தற்போது தமிழக அரசியலில் நடந்து வரும் ராஜதந்திரங்கள் (அ)அரசியல் நாடகங்கள் (அ) கேலிக்கூத்துக்களின் பிண்ணனி பற்றிய என் பார்வை.
கலாநிதிக்கு பணம் மட்டுமே குறிக்கோள். மீடியாவின் அனைத்து விதங்களிலும் தானே முதலில் இருக்க வேண்டும் என்பதே கனவு. அத்ற்கு திமுக அரசியல் ஆதரவு தேவை பட்டபொழுது அதனை உபயோகப்படுத்திக்கொண்டார். (அவர் தந்தை திமுகாவில் இருந்தது காரணமாக திமுக ஆதரவு என்பது அவர் ரத்ததில் ஊறியதாக இருக்கும்.) அதே நேரத்தில் அது தன் முன்னெற்றத்துக்கு இடையூராக சமீப காலங்களில் வரத்தொடங்கியதால் திமுக ஆதரவு பிம்பத்தை விட்டு வெளிவர முயன்றார். கூடவே கருணாநிதிக்கு பின் ஏன் தயாநிதி வரக்கூடாது என்ற எண்ணமும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் உறுத்தியது. தானாக நடுநிலை என்பதை விட ஒரு சண்டை வந்து பிரிந்தால் தான் அது நம்பப்படும் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக ஸ்டாலின் எதிர்ப்பு/புறக்கணிப்பு வழியில் இறங்கினார்.. இதனால் ஸ்டாலினை ஓரம் கட்டலாம்.. ஓரளவு ஓரம் கட்டியபின் தயாநிதியை திமுக வாரிசாக முன்னிலைப்படுத்தலாம்/திமுக ஆதரவு பிம்பத்தை உடைக்கலாம் என்பதே அவர் நிலை. கருணாநிதிக்கும் முரசொலி மாறம் மேல் இருக்கும் பற்று காரணமாக தயாநிதியை மத்திய மந்திரியாக்கி அழகு பார்த்தார். மீடியா ஆதரவு தேவை + மாறன் பற்றால் அவர்கள் செய்வதை சகித்துக்கொண்டு அதே சமயம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார்..
மாறன் சகோதரர்களின் அடுத்தக் கட்டமே இந்த கருத்துக்கணிப்பு + மதுரை சம்பவம் + தயாநிதி ராஜினாமா.
கூடவே.. இது ஒரு நேர்க்கோடான கதை போல் சொல்ல முடியாது என கருதுகிறேன்.. இது பல காலகட்டங்களில் வெவ்வேறு மனநிலைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் கலவை.
மாறன்ஸ் இதுவரை சரியாக காய் நகர்த்தி வந்தாலும் கருணாநிதி தட்ட வேண்டிய நேரம் பார்த்து (மாறன்ஸ் புரிந்து கொள்ளும்படி) தட்டி விட்டார் என்றே கருதுகிறேன்.
மாறன்ஸ்க்கு தான் அகலக்கால் வைத்தது/சரியாக எடை போடாதது இப்பொது புரிந்து விட்டது. மு.க இருக்கும்வரை இனி அடக்கி வாசிப்பார்கள். அதற்குள் மு.க தேவையான காய்களை நகர்த்தி விடுவாரா? பார்க்கலாம்..
சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. எதிராளியை குறைவாக எடை போடக்கூடாது என்ற பாடத்தை மாறன்ஸ் புரிந்து கொண்டார்கள்.. பதிலுக்கு காய் நகர்த்துவார்களா இல்லையா என்பதை காலமும் சூழ்நிலைகளும்தான் நமக்கு சொல்லும்.
இப்போதைய சூழ்நிலையில் மாறன் திமுகாவில் இருந்து( மற்றவர்கள் பார்வைக்கு) விலக்கியே வைக்கப்படுவார். ஆனால் தன் MP பதவியை ராஜினாமா செய்யமாட்டார்.. செய்தால் தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.. திமுகாவுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் இதனை செய்திருக்கலாம். திமுகாவை விட்டு மாறனோ சன் மீடியாவை விட்டு திமுகாவோ (உண்மையாக) விலகாது.
நடந்து முடிந்து விட்டதை இரு தரப்பும் தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக்கொல்லும்.. வெளியில் எதிரெதிராக இருப்பதை போன்ற பின்பத்தை ஏற்படுத்தி
1.தன் வியாபாரத்தை விஸ்தாரமாக்கி கொள்வார்கள்.
2.சன்/தினகரன்/தமிழ்முரசு செய்திகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவார்கள். (அது திமுக சாதகமாகவே இருக்கும்).
ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்களால் தன் உயிரை இழந்துவிட்ட அந்த மூன்று குடும்பங்களுக்கும் பதில் சொல்பவர் யாரோ???
நண்பர் தேவின் "கலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்" பதிவிற்கு நான் போட்ட பின்னூட்டம் இது பதிவாக உங்கள் பார்வைக்கு.
Wednesday, May 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//"அரசியல் சதுரங்கம்." //
இப்ப தான் காய்கள் நகர்த்த ஆரம்பித்து உள்ளார்கள். ஒரு சில வெட்டுகளும் விழுந்து விட்டது... முடிவில் யாரு ஜெயிப்பார்கள் என்பது தான் இப்பொழுதயே கேள்வியே!
//அத்ற்கு திமுக அரசியல் ஆதரவு தேவை பட்டபொழுது அதனை உபயோகப்படுத்திக்கொண்டார்.//
இவர் அதை உபயோகப்படுத்திக் கொண்டதை விட தி.மு.க இவரை உபயோகப்படுத்திக் கொண்டது ரொம்ப அதிகம்.
ஆனால் இந்த அரசியல் விளையாட்டுக்களால் தன் உயிரை இழந்துவிட்ட அந்த மூன்று குடும்பங்களுக்கும் பதில் சொல்பவர் யாரோ???
எல்லோரும் இந்தக் கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்ல மறுக்கிறார்கள்! மறக்கிறார்கள்!!
//அத்ற்கு திமுக அரசியல் ஆதரவு தேவை பட்டபொழுது அதனை உபயோகப்படுத்திக்கொண்டார்.//
இவர் அதை உபயோகப்படுத்திக் கொண்டதை விட தி.மு.க இவரை உபயோகப்படுத்திக் கொண்டது ரொம்ப அதிகம்.
வா சிவா...
//இப்ப தான் காய்கள் நகர்த்த ஆரம்பித்து உள்ளார்கள்.//
முன்னாடியே ஆரம்பிச்சிட்டங்க சிவா.. நமக்குதான் சரியா தெரியல..இப்பதான் தெரியுது...
//முடிவில் யாரு ஜெயிப்பார்கள் என்பது தான் இப்பொழுதயே கேள்வியே! //
சரியா சொன்ன.
சந்திப்பு, வருகைக்கு நன்றி.
//எல்லோரும் இந்தக் கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்ல மறுக்கிறார்கள்! மறக்கிறார்கள்!! //
அதான் மிகக்கொடுமையானது. கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இருக்கும்வரை இதுதான் கதி :-(((((((
//இவர் அதை உபயோகப்படுத்திக் கொண்டதை விட தி.மு.க இவரை உபயோகப்படுத்திக் கொண்டது ரொம்ப அதிகம். //
மறுக்கமுடியாத உண்மை. அதுவும் ஆட்சியில் இல்லாத காலத்தில் திமுகாவிற்கு சன் டீவி செய்த உதவி கொஞ்சநஞ்சமல்ல.
Post a Comment