திருப்பூரில் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு பெற விண்ணப்பம் செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.. இன்று(07-08-06 7AM or 11AM) முதல் விண்ணப்பிக்கலாம்..முதல் 2000 பெருக்கு மட்டும் இனைப்பு முதலில் கொடுக்கப்படும் என அறிவித்து உள்ளார்கள்.
குடிதண்ணீருக்காக அங்கு அடிக்கும் நல்ல வெயிலில் ஒரு முழு நாள் நிற்க தயாராய் மக்கள்.
அதற்கு நேற்று 06-08-06 பகல் பணிரெண்டு மனி அளவில் நிற்கும் மக்கள் வரிசையில் ஒரு பகுதி
இந்த வரிசை நீன்ட தூரம் வரை செல்கிறது.
இந்த இணைப்பு தங்களால்தான் கொடுக்கப்பட்டது என கூறி அரசியல் ஆதாயம் தேடும் அனைத்து கட்சிகள்.
வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு தேவையான தண்ணீரை பெற இப்படியெல்லாம் மக்கள் அவதியுற வேண்டி இருக்கிறது :-(
படங்கள் : என் செல்போனில் கிளிக்கியது...
Monday, August 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!!
என்னத்த சொல்ல
படத்தை இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் எடுத்து இருக்கலாம்
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புதிய காற்று அவர்களே..
//படத்தை இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் எடுத்து இருக்கலாம்//
சிவா...அந்த பக்கம் வண்டியில் போனபோழுது எடுத்தது...
பக்கத்துல போய் போட்டோ எடுத்தா "நாங்களே வேகாத வெயில்ல கஷ்டப்பட்டு நிக்கிறோம்.. உனக்கு நக்கலா?" ந்னு திட்டிட்டாங்கன்னா?
படத்த கிளிக் பன்னி பார்த்தா சரியா தெரியலியா சிவா?
கொடுமை தான்...ஆமா நீங்க திருப்பூர்லயா இருக்கீங்க...நானும் அங்க தான் கொஞ்ச நாள் குப்பை கொட்டினேன்... :-)
//கொடுமை தான்...//
உண்மை சியாம்..கொடுமைதான்...பாவமாக இருக்கிறது...
//ஆமா நீங்க திருப்பூர்லயா இருக்கீங்க...நானும் அங்க தான் கொஞ்ச நாள் குப்பை கொட்டினேன்... :-) //
அப்படியா? :-) அங்கு என்ன வேலை பார்த்தீர்கள்?
திருப்பூர் என் மனைவியின் ஊர். கல்யானத்துக்கு முன் நான் அங்கு சென்றது கிடையாது...
உங்கள் குழந்தை எப்படி இருக்கிறது?
குழந்தை நன்றாக உள்ளான்...
அது தான் சொன்னனே குப்பை கொட்டீட்டு இருந்தேனு... :-)
.சமீபக் காலத்தில் உங்கள் பதிவுகளில் பொது நலம் சம்பந்தமான விஷயங்களைப் பார்க்க முடிகிறது.. நண்பா உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்
Post a Comment