சமயம் கிடைக்கும்பொழுதெல்லாம் ரஜினி மீது புழுதி வாரி தூற்றுவதும் அவர் மீதோ இல்லை திரைத்துறையின் மீதோ அக்கறை என்ற போர்வையில் அவரை மட்டம் தட்ட முயற்சிப்பதும் சிவாஜி படம் தோல்வியடைய வேண்டும் என அங்கலாய்ப்பதும் நடக்கிறது. அவற்றில் ரஜினி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அல்லது கேட்கப்படும் கேள்விகளுக்கான என் பதில்களே இந்த பதிவு.
1. வயதான காலத்தில் டூயட் பாடுகிறார்
இதனை சொல்பவர்களை பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.அவர் என்ன கல்யானத்துக்கு பெண்ணா கேட்கிறார்? வயதை பற்றி கேள்வியெழுப்ப? இது ஊடகம். இங்கு திரையில் தெரிவதுதான் வயது. பார்ப்பவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்பதுதான் முக்கியம். அவர்கள் ஒப்புக்கொள்கையில் 20 வயது இளைஞன் 60 வயதுக்காரராகவும், 60 வயது பெரியவர் 20 வயது இளைஞனாகவும் நடிக்கலாம். இதில் என்ன தவறு? என்ன பிரச்சினை??? சத்தியராஜ் பெரியார் படத்தில் இளவயது பெரியாராகவும் வருகிறாராமே.. அது தவறா? அதை விடுங்கள். திரைத்துறையில் வெற்றி பெற்ற பல நடிகர்களை பாருங்கள். கமல்,அமிதாப், ஷாருக், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், இப்படி அடுக்கிகொண்டே போக முடியும். இவர்கள் அனைவரும் இளைஞர்கள் அல்லவே? ஹீரோவாக நடிக்ககூடாதா? டூயட் பாடக்கூடாதா? ஸ்ரீதேவி எவ்வளவு காலம் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தார்?
அது மட்டுமின்றி எனக்கு தெரிந்தவரை அவர் ஒருவர்தான் வெளியில் வேஷம் போடாமல் தன் நிஜ வயதை மறைக்காமல் இருப்பவர்.படங்களில் மட்டுமே வேஷம் போடுபவர். அவரை பார்த்து இப்படி சிறுபிள்ளத்தனமான கேள்விகள் எழுப்புபவர்களை பற்றி மேற்கொண்டு என்ன சொல்ல???
2. ரஜினியின் அரசியல் ஈடுபாடு/அணுகுமுறை
ரஜினி அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை.(விருப்பமில்லை என்பதை தகுதியில்லை என சொல்வதாக அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டாம்). அதே போல் அவர் வரப்போகிறேன் என பூச்சாண்டி காட்டுவதும் எனக்கு பிடிக்கவில்லை. அதே நேரத்தில் இதை ஒரு பெரிய குற்றமாக பேசுவதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. அரசியல் என்பது ஆட்சி அதிகாரம் மூலம் நன்மை செய்ய ஒரு வாய்ப்பு என்பது பெயரளவில் கூட இல்லை. அரசியல் செய்ய நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. பல குள்ளநரித்தனக்களையும் சமாளிக்க, எதற்கும் எப்பொதும் அடுத்தவரை குறைகூற, தன்னையும் தன் கட்சியையும் தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். இதீல் எதுவும் ரஜினிக்கு ஒத்துவரும் என என்னால் நம்பமுடியவில்லை. அப்படிப்பட்ட அரசியலில் நுழைவதற்கு தயக்கம் காட்டுவது தவறு அல்ல. அரசியலில் அவரின் செயல்பாடுகள் நிச்சயமாக சிறப்பானதாக இல்லை. ஆனால் குற்றம் சுமத்தும் அளவுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. அவர் அரசியலுக்கு வருவதாக சொன்னதால் இப்பொழுது என்ன கெட்டுப்போய் விட்டது? ஏன் இந்த கூச்சல்? ஏற்கனவே ஒரு பதிவில் நான் சொன்னது கீழே:
//அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்...அப்படியே அவரை நம்பி காத்திருந்தாலும், பாதிக்கப்பட்டதாக சொல்வது அவர் ரசிகர்கள்தானே?உங்களுக்கு ஏன் இந்த நீலிக்கண்ணீர்?//
3.ரஜினி தரமான படங்களில் நடிக்க வேண்டும்.
திரைப்படத்துறையை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு நடிகர்/இயக்குனரிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டோம். ரஜினியை சுற்றி ஒரு வட்டம் போடப்பட்டுவிட்டது. அதனை தாண்டுவது எளிதல்ல. (ஒரு சிறிய எடுத்துக்காட்டு: ஷங்கர் காதல் படத்தை தான் இயக்கி இருந்தால் தோல்வியடைந்து இருக்கும் என சொன்னது) தாண்டும் ஆசை அவருக்கும் இருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் இது ஒரு சிலரின் தனிப்பட்ட ஆசை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. பலரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ரஜினி படம் தோல்வியடைந்தால் அதன் பாதிப்பு சாதாரணமானதல்ல. பலரை பாதிக்கும்.
நான் சொல்வது ஆசை வேறு. நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் வேறு என்று..ரஜினி படங்களின் தரம் மேலும் உயரவேண்டும் எனவே நானும் விரும்புகிறேன். பல ரசிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும் என்றே நம்புகிறேன்.
அதே சமயம் நாம் கலை என்பது ரசிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பத்தை கொடுப்பதும்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படி கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் யாருமில்லை என்பது நிதர்சனம்.
4.சிவாஜியால் தரம் கெட்டுவிடும்
சிவாஜி படம் வெளிவருவதற்கு முன்பே யூகங்களின் அடிப்படையில் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. இந்த படம் வருவதால் திரையுலகம் கெட்டுப்போய்விடும். 5 வருடம் பின்னோக்கி போய்விடும் என்பது எந்த விதத்திலும் சரியான வாதமல்ல.. சிவாஜி வெற்றிபெற்றால் சேரனும் பிரகாஷ்ராஜும் மசாலா படம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் என கூறுகிறீர்களா?? இல்லை மக்கள் அது போன்ற படங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டர்கள் என சொல்கிறீர்களா? VCDயில் படம் பார்த்தவர்களை திரையரங்குகளுக்கு மறுபடியும் அழைத்து வந்து திரைத்துரைக்கு பெரும் பேறு செய்த படம் சந்திரமுகி. இதையெல்லாம் மறந்து விட்டு பேசுவது துரதிஷ்டமே.. இதனை பற்றி சிவாஜி படம் வெளிவந்த பின் பேசுவது மட்டுமே சரி.
5.ரஜினிக்கு நடிக்கத்தெரியாது.
இதற்க்கெல்லாம் பதில் சொல்லக்கூடகூடாது.. நடிப்புத்துறையில் 30 ஆண்டு காலம் கொடிகட்டி முடிசூடா மன்னனாக திகழும் ரஜினியை பர்த்து நடிக்கத்தெரியாது என்பதை பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது.மேற்கொண்டு பேச எதுவுமில்லை.
மேற்கொண்டு ஏதுவும் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. விவாதிக்கலாம்..சரியான முறையில்.
ரஜினிக்கும் சிவாஜிக்கும் எதிராக எழுதப்பட்ட பல பதிவுகளை பற்றி:
அப்படிப்பட்ட பதிவு ஒன்றில் ராஜ்குமார் என்ற ஒரு வாசகர் இட்ட பின்னுட்டத்தை 100% சரி என நான் நம்புவதால் அதையே அந்த பதிவுகளை பற்றிய என் பார்வையாக வைக்கிறேன்.
"ரஜினி என்ற தனிமனிதனின் புகழ் மீதான காழ்புணர்ச்சியை, அறிவு ஜீவித்தனமான வாதங்களை முன் வைத்து வெளிப்படுத்தியுள்ளீர்கள்.இவ்வாதங்களில் துளிக்கூட நேர்மை கிடையாது.யூகங்களிம் அடிப்படையில், சினிமா வரலாற்றையும் முழுமையாக பிரதிபலிக்காமல் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை கண்டிப்பாக பரபரப்பு ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளதே தவிர, வேறு எதற்காகவும் இல்லை"
நான் பார்த்தவரை ரஜினி ரசிகர்கள் நல்ல படங்களை பற்றி பாரட்ட தவறியதே கிடையாது.யாரையும் தவறாக பேசியது கிடையாது. ரஜினியை பற்றி தவறாக எழுதி சீண்டி விடும்நேரங்களில் சிலது சொல்லி இருக்கலாம். அவ்வாறு சீண்டி விடுவதை கோழைத்தனமாகவே நான் நினைக்கிறேன். அக்கரையுடன் எழுதப்படும் பதிவுகள் என்பது உண்மையானால் அது சரியான விவாதக்களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். அப்படியில்லமல் ரஜினியை பற்றி தவறாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிட்டு நான் அக்கரையுடன் சொல்கிறேன் என்பது சரியா??
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பின் மூலம் ஈர்த்துள்ள ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம்தான். அசைக்க முடியாத ஒரு சக்திதான். உயர்ந்த இடத்தில் இருந்தாலும் துளியும் கர்வமின்றி எளிமையாக இருப்பவர். ஒரு கலைஞனை தாராள மனதுடன் பாரட்டுவது ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. இதுவும் அனைவருக்கும் தெரிந்தது. இருந்தும் ஏன் அவர் மேல் இந்த கோபம்? பாபா தொல்வியடைந்ததும் ரஜினி சகாப்தம் முடிந்தது என நம்பியதில் மண் விழுந்ததால் வந்த எரிச்சலா????
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
நன்பா,
கலை என்பது மக்களின் வாழ்வை / சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் . ஆனால் இன்றைய சூழலில் தமிழில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் அவ்வாறு இருப்பதில்லை. எதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்களை நம்பித்தான் பெரும்பாலான படங்கள் வெளியாகிறது.
இப்படியான சூழலில் என்னைப் பொருத்தளவில் எவன் நடித்தாலும் அது குப்பையான படமாகத்தான் பார்க்கிறேன் என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். ரஜினியைப் பொருத்தளவில் என்னுடைய விமர்சனங்கள் -
தன் ரசிகர்களின் / மக்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டு அதில் சவாரி செய்பவர். ஒரு திரைப்படம் வெளிவருவது ஒரு சாதாரண நிகழ்வு அதை ஒரு திருவிழா போன்றதொரு கொண்டாட்டமாக மாற்றியிருக்கத் தேவையில்லை ( நீங்கள் ஊடகங்களை முற்றும் குற்றம் சொல்ல வேண்டாம். ஏனெனில் கட்டவுட் வைப்பதையும், பாலாபிஷேகம், பீராபிஷேகம், கரகாட்டம், படப்பெட்டியை தேரில் வைத்து இழுத்து வருவது போன்றவைகளை ரஜினி நினைத்தாலே தடுக்கலாம் ).
மக்கள் மேல் அக்கரையுள்ளவராகக் காட்டிக் கொள்வதும், காட்சிகளில் கூட வரும் அல்லக்கை நடிகர்களை வைத்து உசுப்பேத்தும் படியான வசனங்களைப் பேச வைத்தும்; இன்னும் இது போன்ற இமேஜ் பில்டப்புகளாலேயே இன்று வரை ரஜினி காலம் தள்ளுகிறார் என்கிறேன்.. மக்கள் மேல் உண்மையான அக்கரை கொண்ட ரஜினி இன்று வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்?
ரசிகர் பட்டாளம் என்னும் வெட்டிப் பயல்களின் கூட்டத்தை உண்டாக்கி விட்டுள்ளது தான் ரஜினி இந்த தமிழ் சமூகத்துக்கு தந்துள்ள ஒரே "நன்மை".. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரசிகர் மன்ற தட்டி, போர்டுகளை மக்களே உடைத்து எரியும் நாள் தான் உண்மையாகவே தமிழ்நாடு விடிவை நோக்கி முன்னேறும் நாளாக இருக்கும்.
மனதின் ஓசை,
இப்போதைக்கு ஒரே ஒரு கேள்வி
//எனக்கு தெரிந்தவரை அவர் ஒருவர்தான் வெளியில் வேஷம் போடாமல் தன் நிஜ வயதை மறைக்காமல் இருப்பவர்//
தெரியாம தான் கேட்கிறேன் .மத்த நடிகர்களெல்லாம் தங்கள் வயதை குறைத்து சொல்கிறார்களா என்ன .அல்லது மேக்கப் போட்டுக்கொண்டு தான் பொது விழாக்களுக்கு வருகிறார்களா என்ன ? இப்போ கமல் ஹாசனை எடுத்துக்கொள்ளுவோம் .அவர் பொது விழாவுக்கு வரும் போது ரஜினியை விட எளிமையாக தெரிய வேண்டும் என்பதற்காக முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு ,பாதி தலையை சொட்டையாக்கிக் கொண்டு வந்தால் தான் நீங்கள் பாராட்டுவீர்களோ?
//மக்கள் மேல் அக்கரையுள்ளவராகக் காட்டிக் கொள்வதும், காட்சிகளில் கூட வரும் அல்லக்கை நடிகர்களை வைத்து உசுப்பேத்தும் படியான வசனங்களைப் பேச வைத்தும்; இன்னும் இது போன்ற இமேஜ் பில்டப்புகளாலேயே இன்று வரை ரஜினி காலம் தள்ளுகிறார் என்கிறேன்.. மக்கள் மேல் உண்மையான அக்கரை கொண்ட ரஜினி இன்று வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்?//
விட்டால் வில்லனாக நடித்து வந்த நம்பியார், நாசர் போன்றோர், நிஜ வாழ்வில் ஏன் கொலை கொள்ளைகள் நடத்தவில்லை என்று கேட்பீர்கள் போலிக்கிறது!!!
//விட்டால் வில்லனாக நடித்து வந்த நம்பியார், நாசர் போன்றோர், நிஜ வாழ்வில் ஏன் கொலை கொள்ளைகள் நடத்தவில்லை என்று கேட்பீர்கள் போலிக்கிறது!!!//
ஹி..ஹி..நல்ல கேள்வி..ஆனால் நண்பரே ரஜினியைப்பார்த்து கேட்கும் கேள்வியை மற்ற எல்லா கதாநாயகர்களிடமும் கேட்பதில்லை ஏன் ? என்று சிந்தியுங்கள் .ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் .அந்த கதாபாத்திரத்தின் வசனத்தை பேசுகிறேன் என்பது வேறு ...
"என் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு துளி தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா..என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா" என்பதற்கும் படையப்பா என்ற கதாபாத்திரத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?
ஒரு பங்களாவில் சாதாரண வேலைக்காரன் பாடும் டூயட்டில் "கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு " "என்னமோ திட்டமிருக்கு " -ன்னு பாடுறதுக்கு என்ன அவசியம் வந்தது ..ஆகா அது கவிஞர் எழுதுனது ..ரஜினிக்கு தெரியவே தெரியாது ..மத்தவங்க தான் அவரை புகழ்ந்து பேசுவாங்க ..அவருக்கு இது புடிக்காது ..அவரு பச்ச குழந்தை -ன்னு எத்தனை நாளைக்கு தான் காது குத்துவீங்க ?
வருகைக்கு நன்றி திரு.விவேகானந்தன்.
//கலை என்பது மக்களின் வாழ்வை / சமுதாயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் //
கலை என்பது இது மட்டுமல்ல..
இதை பற்றி பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.. ரசிகர்களின் விருப்பத்தை கொடுப்பது எல்லாமே கலைதான்.
//ஒரு திரைப்படம் வெளிவருவது ஒரு சாதாரண நிகழ்வு அதை ஒரு திருவிழா போன்றதொரு கொண்டாட்டமாக மாற்றியிருக்கத் தேவையில்லை //
//மக்கள் மேல் அக்கரையுள்ளவராகக் காட்டிக் கொள்வதும், காட்சிகளில் கூட வரும் அல்லக்கை நடிகர்களை வைத்து உசுப்பேத்தும் படியான வசனங்களைப் பேச வைத்தும்; இன்னும் இது போன்ற இமேஜ் பில்டப்புகளாலேயே இன்று வரை ரஜினி காலம் தள்ளுகிறார் என்கிறேன்.. //
இதெல்லாம் சரியான ஒரு குற்றச்சாட்டாக தெரியவில்லை. அனைவருக்கும் பொதுவான ஒரு நிகழ்வை ரஜினிக்கு எதிராக சொல்வது சரியான வாதமா? எல்லாப்படங்களுக்கும் (கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்) இது நடக்கிரது.. இது இந்த துறையின் ஒரு அம்சம்.
//
மக்கள் மேல் உண்மையான அக்கரை கொண்ட ரஜினி இன்று வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளார்? //
அவர் அரசியல்வாதி அல்ல நண்பா. தன் கருத்துக்களை அவ்வப்பொழுது தெரிவித்து வருகிறார். தினமும் அறிக்கை அவரிடன் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.
//ரசிகர் பட்டாளம் என்னும் வெட்டிப் பயல்களின் கூட்டத்தை உண்டாக்கி விட்டுள்ளது தான் ரஜினி இந்த தமிழ் சமூகத்துக்கு தந்துள்ள ஒரே "நன்மை".. //
இது போன்ற வார்த்தை பிரயோகங்கள்தான் தேவையில்லாமல் சீண்டுபவை.. இதனை பற்றியும் பதிவில் சொல்லி இருக்கிறேன்.. இப்படி சொல்லிவிட்டு அப்புரம் ரசிகர்கள் திட்டுகிறார்கள் என புலம்புவது :-(((
அந்த மனிதரிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருப்பதென்னமோ உண்மை...!!!!
உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கின்றன்...!!
வாருங்கள் ஜோ,
பதிவில் உள்ள மற்ற கருத்துக்களை பற்றிய உங்கள் கருத்தை தெரிவிப்பீர்கள் என நம்புகிறேன்.
நான் குறிப்பிட்டுள்ள பதிவுகளை ஆஹா ஓஹோ சூஊஊஊஉப்பர் என சொன்னவர் அல்லவா?
//தெரியாம தான் கேட்கிறேன் .மத்த நடிகர்களெல்லாம் தங்கள் வயதை குறைத்து சொல்கிறார்களா என்ன .அல்லது மேக்கப் போட்டுக்கொண்டு தான் பொது விழாக்களுக்கு வருகிறார்களா என்ன ? //
குறைத்துச்சொல்கிறார்கள் என நான் எங்கும் சொல்லவில்லை. ஆனால் குறைத்துக்காண்பிக்க விரும்புகிறார்கள்/முயற்ச்சிக்கிறார்கள் என்பது உண்மை. அனைவருக்கும் இது தெரியும்.தெரியாமதான் கேக்கறிங்கன்றது புரியுது.
//? இப்போ கமல் ஹாசனை எடுத்துக்கொள்ளுவோம் .அவர் பொது விழாவுக்கு வரும் போது ரஜினியை விட எளிமையாக தெரிய வேண்டும் என்பதற்காக முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு ,பாதி தலையை சொட்டையாக்கிக் கொண்டு வந்தால் தான் நீங்கள் பாராட்டுவீர்களோ? //
கமல் அது போன்று வர வேண்டும் என நான் சொல்லவில்லை.
பதில் கேள்விகளை இப்பொதைக்கு நிருத்திக்கொள்கிறேன்.. இந்த பதிவு ரஜினி Vs கமல் என ஆக வேண்டாம் என ஆசைப்படுகிறேன்.
விவேகனந்தனும் பதிவில் குறிப்பிட்டுள்ளவை பற்றி தன் கருத்தை சொல்வார் என நம்புகிறேன்.
மனதின் ஓசை.. நீயும் தலைவரைப் பத்தி பதிவுப் போட்டுட்டீயா.. பொறுக்க முடியல்லயா? ம்ம்ம் எப்படியோ உன் பதிவும் பெயரும் இனி கவனிக்கப்படும்ய்யா நடத்து நடத்து...
மழை நேரத்தில் கடலை வியாபாரம் நன்றாக நடக்கும். எல்லாரும் கடை விரிக்கிறார்கள். சிலர் நல்ல கடலை விற்கிறார்கள். சிலர் மோசமான கடலை விற்கிறார்கள். எப்படி இருந்தாலும் நல்ல சில்லறை அள்ளுகிறார்கள்.
ஆமா ஜோ உங்க கருத்துக்கள் யோசிக்க வைக்குது.. இப்போக் கூட சிவாஜியிலே ஓப்பனிங் சாங்ல்ல...
தலைவரைக் காவிரி மேட்டர்ல்ல நைசாக் கழண்டுகிட்டார்ன்னு பலர் குற்றம் சாட்டும் போது...
அந்த மொத லைன் காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துப் போகுமான்னு பாடுறார்...
அப்புறம் பல்லலேக்கா..பல்லேலக்கா... அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கான்னு பாடுறார்.. இதுக்கெல்லாம் என்ன விளக்கமோ.. மனதின் ஓசைக் கண்டிப்பாப் பதில் சொல்லணும்...
//ஆனால் நண்பரே ரஜினியைப்பார்த்து கேட்கும் கேள்வியை மற்ற எல்லா கதாநாயகர்களிடமும் கேட்பதில்லை ஏன் ? //
நல்ல கேள்வி..அதையேதான் நானும் கேட்கிறேன்..
//என்று சிந்தியுங்கள் //
நாங்க சிந்திக்கிறது இருக்கட்டும்.. நீங்க சிந்திச்சி சொன்னதுதானெ இது.. பாக்கிறோம்.
//.ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் .அந்த கதாபாத்திரத்தின் வசனத்தை பேசுகிறேன் என்பது வேறு ...
"என் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு துளி தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா..என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா" என்பதற்கும் படையப்பா என்ற கதாபாத்திரத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?
ஒரு பங்களாவில் சாதாரண வேலைக்காரன் பாடும் டூயட்டில் "கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு " "என்னமோ திட்டமிருக்கு " -ன்னு பாடுறதுக்கு என்ன அவசியம் வந்தது ..ஆகா அது கவிஞர் எழுதுனது ..ரஜினிக்கு தெரியவே தெரியாது ..மத்தவங்க தான் அவரை புகழ்ந்து பேசுவாங்க ..அவருக்கு இது புடிக்காது ..அவரு பச்ச குழந்தை -ன்னு எத்தனை நாளைக்கு தான் காது குத்துவீங்க ?
//
ஆஹா.. என்ன அருமையான சிந்தனை.. சூப்ப்ப்ப்ப்பர் ஜோ.. ரஜினி படத்தில் மட்டும் இப்படிப்பட்ட துதிபாடும் வசனங்கள் வருவதை அழகாக வெளிப்படுட்தி உள்ளீர்கள்.. அருமை..அருமை.. அதனால்தான் ரஜினியை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.. தெளிவாக புரிந்தது.. உங்கள் சிந்தனையில் உதித்த மற்ற கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பல உண்மைகள் புரியும்.
வருகைக்கு நன்றி ரியொ..
ரவி,
//அந்த மனிதரிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருப்பதென்னமோ உண்மை...!!!!
உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கின்றன்...!! //
நன்றி ரவி..ஒரிரு வரிகளை மட்டும் பற்றிக்கொண்டு தொங்காமல் முழு பதிவை பற்றி வந்த முதல் பின்னுட்டம். மிக்க நன்றி.
மனதின் ஓசை,
ரஜினி அரசியல் வாதி இல்லைங்கிறோம், ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது, அவருக்கு லாயக்கில்லைங்கிறோம். ஆனால், ரஜினியும் ஒரு காலத்தில் "இன்னாருக்கு ஓட்டு போடுங்க. இன்னாருக்குப் போடாதீங்க!" என்று சொன்னவர் தானே! அதுவும் அரசியல் கட்சிகள் பங்கு கொண்ட தேர்தலில் தானே! அப்புறம் அவர் அரசியல் சார்பற்றவர்னு இப்ப வந்து சொல்றது எப்படி சரியாகும்?
////ஆனால் நண்பரே ரஜினியைப்பார்த்து கேட்கும் கேள்வியை மற்ற எல்லா கதாநாயகர்களிடமும் கேட்பதில்லை ஏன் ? //
நல்ல கேள்வி..அதையேதான் நானும் கேட்கிறேன்.. //
ரஜினி என்பவர் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படுபவர். மக்களால் முன்னிறுத்தப்படுபவர். இதே கேள்விகளை விஜய்யும், அஜீத்தும், சிம்புவும் எதிர்கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ரஜினி இல்லாமல் அந்த இடத்தில் ஒரு விஜய் வரும்போது அவரை நோக்கியும் இது போன்ற கேள்விகள் எழும்பிக் கொண்டு தான் இருக்கின்றன.
ரஜினியை மட்டுமே விமர்சிக்கிறார்கள், மற்றவர்களைச் சொல்வதில்லை என்ற குரல் உங்கள் பதிவில் தென்படுகிறது. இதற்கு ஒரே பதில், "கமல் சந்திக்காத விமர்சனங்களா?" என்பது தான். அவரைக் கூடத் தான் ஒவ்வொரு படத்தையும் கண் கொத்திப் பாம்பாக இருந்து பார்த்து கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். இதில் முரண்நகை என்னவென்றால், அப்படிக் கேட்கும் ஆசாமிகள் கூட அடிப்படையில் கமல் ரசிகர்கள் தான்.
இங்கே தான் எனக்கும் ஒரு கேள்வி வருகிறது. கமல் படத்தை விமர்சித்து, அது ஏன் இன்னும் திருப்திகரமாக, சமூகப் பொறுப்போடு வந்திருக்கக் கூடாது என்று ஒரு கமல் ரசிகர் கேட்கும் போது, ஏன் ரஜினி ரசிகர்கள் அது போன்ற கேள்விகளைத் தலைவரிடம் கேட்பதில்லை? வேறு யாரும் கேட்டுவிடாத வண்ணம் பாதுகாக்க மட்டுமே விரும்புகிறார்கள்? சுற்றிலும் கூடி நின்று தலையாட்டி மகிழும் கூட்டத்தை ரசிகராக வைத்திருப்பதில் ரஜினிக்குத் தான் என்ன பயன்? ["பாபாவை நானும் தீவிரமா விமர்சிச்சேன்! சந்திரமுகியில் பிரபுவுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்..!" என்று நீங்க சேம் சைட் கோல்னா நான் அப்பீட் :)) ]
//நான் குறிப்பிட்டுள்ள பதிவுகளை ஆஹா ஓஹோ சூஊஊஊஉப்பர் என சொன்னவர் அல்லவா?//
சுரேஷ் கண்ணனின் பதிவில் நான் ரஜினி பற்றி குறிப்பிடவில்லை .ஏ.வி.எம் பற்றியே சொல்லியிருக்கிறேன் .அதில் நான் குறிப்பிட்ட படங்களில் கமல் படமும் இருக்கிறது.
//ஆஹா.. என்ன அருமையான சிந்தனை.. சூப்ப்ப்ப்ப்பர் ஜோ.. ரஜினி படத்தில் மட்டும் இப்படிப்பட்ட துதிபாடும் வசனங்கள் வருவதை அழகாக வெளிப்படுட்தி உள்ளீர்கள்.. அருமை..அருமை.. அதனால்தான் ரஜினியை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.. தெளிவாக புரிந்தது.. உங்கள் சிந்தனையில் உதித்த மற்ற கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பல உண்மைகள் புரியும்//
மனதின் ஓசை ,உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை .வெறும் உணர்ச்சிவசப்படுதல் தான் தெரிகிறது .இது குறித்து விவாதத்துக்கு நீங்கள் தயாராயில்லை என தெரிகிறது .எனவே நானும் இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்.
வாப்பா தேவு,
//மனதின் ஓசை.. நீயும் தலைவரைப் பத்தி பதிவுப் போட்டுட்டீயா.. பொறுக்க முடியல்லயா? //
ஆமாம்யா..ரொம்பப் பேசறாங்க..
//ம்ம்ம் எப்படியோ உன் பதிவும் பெயரும் இனி கவனிக்கப்படும்ய்யா நடத்து நடத்து... //
ரஜினியை பிடிக்கதவர்களும் ரஜினியின் பெயரை வைத்து பரபரப்பு செய்து கவனிக்கப்படுகையில் நான் கவனிக்கப்படுவது குறித்து மகிழ்ச்சிதான்.. ரஜினிக்கு ஒரு பெரிய நன்றி.இன்னைக்குதான் அதிக ஹிட் நம்ம பக்கத்துக்கு. :-))))
வேலைக்கு நடுவில் அனைவருக்கும் உடனடியாக பதில் சொல்ல இயலாததற்கு வருந்துகிறேன்.
முதலில் ஜோவிற்கு,
ஜோ, உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். மன்னிக்கவும். வேண்டுமெனில் அந்த பின்னுட்டத்தை நீக்கி விடுகிறேன்.
/மனதின் ஓசை ,உங்களிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை.//
ஜோ.. எனக்கு பிடித்த பதிவர்களில் நீங்களும் ஒருவர். உங்களுடைய வாந்தங்கள் நியாயமானதாக எனக்கு தோன்றும். ஒரு பதிவில் ரஜினிக்கு வாழ்த்து சொன்னதாகவும் ஞாபகம். அவை உண்மையெண்று நினைத்து இருந்தேன். ஆனால் இந்த பதிவில் பதிவில் சொல்லப்பட்ட ஒரு வரிக்கு மட்டும் பதில் சொன்னது நியாயமாக படவில்லை. மற்ற பதிவுகளிலும் விவாதக்களம் அமைத்த விதம் சரியில்லை என சொல்லாதது வருத்தம் அளித்தது. உங்களிடம் இதனை நான் எதிர்பார்க்கவில்லை. பதிவின் மையக்கருத்தை விட்டுவிட்டு ஒரு வரியை பற்றி மட்டும் சொல்வதையும் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் சொன்ன வாதமும் சரியானதாக இல்லை. அதனால் அப்படி பதில் சொல்லிவிட்டேன்.
//வெறும் உணர்ச்சிவசப்படுதல் தான் தெரிகிறது .//
ஒருவேளை இருக்கலாம்.
ஆனால் பதிவு
அப்படிப்பட்டது இல்லை.
//இது குறித்து விவாதத்துக்கு நீங்கள் தயாராயில்லை என தெரிகிறது.//
இப்படி முடிவு செய்வது சரியா? நீங்கள் தயாராக இல்லை என்பது போலவும் தோன்றுகிறது.
//எனவே நானும் இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன். //
விலக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மாட்டீர்கள் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் கேட்கிறேன்.
நான் சிகப்பில் குறிப்பிட்டுள்ளவை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.
//இங்கே தான் எனக்கும் ஒரு கேள்வி வருகிறது. கமல் படத்தை விமர்சித்து, அது ஏன் இன்னும் திருப்திகரமாக, சமூகப் பொறுப்போடு வந்திருக்கக் கூடாது என்று ஒரு கமல் ரசிகர் கேட்கும் போது,//
அவர்கள் கமல் ரசிகர்கள் அதனால் கமலைக் கேட்கிறார்கள்
//ஏன் ரஜினி ரசிகர்கள் அது போன்ற கேள்விகளைத் தலைவரிடம் கேட்பதில்லை? வேறு யாரும் கேட்டுவிடாத வண்ணம் பாதுகாக்க மட்டுமே விரும்புகிறார்கள்? //
இவர்கள் ரஜினி ரசிகர்கள் அதனால் கேட்பதில்லையோ என்னவோ?
மன்னிக்க வேண்டும் நக்கலுக்காக இப்படிச் சொல்லவில்லை.
மயிலுக்கு ஆடுதல் குணம்.. குயிலுக்குக் கூவுதல் குணம்... அதுப் போல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம்..இயல்பு.. அதைச் சார்ந்தே அவர்கள் நடக்கிறார்கள்.. சில முரண்களை அப்படியே விட்டுவிடுதல் நலம் ( யாரையும் பாதிக்காத வரை) அதைக் கேள்வி கேட்டு மேதாவித் தனம் காட்ட நினைத்தால் ( உங்களையோ இல்லை வேறு யாரையோ குறிப்பிட்டுத் தாக்கவில்லை) கேள்விகள் மட்டுமே மிஞ்சும்.. விடைக் கிடைக்காத கேள்விகளைக் கேட்டு யாருக்கும் லாபமில்லை.
gizmofreak,
//மழை நேரத்தில் கடலை வியாபாரம் நன்றாக நடக்கும். எல்லாரும் கடை விரிக்கிறார்கள். சிலர் நல்ல கடலை விற்கிறார்கள். சிலர் மோசமான கடலை விற்கிறார்கள். எப்படி இருந்தாலும் நல்ல சில்லறை அள்ளுகிறார்கள்.
//
:-)))))
நல்ல உதாரணம்.
உங்கள் பார்வையில் நல்ல கடலையா மோசமான கடலையா ?
ஜோ உங்களிடமிருந்து ஆக்கப் பூர்வமான எதிர்வாதங்களை எதிர்பார்த்து வந்தால் இப்படி ஏமாற்றாதீர்கள்.. தொடருங்கள் உங்கள் விவாதத்தை...
வாங்க பொன்ஸ்.. ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறது. சரி..மேட்டருக்கு வருவோமா?
பொன்ஸ் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்கள் பல.. அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு விவாதம் நடத்தும்படி ஆகிவிட்டது எனக்கு வருத்தமாக இருக்கிறது :-(
//ரஜினி அரசியல் வாதி இல்லைங்கிறோம், ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது, அவருக்கு லாயக்கில்லைங்கிறோம். ஆனால், ரஜினியும் ஒரு காலத்தில் "இன்னாருக்கு ஓட்டு போடுங்க. இன்னாருக்குப் போடாதீங்க!" என்று சொன்னவர் தானே! அதுவும் அரசியல் கட்சிகள் பங்கு கொண்ட தேர்தலில் தானே! அப்புறம் அவர் அரசியல் சார்பற்றவர்னு இப்ப வந்து சொல்றது எப்படி சரியாகும்?//
அவர் அரசியல் சார்பற்றவர்னு நான் எங்கேயுமே சொல்லலியே..சொன்னேனா??? அவரின் அரசியல் செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை என தெளிவாக சொல்லியிருக்கிறேன்.
பதிவிலிருந்து:
"அதே போல் அவர் வரப்போகிறேன் என பூச்சாண்டி காட்டுவதும் எனக்கு பிடிக்கவில்லை."
//ரஜினி என்பவர் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படுபவர். மக்களால் முன்னிறுத்தப்படுபவர். இதே கேள்விகளை விஜய்யும், அஜீத்தும், சிம்புவும் எதிர்கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ரஜினி இல்லாமல் அந்த இடத்தில் ஒரு விஜய் வரும்போது அவரை நோக்கியும் இது போன்ற கேள்விகள் எழும்பிக் கொண்டு தான் இருக்கின்றன. //
//இங்கே தான் எனக்கும் ஒரு கேள்வி வருகிறது. கமல் படத்தை விமர்சித்து, அது ஏன் இன்னும் திருப்திகரமாக, சமூகப் பொறுப்போடு வந்திருக்கக் கூடாது என்று ஒரு கமல் ரசிகர் கேட்கும் போது, ஏன் ரஜினி ரசிகர்கள் அது போன்ற கேள்விகளைத் தலைவரிடம் கேட்பதில்லை? வேறு யாரும் கேட்டுவிடாத வண்ணம் பாதுகாக்க மட்டுமே விரும்புகிறார்கள்?//
இதனை நான் ஒப்புக்கொள்கிறேன்.. கேள்விகள் கேட்ககூடாது என சொல்லவில்லை. ஆனால் கேள்விகள் நியாயமான முறையில் கேட்கப்படவில்லை எனபதுதான் என் ஆதங்கம். மறுபடியும் பதிவிலிருந்து : "அக்கரையுடன் எழுதப்படும் பதிவுகள் என்பது உண்மையானால் அது சரியான விவாதக்களத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும்.." இதனைத்தான் நான் கேட்கிறேன்.. ரஜினியை பிடிக்கவில்லையா.. நேராக சொல்லுங்கள். தவறு இல்லை. அதை விடுத்து நல்லதுக்காக சொல்கிறேன் பேர்வழி என்று உபதேசம் பன்னுவது போல் மட்டம் தட்ட நினைப்பது கோழைத்தனம்.. இது சரியா இல்லையா? நான் குறிப்பிட்டுள்ள பதிவுகளை பாருங்கள். ஒரு பதிவில் ரஜினியை நாதாரி என பதிவரே சொல்லி இருக்கிறார்..
இன்னும் ஒன்றும் சொல்லி இருக்கிறார்..பார்க்கவும்.
நானும் ரஜினியிடம் இன்னும் தரமான படங்களை விரும்புகிறேன் எனவும் சொல்லி இருக்கிறேன். இதனை படிக்கவும். "..ரஜினி படங்களின் தரம் மேலும் உயரவேண்டும் எனவே நானும் விரும்புகிறேன். பல ரசிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும் என்றே நம்புகிறேன்."
ரஜினி 60 வயதில் டூயட் பாடக்கூடாது என சொல்வது சரியா? சிவாஜி படத்தால் தமிழ் சினிமாவின் தரம் குறைந்துவிடும் என்பது சரியா.. இது போன்றவைகளுக்கும் உங்களிடம் இருந்து பதில்கலை எதிர்பார்க்கிறேன்..
// ["பாபாவை நானும் தீவிரமா விமர்சிச்சேன்! சந்திரமுகியில் பிரபுவுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்..!" என்று நீங்க சேம் சைட் கோல்னா நான் அப்பீட் :)) ]
அப்படியெல்லாம் சொல்லல.. அப்பீட் ஆகாம திரும்பி வாங்க :-))))))
/ஜோ உங்களிடமிருந்து ஆக்கப் பூர்வமான எதிர்வாதங்களை எதிர்பார்த்து வந்தால் இப்படி ஏமாற்றாதீர்கள்.. தொடருங்கள் உங்கள் விவாதத்தை...
//
ஜோ,
நானும் இதையே எதிர்பார்க்கிறேன் என்பதை உண்ர்வீர்கள் என நம்புகிறேன்.
மனதின் ஓசை,
முதலில் நான் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன் .நான் கமல் ரசிகன் தான் .ஆனால் அதற்கு ரஜினி மேல் நான் இங்கு வைக்கும் விமரிசனத்துக்கும் சம்பந்தம் இல்லை .இன்னும் சொல்லபோனால் நானும் ரஜினியை ரசிப்பவன் தான் .பொதுவாக மோசமான திரைப்படங்களை வேண்டுமென்றே தியேட்டருக்கு சென்று பார்க்காமல் இருப்பது ,மொழி போன்ற நல்ல திரைப்படங்களை கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்த்து ஆதரவு கொடுப்பது என்னுடைய கொள்கை .இதில் இரண்டு பேருக்கு மட்டும் விதிவிலக்கு .கமல் ,ரஜினி .கண்டிப்பாக தியேட்டர் சென்று பார்ப்பதுண்டு .நான் அதிகம் பார்த்த திரைப்படங்களில் ஒன்று தில்லுமுல்லு ,ரஜினியும் அபார நகைச்சுவைக்காக.
ரஜினியை பற்றி குறை சொல்லும் போது ஏன் பிரசாந்தை சொல்லுவதில்லை ,விஷாலை சொல்லுவதில்லை ,விஜயை சொல்லுவதில்லையென்றால் ரஜினிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நான் அவர்களுக்கு கொடுப்பதில்லை .சரி விஷயத்துக்கு வருவோம் .ரஜினி மிக நல்லவராக இருக்கலாம் .ஒரு நடிகனாக வெறும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பவராக மட்டும் இருந்திருந்தால் அவரை விமர்சிப்பது தேவையில்லை .ஆனால் ரஜினியின் கடந்த 10 ஆண்டுகால கதாபாத்திரங்கள் சினிமாவினுள் மற்ற கதாபாத்திரங்களோடு மட்டும் பேசாமல் ,கையை பார்வையாளர்களை நோக்கி நீட்டி வசனம் பேசுகின்றன .சில நேரம் அவை அந்த கதாபாத்திரத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் ,ரஜினி என்கிற மனிதர் தங்களிடம் பேசுவதாக ரசிகர்கள் புரிந்து கொண்டு பதிலும் கொடுக்கிறார்கள் .சில காலம் வெறும் நடிகன் ரசிகன் கருத்து பரிமாற்றமாகவே இருந்து வந்த இந்த உக்தி ,சமீப காலங்களில் அதையும் தாண்டி சமூக அரசியல் விஷயங்களை பேசுவதாக இருக்கிறது .அது வெறும் சினிமா வசனமல்ல என்பதை நிரூபிக்க திரைக்கு வெளியிலும் ரஜினியின் அரசியல் சமூக ஈடுபாடு இருந்தது .ஆனால் அரசியல் சமூக விஷயங்களில் அவரின் மிகவும் மேம்போக்கான நிச்சயமற்ற கருத்துக்களின் காரணமாக அது வெறும் சினிமா வியாபாரத்திற்காக மட்டுமே செய்யப்படும் ஜிகினா வேலையோ என்ற ஐயம் எழுகிறது .வருவாரா ,வரமாட்டாரா ,சொல்வாரா ,சொல்ல மாட்டாரா ,இப்படி இருக்குமா ,இருக்காதா என்று எதையும் ஊகத்திலேயே உலவ விட்டு ,அதுவும் தனக்கு அதிலே ஆர்வம் இல்லாதது போலவும் ,மற்றவர்களே தன்னை அப்படி நினைக்கிறார்கள் என்ரு நிறுவுவதற்காக மற்ற கதாபாத்திரங்களின் மூலமோ ,பாடல்களின் மூலமோ ,வசனங்கள் மூலமோ தொடர்ந்து ஒரு பரபரப்பை உருவாக்கி அதை தன் படங்களின் வியாபாரத்துக்கு உபயோகித்துக்கொள்ளும் ஒரு ராஜதந்திர வழியே இது என்பது என் கருத்து .இது வெறும் சினிமா சம்பந்தப்பட்டது இல்லாமல் ,சமூக அரசியல் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் தான் இந்த விமரிசனம் .இல்லையென்றால் ரஜினி என்னும் நடிகனை எனக்கு நேற்றும் ,இன்றும் என்றும் பிடிக்கும்.
ரஜினி இந்த பரபரப்புகளின் மூலம் பயனடைவதை நிறுத்தாத வரை ,விமர்சனங்கள் மட்டும் வரக்கூடாது என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்பது சற்று அதிகப்படி .மற்றபடி ரஜினியை மட்டும் ஏன் குறை சொல்லுகிறீர்கள் என்றால் ,கணக்கில் எடுத்துக்கொள்ளுவதற்கும் ஒரு தகுதியும் ,திறமையும் வேண்டும்.
சிரிப்புதான் வருகிறது மனதின் ஓசை... நீங்கள் அழுவதைப்பார்த்து ....அவன் மட்டும் பண்ணலையா இவன் மட்டும் பண்ணலையான்னு கேட்கிறீர்கள் .. கமல் போன்ற சிலர் , ரஜினியளவு உச்சத்தில் இல்லாதபோதே ஏதோ ஓரளவுக்காவது முயற்சி செய்கிறார்கள்.. விஜய் , விஜய்காந்த் போன்றவர்கள் நல்ல படம் நடிக்க லாயக்கற்றவர்கள் ... ரஜினியிடம் கொஞ்சம் எதிர்பார்ப்பது தவறு என்கிறீர்கள். நல்லது ..
ஜோ கேட்ட கேள்விக்கு என்ன பதில்? எதிர்கட்சி என்ன குற்றம் சாட்டினாலும், உங்கள் ஆட்சியில் நடைபெறவில்லையா என்ற தொணியில் தான் உங்கள் மொத்த வாக்குவாதமும் உள்ளது . கேலியான தொணியில் பதிலளிப்பதற்கு 'விவாதமேடை' யை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
சிவாஜி படத்தில் 'காவேரி' வேறா? வெட்கமாயில்லை .. தமிழனின் வாழ்வுப்பிரச்சினையை காசாக்க அவர்களுக்குத்தான் வெட்கமாயில்லையென்றால், நீங்கள் ஏன் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் ?
கன்னட சலுவாலியேயின் (முன்னால்) உறுப்பினர் , தமிழ் படம் திரையிடப்படும் தியேட்டர்களில் கல்லெறிந்தவர் , இன்றும் தனக்குப்பிடித்த பேச்சாளராக வட்டால் நாகராஜ் என்று சொல்பவர் காவேரி காவேரி என நீலிக்கண்ணீர் வடிப்பது முரண்நகை (நகைக்க முடியவில்லை என்றாலும்) .. அவரைச் சொல்லி குற்றமில்லை , 'தலைவர்' என்று படித்த ஆபிசர் ஆகி இருக்கும் தமிழ் இளைஞர்களே சொல்லும்போது , குணிந்து கொடுக்கும்போது, உதைப்பவனை குறைகூற என்ன இருக்கிறது ?
விவேகானந்தனின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன் ...
ஜோ... நீங்கள் என் பதிவில் சொன்ன பின்னூட்டத்தை ஓசை குறைகூறுகிறார் ;) ;)
வருகைக்கு நன்றி தாஸ்.
கொஞ்சம் பதிவையும் படித்து விட்டு பின்னூட்டம் போட்டால் பரவயில்லை. நீங்கள் வயதான ரஜினி டூயட் பாடுவது தவறு என்று சொன்னீர்கள்.. அதற்கான என பதிலைத்தான் முதலில் கொடுத்து இருக்கிறேன்..அப்படி நீங்கள் சொன்னது தவறு என ஒப்புக்கொள்கிறீர்களா?? இல்லையெனில் அதனை பற்றிய உங்கள் பதிலை தெரிவிக்கவும்.
//சிரிப்புதான் வருகிறது மனதின் ஓசை... நீங்கள் அழுவதைப்பார்த்து ...//
அழுதேனா???? சரி பரவாயில்லை. தங்களை சிரிக்க வைத்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது..
ஆனால் தயவு செய்து பதிவில் குறிப்பிட்டுள்ளவைகளுக்கு தங்கள் பதில் என்ன என சொன்னால் சரியாக இருக்கும். எதிர்வாதம் இல்லை என்றால் தனியே சென்று நன்றாக சிரிக்கவும்.. நன்றி.
ஜோ உங்கள் கருத்துக்களில் உள்ள நியாயமானக் கோபத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது..
இதற்கு விரிவான ஒரு பதிலைக் கொடுக்க விரும்பினாலும் அவசர நிலையில் ரஜினி ரசிகனாய் மட்டுமின்றி ஒரு சாதரணப் பார்வையாளனாகவும் நான் சொல்ல விரும்புவது..
ரஜினியிடம் மக்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்... அது அவருக்கும் தெரியும்.. ரஜினியும் ஒரு மனிதர்..அவருக்கும் நம் எல்லாரையும் போல் நிறைகுறைகள் உண்டு..ரசிகர்கள் நிறையைக் கொண்டாடுகிறோம்.. அவரைப் பிடிக்காதவர்கள் குறையைக் கொடிப் பிடிக்கிறார்கள்.. உங்களைப் போல நடுநிலையாளர்கள் இரண்டுக்கும் இடைப்பட்டு நிற்கிறீர்கள்...
படங்களில் அரசியல் பேசிய ரஜினி சந்திரமுகியில் அரசியல் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது...
ரஜினியாகத் திட்டமிட்டு அரசியல் உட்குத்து வசனங்களைக் கடந்தப் பத்து ஆண்டுகளில் பேசியதாய் கூறுவது சரியாகப் படவில்லை...
ஒரு சராசரி தமிழ் ஹீரோ பேசும் வசனங்களையே அவரும் பேசினார்... ஆனால் அதற்கு சாயம் பூசப்பட்டது என்பதே என் கருத்து... முத்து படம் மட்டும் இதற்கு விதிவிலக்கு.. காரணம் முத்து வெளியானக் காலக்கட்டத்தில் ரஜினி திரையில் மட்டுமின்றி திரைக்கு வெளியிலும் அரசியல் பேசினார்... அது நாடறியும்... இன்னும் இருக்கு நிறைய பேச.. நிதானமாய் பேசுவோம் ஜோ..
//ரஜினி 60 வயதில் டூயட் பாடக்கூடாது என சொல்வது சரியா? //
சரியே..
ஓசை, ஏனோ ரஜினி மீதான விமர்சனங்கள் மட்டும் தான் உங்கள் காதில் விழுதோ என்னவோ.. விஜயகாந்த் அது போன்ற சின்னப் பெண்களுடன் நடிக்கும் போதும் பேசுறாங்க...
நமீதாவுடன் தானும் டூயட் பாடி, சிபியையும் பாட விடும் சத்யராஜும் சரி, ஹீரோவா நடிக்கிற மகனை வச்சிகிட்டு, மும்தாஜ் கூட ஜோடி போடும் வீராச்சாமியையும் சரி.. எல்லாரையும் இங்க விமர்சனம் செய்துகிட்டு தான் இருக்காங்க..
அந்த வகையில் சத்யராஜ் கொஞ்சம் தேவலாம் என்பது என் எண்ணம். இப்பல்லாம் குஷ்புவோட நிறுத்திட்டாரு... (யார் கண்டா, நாளைக்கே நிலாவோட திரும்பவும் மரத்தச் சுத்தி ஓடத் தொடங்கினாலும் தொடங்குவார்!)
வயதான எம்.ஜி.ஆர், மஞ்சுளா, லதாவோடெல்லாம் நடித்த போது இந்த விமர்சனங்கள் வரலைங்கிறீங்களா? சிவாஜி கூட ரொம்ப வயதான பின்னால், சின்ன வயசு ஹீரோயின்களோட நடிச்சதை விமர்சனம் செய்துட்டுத் தான் இருந்தாங்க.. உங்களுக்கு ரஜினி பற்றிய விமர்சனம் மட்டுமே செய்தியாகிட்டதோன்னு சந்தேகம் எனக்கு..
அப்புறம் நீங்க சொல்லும் சம்பிரதாயமற்ற சொற்களால் ரஜினியை விமர்சிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால், அப்படி விமர்சனம் செய்பவர்கள், ஹீரோ வொர்ஷிப் என்ற சித்தாந்தத்தையே வெறுப்பவர்கள். அவர்கள் எல்லாரையும் இது போல் விமர்சிப்பார்கள். நாளை விஜய், விஷால் என்று எந்த நடிகனுடைய பிறந்தநாளுக்காக மாணவர்கள் படிப்பை விட்டுவிட்டு வந்தாலும் இந்த விமர்சனத்தை வைப்பார்கள்..
//சிவாஜி படத்தால் தமிழ் சினிமாவின் தரம் குறைந்துவிடும் என்பது சரியா.. //
என்னைக் கேட்டால் படம் வந்து பார்த்தால் தான் சொல்ல முடியும். அந்நியனே தரமான படம் இல்லை; டெக்னிகலாக நல்லா இருந்தது என்பதைத் தவிர அதுவும் ஒரு ஹீரோயிச மசாலா தான்... அந்த ரெக்கார்டை வைத்துப் பார்க்கையில், சிவாஜியும் அத்தனை தரமில்லாத படம் தான். ஆனால், அன்னியனை விட சிவாஜி இன்னும் சுறுசுறுப்பாக ஓடும். இதற்கு தீவிர ரசிகர்கள், என்னை/ஜோவைப் போன்ற மிதவாத ரசிகர்கள் என்று எல்லாரும் தான் காரணம் என்றாலும், படம் எடுப்பவர்களுக்கும் கொஞ்சமாவது சமூகப் பொறுப்பிருக்க வேண்டும் என்று தான் அந்தப் பதிவர் வருத்தப்பட்டிருந்தார். அதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அங்கும் ரஜினி தனியாக இல்லை.. ஜோ சொல்வது போல், சகலகலா வல்லவன், ஜெமினி முதற்கொண்டு எல்லா படங்களும் பட்டியலில் இருந்தவையே..
Well said .
My 3 year old kid likes
Rajni and vadivel . as long as he is entertaining my family , i m fine .
வயதானவர் டூயட் பாடுகிறார் என்று சொன்னதுதான் பிரச்சினையா? ரஜினி, கமல், விஜய்காந்த், சரத், ராஜேந்தர் .. இவர்களில் வயது மூ..த்தவர் ரஜினி .. Descending orderயில் ரஜினி நிறுத்தினால் எல்லோரையும் நிறுத்த சொல்லலாம் ..
நீங்கள் பொதுவாக 'மற்றவரையெல்லாம்' என்று சொன்னதால நானும் பொதுவாகவே பதில் சொல்லி விட்டேன் ..
;) :)
ஸ்மைலி அப்பெண்ட் பண்ணிக்கொள்ளவும்
//இன்னும் இருக்கு நிறைய பேச.. நிதானமாய் பேசுவோம் ஜோ..//
கண்டிப்பா பேசுவோம் தேவ்!நன்றி!
Miga sariyana karuthukkal Joe!!!
avar cinema jeyikka, arasiyala payanbaduthunadha yaaraalayum marukka mudiyadhu...
Avar sonnadhey than... Sambaadhikka vera ethanayo vazi irukku... (Cinema vil)Arasiyal vendamey...
-Padhivai mulusaa padichum manam porukkaadha oru rajini piriyan.
//'தலைவர்' என்று படித்த ஆபிசர் ஆகி இருக்கும் தமிழ் இளைஞர்களே சொல்லும்போது , குணிந்து கொடுக்கும்போது, உதைப்பவனை குறைகூற என்ன இருக்கிறது ?//
40 ரூபா காசு கொடுத்து டிக்கெட் வாங்குறோம். மூணு மணி நேரம் தியேட்டருக்குள்ளா பொழுதைக் கழைக்குறோம். எங்களுக்குத் தேவை நாங்க சந்தோஷமா கைதட்டி, விசிலடிச்சி கொண்டாட அவரோட ஸ்டைலு.
அதை அவரு செய்யுறாரு. நாங்க கொடுக்குற காசுக்கு அவரோட வேலை நல்லா ஸ்டைலா சண்டை போடணும். ஒரு இண்ட்ரோ ஸாங்கு, ரெண்டு டூயட் பாட்டு பாடணும். அதை அவரு செய்யறாரு. நாங்க குடுக்குற காசுக்கு உண்டானதை நாங்க எதிர்பார்க்குறோம்.
பிடிக்காதவங்க தியேட்டருக்கு போறதில்லை. இல்லாட்டி அவங்களுக்கு பிடிக்குற நடிகர் நடிச்ச படப் ஓடுற தியேட்டருக்கு போறாங்க.
இதுல எங்க இருந்து அவரு உதைக்குறாரு? நாங்க வாங்குறோம்னெல்லாம் வருது?
தலைவர் னு சும்மா அன்பால மரியாதையா சொல்றோமே தவிர ஒவ்வொண்ணுக்கும் அவருகிட்டயா அனுமதி வாங்கிகிட்டு செய்யுறோம். எங்க லைஃப் அது பாட்டுக்கு போகுது.
-இப்படிக்கு இன்னொரு படித்த ஆஃபீசர்.
:-)
மனதின் ஓசை,
சிகப்பில் உள்ளவற்றுக்கு என் கருத்து கேட்டிருந்தீர்கள்.
//வயதான காலத்தில் டூயட் பாடுகிறார்//
இதில் ரஜினியை குறை சொல்ல முடியாது .எம்.ஜி.ஆர் சிவாஜி தொட்டு யாரும் இதற்கு விதிவுலக்கல்ல.
//ரஜினியின் அரசியல் ஈடுபாடு/அணுகுமுறை//
இதைப்பற்றி தான் என் முந்தைய பின்னூட்டங்கள் பேசின.
//3.ரஜினி தரமான படங்களில் நடிக்க வேண்டும்.//
ரசிகர்களை ,தயாரிப்பாளர்களை திருப்தி படுத்த இப்படிப்பட்ட படங்களில் தான் ரஜினி நடிக்க முடியும் என்று ஒரு வட்டம் இருக்கிறது .தன்னால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்பதால் பரீட்சார்த்தமான படங்களில் நடிப்பதில் ரஜினிக்கு சிக்கல் இருக்கலாம் .ஆனால் தனக்கிருக்கும் செல்வாக்கை ,ரசிகர் கூட்டத்தை மூலமாக வைத்து தமிழ் சினிமாவுக்கு சில நல்ல விஷயங்களை செய்ய முடியும் என நான் நினைக்கிறேன் .சரி தன்னால் நடிக்க முடியாவிட்டால் கூட சங்கர் போல ,பிரகாஷ்ராஜ் போல இளைய தலைமுறையினரை ஊக்குவித்து நல்ல திரைப்படங்களை தயாரிக்கலாம் .தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு அவர் பங்கு இன்னும் அதிகமாக இருக்கலாம் .பிரகாஷ் ராஜை போல ,கமல் ஹாசனைப் போல நல்ல முயற்சிகளுக்கு மூல தனம் கொடுக்கலாம்.
//4.சிவாஜியால் தரம் கெட்டுவிடும்//
இது ஒரு ஊகம் தான் .என்னைப் பொறுத்தவரை சங்கர் நல்ல தொழில் நுட்ப கலைஞரே தவிர பாரதிராஜா போன்ற இயக்குநர் திலகம் அல்ல .இங்கே ரஜினி நடிப்பதால் சிவாஜி திரைப்படத்தை யாரும் சந்தேகிக்கவில்லை .ஆனால் கடந்த காலத்தில்(சில வருடங்களாக) தமிழ் சினிமா நல்ல பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் ஏ.வி.எம் என்ற பெரிய நிறுவனம் தன்னுடைய வியாபார வல்லமையைக் கொண்டு ஒரு வணிகப்படத்தை வெளியிட்டு அந்த வளர்ச்சியை திசை திருப்புவது நடந்திருக்கிறது .சகலகலா வல்லவன் ,முரட்டுக்காளை ,ஜெமினி போன்றவை உதாரணங்கள் .இப்போது மொழி ,பருத்தி வீரன் போன்ற படங்களின் வெற்றி ஓரு நல்ல சூழ்நிலையை உருவாக்கியுள்ள போது ஏ.வி.எம் ,சங்கர் ,ரஜினி கூட்டணி வெறும் வணிக வெற்றியை கருத்தில் கொண்டு இந்த ஆரோக்கிய ஓட்டத்தின் மீதுள்ள கவனத்தை சிதறடிப்பார்களோ என்ற சந்தேகம் தான்.
//5.ரஜினிக்கு நடிக்கத்தெரியாது.//
இது ஒரு நல்ல ஜோக் .என்னை பொறுத்தவரை எம்.ஆர்.ராதா,நாகேஷ்,பாலையா போன்றவர்களை கணக்கிலெடுக்காமல் ஹீரோ நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் நடிகர் திலகம் , கமல் ஹாசனுக்கு அடுத்து எனக்கு பிடித்த நடிகர் ரஜினி தான்.
பொன்ஸ்,
உங்களுடன் கிட்டத்தட்ட எல்லா கருத்துக்களிலும் மறுபடுகிறேன்.
//ரஜினி 60 வயதில் டூயட் பாடக்கூடாது என சொல்வது சரியா? //
சரியே..
இல்லை.. அவ்வாறு சொல்வது நிச்சயம் தவறுதான்.
//ஓசை, ஏனோ ரஜினி மீதான விமர்சனங்கள் மட்டும் தான் உங்கள் காதில் விழுதோ என்னவோ.. விஜயகாந்த் அது போன்ற சின்னப் பெண்களுடன் நடிக்கும் போதும் பேசுறாங்க...
நமீதாவுடன் தானும் டூயட் பாடி, சிபியையும் பாட விடும் சத்யராஜும் சரி, ஹீரோவா நடிக்கிற மகனை வச்சிகிட்டு, மும்தாஜ் கூட ஜோடி போடும் வீராச்சாமியையும் சரி.. எல்லாரையும் இங்க விமர்சனம் செய்துகிட்டு தான் இருக்காங்க..//
பொன்ஸ். என் எழுத்திலோ இல்லை உங்கள் புரிதலிலோ தவறு இருக்கிறது. நிச்சயமாக நான் "மற்றவர்கள் செய்யவில்லையா? ஏன் ரஜினியை மட்டும் குறை சொல்கிறீர்கள்?" என எங்குமே கேட்கவில்லை. பதிவை மறுபடியும் படித்துப்பார்த்தேன்.
அப்படி சொன்னதாக தெரியவில்லை. ஆனால் பதில்கள் அவ்வாறு சொன்னதாக வந்து இருக்கிறது.. நான் யாரையும் ஒப்பிட்டு சொல்லவே இல்லை.. அவ்வாறு வந்துவிடக்கூடாது என்றுதான் ஜோவிற்கு சொன்ன பதிலில் கூட ரஜினி Vs கமல் என ஆகிவிட வேண்டாம் என்று சொன்னேன்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்பதே என் வாதம்.எனவே அதற்கு சில எடுத்துக்காட்டுக்கள் கொடுத்தேன். இது தவறு என சொல்வது திரைத்துறையை பற்றி புரிந்துகொள்ளாமல் சொல்வதாகவே எனக்கு படுகிறது. இங்கு திரையில் தெரிவதே வயது. அது ஒப்புக்கொள்ளும்படியாக இல்லையென்றால்தான் தவறு.(உதாரணம் : பாபா ரஜினி). இதனைத்தான் என் வாதமாக வைத்து உள்ளேன். அவர்கள் வேஷம் போடுகிறார்கள். திரையில் தெரிவது அவர்கள் உண்மை கதையோ அல்லது தொழிலோ, உண்மை வயதோ இல்லை. அவன் படிக்காதவந்தானே..என்ன இஞ்சினியர் வேடத்தில் எப்படி நடிக்கலாம் என்பது எப்படி தவறான வாதமோ அப்படியேதான் இந்த வாதமும்.
ராஜேந்தர், சத்தியராஜ் எல்லாரும் டூயட் பாடினால் அது தவறு என சொல்லமாட்டேன்.. அது பொருந்தவில்லை என்றால் நிச்சயமாக தவறுதான்..
//அப்புறம் நீங்க சொல்லும் சம்பிரதாயமற்ற சொற்களால் ரஜினியை விமர்சிப்பதில் எனக்கும் உடன்பாடில்லை. //
:-) நானும் ஒத்துப்போகும் கருத்து.
//ஆனால், அப்படி விமர்சனம் செய்பவர்கள், ஹீரோ வொர்ஷிப் என்ற சித்தாந்தத்தையே வெறுப்பவர்கள். அவர்கள் எல்லாரையும் இது போல் விமர்சிப்பார்கள். நாளை விஜய், விஷால் என்று எந்த நடிகனுடைய பிறந்தநாளுக்காக மாணவர்கள் படிப்பை விட்டுவிட்டு வந்தாலும் இந்த விமர்சனத்தை வைப்பார்கள்..//
இது 100% உண்மை என நம்பமுடியாவிட்டலும் அப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
//சிவாஜி படத்தால் தமிழ் சினிமாவின் தரம் குறைந்துவிடும் என்பது சரியா.. //
//என்னைக் கேட்டால் படம் வந்து பார்த்தால் தான் சொல்ல முடியும்.//
அதையேதன் நானும் சொல்லி இருக்கிறேன்.
//அந்நியனே தரமான படம் இல்லை;//
இது தவறு.. தரம் என்பதை எப்படி நிர்னயிக்கிறீர்கள்.. எந்த ஒரு படமும் பார்ப்பவனை யோசிக்கவைத்தாலோ, மகிழ்ச்சியடைய வைத்தாலோ ரசிக்க வைத்தாலோ அது தரமான படம்தான். ( உடனே மூன்றாந்தர படங்களை பற்றி அதையும் ரசிக்கிறார்களே என யாரும் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்). அன்னியனை பொருத்த அளவில் அதன் மையக்கருத்து அலட்சியங்கள் ஆபத்தான்பவை.. அது அந்த படம் பார்த்த ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்தது நல்ல வழியில்.. அந்த அளவில் அது தரமான படமே என அடித்து சொல்லுவேன்....
//படம் எடுப்பவர்களுக்கும் கொஞ்சமாவது சமூகப் பொறுப்பிருக்க வேண்டும் என்று தான் அந்தப் பதிவர் வருத்தப்பட்டிருந்தார். அதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.//
:-( பதிவையும் பின்னூட்டங்களையும்
முழுதும் படித்தீர்களா??
//My 3 year old kid likes
Rajni and vadivel . as long as he is entertaining my family , i m fine . //
நன்றி அனானி.
//வயதானவர் டூயட் பாடுகிறார் என்று சொன்னதுதான் பிரச்சினையா? //
தாஸ்.. அது பிரச்சினை இல்லை. (அது மட்டுமே பிரச்சினை இல்லை.) நீங்கள் சொன்னது தவறு என சொன்னேன்..அதற்கான என் வாதத்தையும் வைத்துள்ளேன். மேலே சொன்ன பதிலிலும் இருக்கிறது. படித்து எதிர்வாதம் இருந்தால் வைக்கவும். நன்றி.
//Avar sonnadhey than... Sambaadhikka vera ethanayo vazi irukku... (Cinema vil)Arasiyal vendamey...//
வருகைக்கும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அனானி.
//40 ரூபா காசு கொடுத்து டிக்கெட் வாங்குறோம். மூணு மணி நேரம் தியேட்டருக்குள்ளா பொழுதைக் கழைக்குறோம். எங்களுக்குத் தேவை நாங்க சந்தோஷமா கைதட்டி, விசிலடிச்சி கொண்டாட அவரோட ஸ்டைலு.
அதை அவரு செய்யுறாரு. நாங்க கொடுக்குற காசுக்கு அவரோட வேலை நல்லா ஸ்டைலா சண்டை போடணும். ஒரு இண்ட்ரோ ஸாங்கு, ரெண்டு டூயட் பாட்டு பாடணும். அதை அவரு செய்யறாரு. நாங்க குடுக்குற காசுக்கு உண்டானதை நாங்க எதிர்பார்க்குறோம்.
பிடிக்காதவங்க தியேட்டருக்கு போறதில்லை. இல்லாட்டி அவங்களுக்கு பிடிக்குற நடிகர் நடிச்ச படப் ஓடுற தியேட்டருக்கு போறாங்க.
இதுல எங்க இருந்து அவரு உதைக்குறாரு? நாங்க வாங்குறோம்னெல்லாம் வருது?
தலைவர் னு சும்மா அன்பால மரியாதையா சொல்றோமே தவிர ஒவ்வொண்ணுக்கும் அவருகிட்டயா அனுமதி வாங்கிகிட்டு செய்யுறோம். எங்க லைஃப் அது பாட்டுக்கு போகுது.
-இப்படிக்கு இன்னொரு படித்த ஆஃபீசர். //
மிக்க நன்றி சிபி.. மிகத்தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். இதனை போன்ற எதிர்பார்ப்புடன் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள் எனத்தான் புரியவில்லை. இவர்களை கணக்கிலெடுக்கவே கூடாது என சொல்கிறார்களா???? :-(
ஜோ,
இத, இத, இதத்தான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன்.. மிக்க நன்றி.. :-)))))))
////வயதான காலத்தில் டூயட் பாடுகிறார்//
இதில் ரஜினியை குறை சொல்ல முடியாது .எம்.ஜி.ஆர் சிவாஜி தொட்டு யாரும் இதற்கு விதிவுலக்கல்ல.//
இது குறையே இல்லை என்றுதான் சொல்கிறேன். பொன்ஸுக்கு கொடுத்துள்ள பதிலை சிரமம் பார்க்காமல் படிக்கவும்.
////ரஜினியின் அரசியல் ஈடுபாடு/அணுகுமுறை//
இதைப்பற்றி தான் என் முந்தைய பின்னூட்டங்கள் பேசின.//
நிச்சயமாக இது விவாதிக்கப்பட வேண்டியது. அரோக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை. இதில் ரஜினியின் செயல்பாடுகளில் எனக்கும் பல அதிருப்திகள் உள்ளன.. சரியான களத்தில் பேச விருப்பமே.
////3.ரஜினி தரமான படங்களில் நடிக்க வேண்டும்.//
ரசிகர்களை ,தயாரிப்பாளர்களை திருப்தி படுத்த இப்படிப்பட்ட படங்களில் தான் ரஜினி நடிக்க முடியும் என்று ஒரு வட்டம் இருக்கிறது .தன்னால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்பதால் பரீட்சார்த்தமான படங்களில் நடிப்பதில் ரஜினிக்கு சிக்கல் இருக்கலாம் .ஆனால் தனக்கிருக்கும் செல்வாக்கை ,ரசிகர் கூட்டத்தை மூலமாக வைத்து தமிழ் சினிமாவுக்கு சில நல்ல விஷயங்களை செய்ய முடியும் என நான் நினைக்கிறேன் .சரி தன்னால் நடிக்க முடியாவிட்டால் கூட சங்கர் போல ,பிரகாஷ்ராஜ் போல இளைய தலைமுறையினரை ஊக்குவித்து நல்ல திரைப்படங்களை தயாரிக்கலாம் .தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு அவர் பங்கு இன்னும் அதிகமாக இருக்கலாம் .பிரகாஷ் ராஜை போல ,கமல் ஹாசனைப் போல நல்ல முயற்சிகளுக்கு மூல தனம் கொடுக்கலாம்.//
தன்களுடைய புரிதல் மகிழ்ச்சி அளிக்கிறது.. அதே போல் உங்கள் எதிர்பார்ப்பும் நியாயமானதாவே தோன்றுகிறது. அர்ரோகியமாக விவாதிக்கப்பட வேண்டிய இன்னொறு விஷயம்.
//4.சிவாஜியால் தரம் கெட்டுவிடும்//
//இது ஒரு ஊகம் தான் .என்னைப் பொறுத்தவரை சங்கர் நல்ல தொழில் நுட்ப கலைஞரே தவிர பாரதிராஜா போன்ற இயக்குநர் திலகம் அல்ல .இங்கே ரஜினி நடிப்பதால் சிவாஜி திரைப்படத்தை யாரும் சந்தேகிக்கவில்லை .ஆனால் கடந்த காலத்தில்(சில வருடங்களாக) தமிழ் சினிமா நல்ல பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் ஏ.வி.எம் என்ற பெரிய நிறுவனம் தன்னுடைய வியாபார வல்லமையைக் கொண்டு ஒரு வணிகப்படத்தை வெளியிட்டு அந்த வளர்ச்சியை திசை திருப்புவது நடந்திருக்கிறது .சகலகலா வல்லவன் ,முரட்டுக்காளை ,ஜெமினி போன்றவை உதாரணங்கள் .இப்போது மொழி ,பருத்தி வீரன் போன்ற படங்களின் வெற்றி ஓரு நல்ல சூழ்நிலையை உருவாக்கியுள்ள போது ஏ.வி.எம் ,சங்கர் ,ரஜினி கூட்டணி வெறும் வணிக வெற்றியை கருத்தில் கொண்டு இந்த ஆரோக்கிய ஓட்டத்தின் மீதுள்ள கவனத்தை சிதறடிப்பார்களோ என்ற சந்தேகம் தான்.//
எனக்கு AVM பற்றி தாங்கள் சொல்லியுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆச்சரியமாக உள்ளன.. அதாவது நான் அந்த கால கட்டங்களை கூர்ந்து கவனித்தது கிடையாது..எனவே சரியா தவறா என தெரிந்தவர்கள்தான் கூறவேண்டும். ஆனால் ஒரு படம் வெற்றியடைந்தால் அது போல் பல படங்கள் வர ஆரம்பிக்கும் என்பது உண்மையானலும் கூட நல்ல ப்டம் எடுப்பவர்கள் நல்ல படம்தான் கொடுப்பார்கள். அதற்கான ஆதரவும் நிச்சயம் மக்களிடம் இருந்து கிடைக்கும்.இது நிதர்சனம்.. நல்ல கருத்துள்ள, சரியாக எடுக்கப்பட்ட படம் எதும் மசால படங்களின் வெற்றியால் ஓடாமல் போய் இருக்கிறதா??
////5.ரஜினிக்கு நடிக்கத்தெரியாது.//
இது ஒரு நல்ல ஜோக் .என்னை பொறுத்தவரை எம்.ஆர்.ராதா,நாகேஷ்,பாலையா போன்றவர்களை கணக்கிலெடுக்காமல் ஹீரோ நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் நடிகர் திலகம் , கமல் ஹாசனுக்கு அடுத்து எனக்கு பிடித்த நடிகர் ரஜினி தான்.//
:-) நன்றி. ரஜினியை விட நன்றாக நடிக்கத்தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்..இது உண்மை. நான் அவர் நடிப்பில் நெ.1 என எப்பொதும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டேன். ஆனால் நடிக்கத்தெரியாது எனப்து வெற்றுவாதம் என்படஹி மட்டுமே சொல்லியுள்ளேன்.எனக்கு தெரிந்து தமிழகத்தில் இருந்து நடிப்பின் எல்லையை தொட்டவர்கள் சிவாஜியும் கமலும். எனக்கு கமல் மேல் அதிகமான மதிப்பு இருக்கிறது.. என் முந்தைய பதிவில் கூட நான் மிகவும் மதிக்கும் கமல் எனவே சொல்லி இருப்பேன். அவரின் நடிப்பும், நடனமும், தொழில்நுட்ப அறிவும், சினிமா சம்பந்த்ப்பட்ட எல்லா விஷயத்திலும் அவரில் ஆற்றல் என்னை பிரமிக்கவைப்பது. அவரின் பேட்டிகளையும் படங்களையும் விரும்பிப்பார்ப்பேன். அதே போல் ரஜினி மீது ஒருவித ஈர்ப்பு உள்ளது. அத்தகைய ஈர்ப்பினால்தான் அவர் ரசிகர்களை கவர்ந்தார். அவரின் ரசிகர்கள் அவரிடம் அவரின் படங்களை ரசிப்பதையும் தாண்டி அவர்மேல் ஒருவித அபிமானத்தையுன் அன்பையும் வைத்து விடுகிறார்கள்.
//ரஜினி படத்தில் மட்டும் இப்படிப்பட்ட துதிபாடும் வசனங்கள் வருவதை அழகாக வெளிப்படுட்தி உள்ளீர்கள்.//
//கமல்,அமிதாப், ஷாருக், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், இப்படி அடுக்கிகொண்டே போக முடியும். //
//மற்றவர்கள் செய்யவில்லையா? ஏன் ரஜினியை மட்டும் குறை சொல்கிறீர்கள்?" என எங்குமே கேட்கவில்லை. //
மேலோட்டமாக உங்கள் பதிவையும் பின்னூட்டங்களையும் திரும்பவும் வாசிக்கும்போது, பிடித்துபோட்டவைகள்தான் மேலே சொன்ன மூன்று வரிகளும் ..
சரி விடுங்கள்..நமக்குள் என்ன சொத்து தகராறா? ;) நண்பர்களாகவே கருத்தை பரிமாறிக்கொள்வோம் ..
//திரையில் தெரிவது அவர்கள் உண்மை கதையோ அல்லது தொழிலோ, உண்மை வயதோ இல்லை. //
உண்மைதான் ..ஆனால் பாருங்கள் ..கமலும், சுஹாசினியும் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை .. அருண் விஜய் ,ஸ்ரீதேவி அருண்குமார் மற்றும் அவரது சகோதரிகள் யாரும், அருண் விஜயோடு ஜோடியாக நடித்ததில்லை ..ஏன் .. நடிப்புதானே .. ஆனால் உண்மைகளுக்கும் நடிப்பில் இடமுண்டு ..
சிலம்பரசனும் , அம்பிகாவும் ஜோடியாக நடித்தால் அருவருப்பாக பார்க்கப்படும் விஷயம், ரஜினியும் த்ரிஷாவும் நடித்தால் அழகாகுமா?
ஒப்புக்கொள்ளப்பட்டால் போதும் என்கிறீர்கள். படையப்பாவில் ரஜினி பி.ஈ படித்து விட்டு , கல்லூரியிலிருந்து நேராக வீடு திரும்பும் வயதை ஒத்திருந்தார் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது நயந்தாராவை லவ்விடும் வயதில் ரஜினி பொருந்தியிருந்தார் என்று நினைக்கிறீர்களா?..
//அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்...அப்படியே அவரை நம்பி காத்திருந்தாலும், பாதிக்கப்பட்டதாக சொல்வது அவர் ரசிகர்கள்தானே?உங்களுக்கு ஏன் இந்த நீலிக்கண்ணீர்?//
அடப்பாவிகளா!! (இது ஒரு எஃபெக்ட்டுக்காகத்தான்) . அவர் அரசியலுக்கு வந்தால் பாதிக்கப்படப்போவது அவரது ரசிகர்களா.. மொத்த தமிழ்நாடும் தமிழர்களும்தானப்பா .. சினிமாக்காரர்களே தங்களை இரட்சிக்க வந்த பிதாமகர்களாக சித்தரிக்கும் அசிங்கங்கள் அரங்கேறும் இடமாக தமிழகம் இருப்பதை தாங்கமுடியவில்லை. அது ரஜினியாக இருக்கட்டும், விஜய்காந்தாக இருக்கட்டும் . வேறு எவனாகவும் இருக்கட்டும்
ரஜினியைப் போய் தரமான படங்களில் நடிக்கவேண்டும் என்று சொன்னது தவறுதான் ;) ..நான் என் பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல, சந்திரமுகி வெற்றி பெற்றது ரஜினி நயன்தாராவுடன் டூயட் பாடியதாலா? ஒரு நடுத்தரவயது மருத்துவராக ரஜினி வந்திருந்தாலும் அது வெற்றி பெற்றிருந்திருக்கும் ,பலரின் வாழ்க்கை உயர்ந்திருக்கும்..blah..blah.. சரி என்னுடைய பதிவில் சொன்னது போல, ஒரே ஊரிலிருந்து வந்த பிரகாஷ்ராஜ் நல்ல படங்களை தயாரிக்க எத்தளிக்கும்போது , 'ஒரு துளி வியர்வை...' என்று பாடும் ரஜினி , தன்னை வளர்த்த தமிழ்த்திரைத்துறைக்கு நல்லபடங்களை தயாரிக்கவாவது முன்வரலாமே.. அல்லது 'ஒரு துளி. வியர்வை..' . 'காவேரி..' என்றெல்லாம் பாடாமலாவது இருக்கலாமே ..
//4.சிவாஜியால் தரம் கெட்டுவிடும்//
இது ஜோ சொன்னது... ரீப்பீட் ..
//நல்ல ப்டம் எடுப்பவர்கள் நல்ல படம்தான் கொடுப்பார்கள்//
ஆமாம் .. ஆனால் அவர்கள் எடுக்க பயப்படுவார்கள் .. தயாரிப்பாளர் கூட்டங்கள் மசாலா மன்னர்கள் பின்னால் அணிவகுக்கும் .. ஜோவும் சுரேஷ் கண்ணனும் சொன்னது போல் 'சகலகலாவல்லவன்' காலக்கட்டம் மிகச்சிறந்த உதாரணம் ..
////5.ரஜினிக்கு நடிக்கத்தெரியாது.//
இதற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் ஏனென்றால் நான் அப்படி சொன்னது கிடையாது என்றே நினைக்கிறேன் ..அட் லீஸ்ட் அப்படி ஒரு எண்ணம் எனக்கு கிடையாது .. அவள் அப்படித்தான் , தில்லு முல்லு போன்ற படங்களில் அவரின் நடிப்பு நன்றாகவே இருக்கும்.. ஆனால் நடை ஸ்டைல் , முடி ஸ்டைல் என்பதெல்லாம் என்னால் பெரியதாக ரசிக்கமுடிவதில்லை.
//அதை அவரு செய்யறாரு. நாங்க குடுக்குற காசுக்கு உண்டானதை நாங்க எதிர்பார்க்குறோம்.//
தியேட்டரின் 40 ரூபா கொடுக்கிறீர்கள்.. அவர் நடிப்பை பார்க்கிறீர்கள்..அத்தோட உங்க உறவு முடிந்தது அல்லவா? அப்புறம் ஏன் தலைவர்..
'தலைவர்' என்ற சொல்லுக்கு அவர் தகுதியான ஆளா அவர் நல்ல நடிகர் என்றால் 'நல்ல நடிகர்' என்று சொல்லுங்கள்.. தலைவர் ஏன்?
ஏன் அவர் உண்ணாவிரதம் இருந்தால் , அவர் பின்னால் அலைகிறீர்கள் .. கட் அவுட் வைக்கிறீர்கள்.. ஏன் அவர் வர வேண்டும் என உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். பிறந்த நாளுக்கு விரட்ட விரட்ட அவர் வீட்டுமுன் காவல் காக்குகிறீர்கள் ஏன்? ..காலில் விழுவது ஏன்?
உங்களுக்கு ரஜினி தலைவர்.. ஒருவனுக்கு விஜய் தலைவர் .. சிம்பு தலைவர் .....தமிழ் நாட்டில் தலைவராவதற்கு , சினிமாவில் நடிப்பதுதான் தகுதியா?
சிவாஜியால் ரஜினிக்கும், சங்கருக்கும் வேண்டுமானால் லாபம் இருக்குமே தவிர, தமிழனுக்கும் ஏன் ஏவிம்-க்கு கூட லாபம் இருக்காது.
சங்கர் படங்களில் பிரமாண்டங்கள் புகுத்தபடுகிறது என்பது அப்பட்டமான உண்மை. உதாரணமாக அந்நியனில் வரும் சைனீஸ் ஸ்டையில் சண்டைக்காட்சி போல கதைக்களத்திற்கு அந்நியமான நிறைய விசயங்கள் அவர் படத்தில் பார்க்கலாம். மேலும் அவர் படங்களில் வெற்றிபெற்ற படங்கள் என்று பார்த்தால் அது கொலைப்படம்(இந்தியன்,அந்நியன்,முதல்வன்) அல்லது கொள்ளைப்படமாகத்தான்(ஜென்டில்மேன்) இருக்கும். மற்ற படங்களெல்லாம் ஊத்திகிட்டதுதான். சிவாஜி எப்படி இருக்கும்? கொலைப்படமா அல்லது கொள்ளைப்படமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :-)
தாஸ்,
//மேலோட்டமாக உங்கள் பதிவையும் பின்னூட்டங்களையும் திரும்பவும் வாசிக்கும்போது, பிடித்துபோட்டவைகள்தான் மேலே சொன்ன மூன்று வரிகளும் ..
//
மேலோட்டமாக படித்து பிடித்து போட்டது என்பது தெளிவாகவே புரிகிறது. பதிவையும் குறிப்பிட்ட பின்னூட்டம் எதற்கு பதிலாக தரப்பட்டது என்பதையும் புரிந்து படித்தால் புரியும்.
சரி விடுங்கள். நானே சொல்கிறேன்.
//ரஜினி படத்தில் மட்டும் இப்படிப்பட்ட துதிபாடும் வசனங்கள் வருவதை அழகாக வெளிப்படுட்தி உள்ளீர்கள்.//
நண்பர் ஜோ அவர்கள் ரஜினியை நோக்கி மட்டும் இந்த கேள்வியை கேட்பதற்கு காரணம் அவர் இது போன்ற பாடல்களை பாடுவதுதான் என்றார். அதற்குத்தான் இந்த வரிகளை பதிலாக கொடுத்தேன்.
இன்னும் புரியவில்லையா? இது போன்ற பாடல்களை அனைவரும் பாடுகிறார்கள்.. எனவே அது சரியான காரணம் அல்ல் என்பதை சுட்டிக்காட்ட சொல்லிய வரிகள் அவை.. இதற்கு மேல் எனக்கு விளக்கமாக சொல்ல தெரியாது தாஸ்.. :-)
////கமல்,அமிதாப், ஷாருக், சிரஞ்சீவி, மம்முட்டி,மோகன்லால், இப்படி அடுக்கிகொண்டே போக முடியும். //
தாஆஆஆஆஸ்... இவர்கள் யார் செய்வதும் தவறு இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன். ப்ளீஸ்..ப்ளீஸ்..புரிஞ்சிக்குங்க..:-))))
////மற்றவர்கள் செய்யவில்லையா? ஏன் ரஜினியை மட்டும் குறை சொல்கிறீர்கள்?" என எங்குமே கேட்கவில்லை. //
இதுக்கு வேற சொல்லனுமா?????.
//சரி விடுங்கள்..நமக்குள் என்ன சொத்து தகராறா? ;) நண்பர்களாகவே கருத்தை பரிமாறிக்கொள்வோம் ..//
நிச்சயமாக..மகிழ்ச்சியாக..
(சொத்து தகரறு இருக்குமிடத்தில் கூட நண்பர்களாக இருக்க முடியும்...எதிராளி இடம் கொடுத்தால்..)
//உண்மைதான் ..ஆனால் பாருங்கள் ..கமலும், சுஹாசினியும் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை .. அருண் விஜய் ,ஸ்ரீதேவி அருண்குமார் மற்றும் அவரது சகோதரிகள் யாரும், அருண் விஜயோடு ஜோடியாக நடித்ததில்லை ..ஏன் .. நடிப்புதானே .. ஆனால் உண்மைகளுக்கும் நடிப்பில் இடமுண்டு .. //
தாஸ்..அளவுகோலையும் வாதத்தையும் தேவைக்கு தகுந்த மாதிரி மாற்றாதீர்கள்..
//படையப்பாவில் ரஜினி பி.ஈ படித்து விட்டு , கல்லூரியிலிருந்து நேராக வீடு திரும்பும் வயதை ஒத்திருந்தார் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? அல்லது நயந்தாராவை லவ்விடும் வயதில் ரஜினி பொருந்தியிருந்தார் என்று நினைக்கிறீர்களா?..
//
சரியான கேள்வி தாஸ்.. தேவ் சொன்னது போல ரஜினி ரசிகனாக இல்லாமல் யோசித்து பார்த்தால் சிறு நெருடல் இருந்தது உண்மையே. சரியான முறையில் பொருந்தும்படி ஒப்பனை செய்யவில்லை. சிவாஜியில் அந்த தவறு களையப்படும் என நம்புகிறேன்.
//அடப்பாவிகளா!! (இது ஒரு எஃபெக்ட்டுக்காகத்தான்) .//
:-))))))))
//அவர் அரசியலுக்கு வந்தால் பாதிக்கப்படப்போவது அவரது ரசிகர்களா.. மொத்த தமிழ்நாடும் தமிழர்களும்தானப்பா .//
நீங்கள் அவர் (சினிமா நாயகர்கள்) அரசியலுக்கு வருவதே தவறு என்கிறீர்கள். :-)
ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்டு வராதது தவறு.. வருகிறாரா இல்லையா என தெளிவாக சொல்லதது தவறு. அவர் வருவார் என நம்பி காத்திருந்ததால் குடி முழுகி பொய்விட்டது எனபது போன்ற குற்றச்சாட்டுக்கு பதிலே
//அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம்...அப்படியே அவரை நம்பி காத்திருந்தாலும், பாதிக்கப்பட்டதாக சொல்வது அவர் ரசிகர்கள்தானே?உங்களுக்கு ஏன் இந்த நீலிக்கண்ணீர்?// .
// சினிமாக்காரர்களே தங்களை இரட்சிக்க வந்த பிதாமகர்களாக சித்தரிக்கும் அசிங்கங்கள் அரங்கேறும் இடமாக தமிழகம் இருப்பதை தாங்கமுடியவில்லை. அது ரஜினியாக இருக்கட்டும், விஜய்காந்தாக இருக்கட்டும் . வேறு எவனாகவும் இருக்கட்டும்
//
ஓரளவு உங்களுடன் நான் உடன்படுகிறேன்.. நாயகனாக இருப்பது ஒன்றே அரசியலுக்கு வர தகுதி என்பது எனக்கும் உடன்பாடு இல்லாதது.
//ரஜினியைப் போய் தரமான படங்களில் நடிக்கவேண்டும் என்று சொன்னது தவறுதான் ;) //
இப்படி பேசவேண்டாமே தாஸ்.. எனக்கும் இந்த விருப்பம் இருக்கிறது. சில நடைமுறை சிக்கல்களையும் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.விருப்பம் தவறு அல்ல.. அந்த விருப்பம் சரியான முறையில் தெரிவிக்கப்படவில்லை என்பதெ என ஆதங்கம்.
////நல்ல ப்டம் எடுப்பவர்கள் நல்ல படம்தான் கொடுப்பார்கள்//
ஆமாம் .. ஆனால் அவர்கள் எடுக்க பயப்படுவார்கள் .//
இல்லை தாஸ்... சில மாதங்களுக்கு முன் மிக நன்றாக ஓடிய படங்கள் பல மசாலா படங்கள்தான்.. அதற்க்கு நடுவில்தான் பருத்தி வீரனும் மொழியும் வந்தன..
//தில்லு முல்லு போன்ற படங்களில் அவரின் நடிப்பு நன்றாகவே இருக்கும்.. ஆனால் நடை ஸ்டைல் , முடி ஸ்டைல் என்பதெல்லாம் என்னால் பெரியதாக ரசிக்கமுடிவதில்லை//
:-) ரசிக்க வேண்டும் என கட்டாயம் இல்லை தாஸ்..ரசிப்பு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதனை யாரும் குறை கூறமுடியாது.. கூறாதீர்கள் எனத்தான் நானும் சொல்கிறேன்.
//தியேட்டரின் 40 ரூபா கொடுக்கிறீர்கள்.. அவர் நடிப்பை பார்க்கிறீர்கள்..அத்தோட உங்க உறவு முடிந்தது அல்லவா? அப்புறம் ஏன் தலைவர்..
'தலைவர்' என்ற சொல்லுக்கு அவர் தகுதியான ஆளா அவர் நல்ல நடிகர் என்றால் 'நல்ல நடிகர்' என்று சொல்லுங்கள்.. தலைவர் ஏன்?
ஏன் அவர் உண்ணாவிரதம் இருந்தால் , அவர் பின்னால் அலைகிறீர்கள் .. கட் அவுட் வைக்கிறீர்கள்.. ஏன் அவர் வர வேண்டும் என உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். பிறந்த நாளுக்கு விரட்ட விரட்ட அவர் வீட்டுமுன் காவல் காக்குகிறீர்கள் ஏன்? ..காலில் விழுவது ஏன்?
//
சிபியின் வரிகள்.
தலைவர் னு சும்மா அன்பால மரியாதையா சொல்றோமே தவிர ஒவ்வொண்ணுக்கும் அவருகிட்டயா அனுமதி வாங்கிகிட்டு செய்யுறோம். எங்க லைஃப் அது பாட்டுக்கு போகுது.
+
என்னுது
ரஜினி மீது ஒருவித ஈர்ப்பு உள்ளது. அத்தகைய ஈர்ப்பினால்தான் அவர் ரசிகர்களை கவர்ந்தார். அவரின் ரசிகர்கள் அவரிடம் அவரின் படங்களை ரசிப்பதையும் தாண்டி அவர்மேல் ஒருவித அபிமானத்தையுன் அன்பையும் வைத்து விடுகிறார்கள்.
ஓகே..தாஸ்.. எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டென்னு நினைக்கிறேன்..:-) இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தாஸ்.
//சிவாஜி எப்படி இருக்கும்? கொலைப்படமா அல்லது கொள்ளைப்படமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.//
அனானி நண்பரே.. தெரிந்த பின் கண்டிப்பாக பேசுவோம்..வருகைக்கு நன்றி.
நாட்டுக்குத் தேவையான பொருள்ல பேசணும்னுனா வரிஞ்சு கட்டிட்டு வர்றாங்கன்னு தெரியுது ;-)
அதுவும் ஒரு சரக்கு தானே! ரசிக்க முடியுதான்றது தான் கேள்வி. அந்த வகையில வெற்றி பெற்றிருக்கிறது இடுகை. வாழ்த்துகள்.
Post a Comment