வீட்டுல திட்டுவாங்கன்னு தெரின்ச்சும் வெயில்ல போய் கிரிக்கெட் விலயாடறது... கூட்டமா சேர்ந்து உப்பாரி/ஜோடி புறா.. etc etc.. விளையாடறது... அது எல்லாம் ஒரு காலம்... //

அது என்னங்க அது ஜோடிப்புறா?
ஜோடியா எஸ்கேப் ஆவறதா? பேரை பாத்தா நல்ல விளாட்டா இருக்குற மாதிரி தெரியுது...

மனதின் ஓசை said...

//ஒருத்தரக் காலி பன்னுரதுக்கு இவ்வளவு அவசரமா...?//

ஆஹா.. பிளான் பன்னி பெசுறாப்புல இருக்கு.. கெட்டது நீ..சீ சீ..கேட்டது நீ... அதுனாலதான் நான் குடுத்தேன்.. இப்ப எனக்கு பழியா?
ஏதோ பதிவர்கள் எல்லாத்தையும் நான் காலி பன்ன கிளம்பி வந்தேன்னு சொல்லிடுவீங்க போல இருக்கே.. நியாயமா இது?

//என் காசில எனக்கே பூச்சி மருந்தா?

சொந்த செலவில் சூனியமா ??//

ஹி ஹி .. ஆமாம்..

மனதின் ஓசை said...

//கோக் - பெப்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்ட அலைகள் எழாமல் இது மாறப்போவதில்லை. இருக்கவே இருக்கிறது நம் கிரிக்கெட் இரண்டு ஒன்டே மேட்ச்சை பான்சர் பண்ணினால் போதும் நம்மவர்களுக்கு. உடனே கோக் பக்கம் போய்விடுவார்கள். கோக் - பெப்சி போன்ற அந்நிய குளிர்பானங்களுக்கு எதிரான பெரும் போராட்டத்தை நடத்திட வேண்டிய சரியான தருணம் இதுவே. //

ஆமாம் சந்திப்பு.. இதன் பாதிப்புகள் தெரிந்தும் யாரும் மாறியது போல தெரிய வில்லை..மூன்று வருடங்களுக்கு முன் இருந்த டிமான்டில் இருந்து இப்பொழுது கொஞ்ஜமும் குறைய வில்லையாம். நடுவில் இப்பிரச்சினை எழுந்ததும்..போரட்டம் தான் வழி என தோன்றுகிறது....

மனதின் ஓசை said...

//என்ன தான் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், நம்ம ஆளுங்களுக்கு புத்தி வரப்போவதில்லை.//

ஹி ஹி... எதுனா சொன்னீங்களா?

//குடிக்கக்கூடாது என்பது எல்லாருக்குமே தெரியும், தெரிந்தும் குடிப்பவர்கள் தான் அதிகம்.//

கரிக்டு கரிக்டு....ஆம எத சொல்றீங்க?

//இளநீர் குடிங்கப்பா,//
உண்மைதாங்க...இளநீர் குடிப்பது உடம்புக்கு ஆரொக்கியம்... விலையும் குறைவு..இயற்கையானது...பாதிப்பு இல்லாதது..
பிரஷ்ஷான பழரசமும் பருகலாம்..

மனதின் ஓசை said...

//பூச்சி மருந்தை விடுங்க... நம்ம நிலத்தடி நீரை உறிஞ்சி.. நம்ம கிட்டயே.. அநியாய இலாபத்துக்கு விற்கும் இந்த முறை சரிதானா ? //

எந்த விதத்தில் இதனை சரி என சொல்ல முடியும்?

//பெப்சி கோக் நிறுவன எந்த ஒரு பொருளையும் தவிர்ப்பது பெரிய விஷயமில்லை.. //

கன்டிப்பக... அது ஒன்றுமே இல்லை. எத்தனையோ அல்டர்னேட்டிவ் இருக்கிறது.. இளனீர்.. பழரசம் போல்...

//தயவு செய்து தவிர்த்திடுங்கள்.. //
செய்வார்களா?

***************
// நடுவில் இப்பிரச்சினை எழுந்ததும்..//
எழுத்துப்பிழை ஆகி விட்டது.. நடுவில் இப்பிரச்சினை எழுந்தும் என படிக்கவும்

மனதின் ஓசை said...

//நல்ல கட்டுரை,//

உங்க் பதிவ பாத்தப்புரம் இது உள்குத்துன்னு புரியுது...:-(


//இதே விசயத்தை பற்றிய எனது கட்டுரையை படித்து கருத்து சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.

http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html
//

படித்தேன்.. நன்றாக விளக்கமாக எழுதி உள்ளீர்கள்..

மனதின் ஓசை said...

//அது என்னங்க அது ஜோடிப்புறா?//
அடப்பாவி...ஜோடிப்புறா தெரியாதா?

//ஜோடியா எஸ்கேப் ஆவறதா? பேரை பாத்தா நல்ல விளாட்டா இருக்குற மாதிரி தெரியுது... //
ஆகா-- நீ தம்பி இல்ல.. வில்லன்.. ஜாக்கிரதையா இருக்கனும் போல இருக்கே..

மனதின் ஓசை said...

இன்று பாரளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு உள்ளது... கோக், பெப்ஸிக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Syam said...

//பூச்சி மருந்து இருந்தா நல்லது தானே
வயிற்றில் இருக்கும் பூச்சி எல்லாம் செத்து போயிட்டும்//

நான் நெனச்சேன் பங்கு நீ சொல்லீட்ட...

இப்போல்லாம் பூச்சி மருந்துக்கு பூச்சியே சாவரது இல்ல.... :-)

Santhosh said...

ஓசை நம்ம பக்கமும் வந்து பாருங்க நாமளும் எழுதி இருக்கோம் இல்ல.

http:\\santhoshpakkangal.blogspot.com

Unknown said...

இந்த முக்கியமான பாயின்டையும் கட்டுரைல சேத்துகிடுங்க.

பெப்ஸிகாரனே விளம்பரத்தில் 'உள்ளம் கேட்குதே மோர்' என்று சொல்கிறான்.உள்ளம் மோர் கேட்கும்போது மோர் தானே குடிக்கணும்?ஹி..ஹி

மனதின் ஓசை said...

//நான் நெனச்சேன் பங்கு நீ சொல்லீட்ட//
ஆஹா.. எல்லரும் ஒரே மாதிரிதான்யா இருக்கங்க...(சரி.. ஊரோடு ஒத்து வாழ்...)
நானும் அததானுங்கோ நினைச்சேன்.. சிவா முந்திகிட்டு சொல்லிட்டாரு..

//இப்போல்லாம் பூச்சி மருந்துக்கு பூச்சியே சாவரது இல்ல.... :-)//

அப்டியா சியாம்?..சரி..இது எப்படி உங்களுக்கு தெரியும்?

மனதின் ஓசை said...

//ஓசை நம்ம பக்கமும் வந்து பாருங்க நாமளும் எழுதி இருக்கோம் இல்ல.//

பார்த்தேன் சந்தோஷ்.. அதுல ஒரு உள்குத்தும் போட்டு இருக்கீங்க..ஏன்னு புரியல:-(
ஜாலியா சொன்னத வேற மாதிரி சொன்னதா எழுதி இருக்கீங்க...
எனிவே நீங்க சொன்ன கடைசி வார்த்தை சரிதான்... மக்களா பார்த்து திருந்தினதான் உண்டு..

மனதின் ஓசை said...

//இந்த முக்கியமான பாயின்டையும் கட்டுரைல சேத்துகிடுங்க.//

சேத்துட்டா போச்சு..

//பெப்ஸிகாரனே விளம்பரத்தில் 'உள்ளம் கேட்குதே மோர்' என்று சொல்கிறான்.உள்ளம் மோர் கேட்கும்போது மோர் தானே குடிக்கணும்?ஹி..ஹி //

சூப்பர் செல்வன்..இதுகூட நல்லா இருக்கே..இப்பயாவது மக்களுக்கு புரியுமா?

கதிர் said...

ஏண்டா மாப்ள சாப்பிட்டவுடனே பெப்ஸி குடிக்கற?

சாப்பிட்டது அசைவம் அது நல்லா ஜீரணம் ஆகணுமில்ல அதான்.

நீ ஜீரணமாகணும்னு குடிக்கற. அங்க ஒருத்தன் பெப்ஸிய வச்சு புதுசா ஒண்ணு கண்டுபுடிச்சுருக்கான்

யாரு மாமா அது?

வேற யாரு பெரியண்ணன் ஊர்க்காரபயதான்.

அவன் அவங்க வீட்டு கக்கூச கழுவறதுக்கு ஆசிட்டோ, பினாயிலோ யூஸ் பண்றது இல்லயாம்

பின்ன வேற எதை யூஸ் பண்றானாம்?

இப்போ நீ குடிக்கறியே அதைதான்.
எல்லாத்தையும் விட இது நல்லா சுத்தம் செய்யுதாம்

அடப்பாவி மக்கா, இது வேறயா



//ஆகா-- நீ தம்பி இல்ல.. வில்லன்.. ஜாக்கிரதையா இருக்கனும் போல இருக்கே.. //

இவண்
அப்பாவி

அன்பு said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

மனதின் ஓசை நீங்கள் எனக்கு இட்டு வந்த பின்னூட்டதிற்கு சற்று விரிவாகவே மற்றொரு பின்னூட்டம் எழுத வேண்டியாதாகி விட்டது. கொஞ்சம் சூடாகி இருந்தேன், உங்கள் பின்னூக்கியை படித்தும் அது வெடித்து வெளியே வந்து விட்டது.

மனதின் ஓசை said...

//இப்போ நீ குடிக்கறியே அதைதான்.
எல்லாத்தையும் விட இது நல்லா சுத்தம் செய்யுதாம்//

அப்டியா??????

மக்களே.. இதனை படித்த பின்பும் ???

////ஆகா-- நீ தம்பி இல்ல.. வில்லன்.. ஜாக்கிரதையா இருக்கனும் போல இருக்கே.. //

இவண்
அப்பாவி//

நம்பிட்டோம்.

சரி.. ஜோடிப்புறா ஆட்டம் என்னன்னு புரின்சுதா? (இல்லன்னு சொன்னா விளக்கப்பதிவு ஒன்னு பொட்டுடலாம் இல்லயா.. அதுனாலதான்.. பதிவு போடரதுக்கு மெட்டரே கிடைக்க மாட்டேங்குது.. ஹி ஹி :-))

மனதின் ஓசை said...

//நல்ல பதிவு. வாழ்த்துக்கள்//

தமிழ்நாடுடாக். மிக்க நன்றி...இது நல்ல பதிவா என தெரியாது.. ஆனால் நம்மை ஏமாளி ஆக்கிகொண்டு இருக்கும் பல விஷயங்களில் இத்வும் ஒன்று.

வருகைக்கு நன்றி.. அடிக்கடி வருகை தரவும்.

மனதின் ஓசை said...

//மனதின் ஓசை நீங்கள் எனக்கு இட்டு வந்த பின்னூட்டதிற்கு சற்று விரிவாகவே மற்றொரு பின்னூட்டம் எழுத வேண்டியாதாகி விட்டது. கொஞ்சம் சூடாகி இருந்தேன், உங்கள் பின்னூக்கியை படித்தும் அது வெடித்து வெளியே வந்து விட்டது.//

பார்த்தேன் தேகா... உங்கள் கோவம் புரிகிறது.. ஒரு சிறு மாறுபட்ட கருத்து இருந்தது.. பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறேன்.. அந்த கருத்தே ஒரு தனி விவாதத்துகுள்ளக்கப்பட வேண்டியது.. ஆனால் விவாதித்து பயன் இல்லை :-(

யாத்ரீகன் said...

>> செய்வார்களா?

மாற்றம், மாற்றத்தை வேண்டுபவர்களிடமிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.. 4 ஆண்டுகளுக்கு முன் நிறுத்திய ஒன்று இது.. அவர்கள் நாட்டிலிருந்த போதும்.. தண்ணீருக்கு பதில் இதை குடிக்கும் பழக்கம் அங்கே இருக்கும் போதும்.. எளிதாய் தவிர்க்க முடிந்தது...

நம் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.. எந்த ஒரு Compromise இல்லாமல்....

மனதின் ஓசை said...

யாத்திரீகன்,
உங்கள் கருத்தோடு முழுதும் உடன்படுகிறேன்.

//நம் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.. எந்த ஒரு Compromise இல்லாமல்.... //

இனி என் வீட்டில் கோக், பெப்ஸி அருந்த மாட்டோம்.(இதற்கு முன்னும் எப்பொதாவதுதான் அருந்தியது உண்டு..).

Syam said...

//சரி..இது எப்படி உங்களுக்கு தெரியும்//

ஏனுங்க சில விஷயம் கேள்வி ஞானம் தான்...சந்திர மண்டலத்துல மனுசங்க இல்லனு போய் பார்த்தா தெரிஞ்சுகிட்டோம்...(ஆகா தத்துவம் நம்பர் 1001) :-)

நாகை சிவா said...

என்ன போட்டு தள்ளுறதுனு முடிவுல இருக்குற போல இருக்கு.
ஏதோ நல்லா இருந்தா சரி
பரவாயில்ல நம்ம சப்போட்டுக்கு நம்ம பங்காளி வந்து இருக்காரு. நன்றி பங்க்ஸ்

நாகை சிவா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மனதின் ஓசை said...

//ஏனுங்க சில விஷயம் கேள்வி ஞானம் தான்...சந்திர மண்டலத்துல மனுசங்க இல்லனு போய் பார்த்தா தெரிஞ்சுகிட்டோம்(ஆகா தத்துவம் நம்பர் 1001) :-)//
அருமை நண்பா சியாம், மீதி 1000தையும் சொல்லுங்க..பொஸ்தகமா போட்டுடலாம்...:-)

மனதின் ஓசை said...

//என்ன போட்டு தள்ளுறதுனு முடிவுல இருக்குற போல இருக்கு.
ஏதோ நல்லா இருந்தா சரி//

என்ன சிவா இப்படி சொல்லிட்ட? நான்தான் ஆல்ரெடி சரண்டர் ஆகிட்டேன் இல்ல? இத பாக்கலியா?
"ஆஹா.. எல்லரும் ஒரே மாதிரிதான்யா இருக்கங்க...(சரி.. ஊரோடு ஒத்து வாழ்...)
நானும் அததானுங்கோ நினைச்சேன்.. சிவா முந்திகிட்டு சொல்லிட்டாரு.."


//பரவாயில்ல நம்ம சப்போட்டுக்கு நம்ம பங்காளி வந்து இருக்காரு. நன்றி பங்க்ஸ் //
:-)

மனதின் ஓசை said...

//இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

நன்றி சிவா.

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

மனதின் ஓசை said...

தே கா வின் கோக் சம்பந்தப்பட்ட பதிவில் நான் இட்ட பிண்ணூட்டமும் அவரின் பதிலும்..:

மனதின் ஓசை said...
நம்மை சுற்றி நடக்கும் எல்லா தவறுகளையும் கண்ணை திறந்து நன்றாக பார்த்துக் கொண்டே கவலைப்படாமல் இருக்கக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு உள்ளோம்..இது மாறும்வரை இது போன்றவை நிகழத்தான் செய்யும்.

Thekkikattan said...
//நம்மை சுற்றி நடக்கும் எல்லா தவறுகளையும் கண்ணை திறந்து நன்றாக பார்த்துக் கொண்டே கவலைப்படாமல் இருக்கக்கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு உள்ளோம்..இது மாறும்வரை இது போன்றவை நிகழத்தான் செய்யும்.//

சரியாக சொன்னீர்கள் 'மனதின் ஓசை' நம்மிடையே நிறைய புத்திசாலிகளும் உள்ளார்கள். பச்சை பணமே, பின்னாலில் எல்லாமும் கையை விட்டு போனதுற்கு பிறகு திரும்பவும் கொண்டு வர முடியுமென்று, நியாயம் பேசி, கிண்டலும் அடித்து வருவதற்கு.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது, இது போன்ற மனிதர்களை சந்திக்கும் பொழுதும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுதும்.

குறுகிய கால பயன்பாட்டு பார்வை இருக்கும் வரைக்கும் இது போன்ற இயற்கை கற்பழிப்பு, நமக்கு வலிப்பது கிடையாது, ஏனென்றால் இயற்கைத்தாய் வாய் விட்டு புலம்பி அழுவது கிடையாது. அவள் வேறு மாதிரியாக விஷத்தை நம் போன்ற ஜந்துக்களின் உடம்புக்குள் சொலுத்தி மெல்லச் சாவடிப்பது ஒன்றெ அவளுக்கு கிடைத்த தீர்வு.

அல்லது வருபட்டு, வதை பட்டு, குண்டடி பட்டு மற்ற நாடுகளுடன் எப்படி இயற்கை வழங்களை பெருவது என்பதற்காக போட்டி போட்டு சாக வேண்டியதுதான். பஞ்சத்துக்கு பிறந்த பேராசை பிடித்த காட்டு நாய்களை விட மேசமான மனிதச் பிறவிகளுடன் இந்த பூமியை பகிர்ந்து இருந்து சாக வேண்டியதுதான்.

Thekkikattan said...
ம.ஓசை, மேலும் ஒரு உண்மை...

அது போலவே சுய அறிவை விடுத்து, அரிதுப் பொரும்பாண்மையினர் ஊதுகிறார்களே அந்த சங்கை அதனால் நானும் ஊதுகிறேன், என்று மெத்தப் படித்த குருட்டு ஆசாமிகளும் பகுத்தறிவற்ற ஊன ஜன்மங்களே...

மனதின் ஓசை said...
தேகா.. ரொம்பவே சூடாகி விட்டீர்கள் என நினைக்கிறேன்..சிறிது காட்டம் குறைக்கலாமே...

//பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டாகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுமாமே அந்த நினைப்புத்தான் இங்கு வருகிறது,//

இதில் கொஞ்ஜம் மாறுபடுகிறேன்...இது மட்டுமே காரணம் அல்ல என நினைக்கிறேன்..இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விட்டு விட்டர்கள் என்றே தோன்றுகிறது..நேர்மையாக வாழவே முடியாத ஒரு சமூகத்தை உருவாக்குவதில் பெரிதளவு வெற்றி பெற்று விட்டர்கள் என்றே தோன்றுகிறது...அதன் பாதிப்பே இப்பொழுதைய நம் மனநிலை... இயலாமை கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம்மை இப்படி மாறி விட்டது என நான் நம்புகிறேன்..

கோபா said...

நல்ல கட்டுரை,

இதே விசயத்தை பற்றிய எனது கட்டுரையை படித்து கருத்து சொல்ல அன்புடன் அழைக்கிறேன்.


http://blackboards.blogspot.com/2006/08/blog-post_115475172592166256.html

மனதின் ஓசை said...

புதிய காற்று,
மிக அருமையான பதிவு.. விளக்கங்களுடன் தெளிவாக எழுதி உள்ளீர்கள்..அருமை.
இது போல் இன்னும் பல நல்ல கட்டுரைகளை எழுத வாழ்த்துக்கள்.
(அனாவசியமான, பதிவிற்கு தேவை இல்லாத கருத்துக்களை த்விர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். அனைவருக்கும் அதன் கருத்து போய் சேரும்.நன்றி)