இந்த வார ஸ்டார் சாரி சாரி..சூப்பர் ஸ்டார் தேவோட மடல்ன்னாலே ஒருவித எதிர்பார்ப்போட திறந்து பாக்குறது வழக்கம்.. ஆனா அதுல ஆப்பையும் அட்டாச் பன்னி அனுப்புவருன்னு தெரியாம போச்சு... 3 நாளைக்கு முன்னால வந்த மின்மடல்தான் அது.. ஆனா அப்பகூட அது என்ன ஆப்புன்னு புரியல.. சரின்னு அவர்கிட்டேயே என்னல இதுன்னு கேட்டேன்.. அதுவா.. அது "நான் ஒரு கிறுக்கு"ன்னு சொல்லனும்.. சும்மா சொன்னா பத்தாது. அதுக்கு சப்போர்டிங்கா 5 சாம்பில் கொடுக்கனும்.. அத படிக்கிறவங்க ஆமா இவன் ஒரு கிறுக்குதான்னு ஒத்துக்கனும்.அவ்வளோதான் அப்ப்டின்னாரு. என்னய்யா இது..சரியா புரியலியே.. அது இருக்கட்டும்.. நான் ஒரு கிறுக்குன்னு உனக்கு தெரிஞ்சுது..சரி..அத ஏன்யா ஊருக்கு வேற சொல்லனும்னு கேட்டா நாம எல்லாம் ஒரு குரூப்பாத்தாம்லே கெளம்பி இருக்கோம்.. நீ தனி ஆள் இல்ல, அச்சப்படாம ஆடுன்னு சொன்னாரு.இன்னும் கொஞ்சம் தெளிவா விசாரிச்சப்புரம்தான் தெரிஞ்சது..கைப்பூ ரொம்ப நாளா எஸ் அகிட்டதால ஆப்பெல்லாம் பெண்டிங்ல இருக்காம்.. அத ஆளுக்கு அஞ்சு அஞ்சா பிரிச்சி அவங்கவங்களே எடுத்து தனக்குத்தானே வச்சிக்கிற விளையட்டாம். சொந்த செலவுல சூனியம்னா என்னான்னு புரியாதவங்களுக்கு புரிய வைக்கிற மாதிரி விளையாடனுமாம். விட்டா யாரு பெரிய கிறுக்குன்னு சார்வேசன் சார்வே எடுப்பாரு போல...அதுக்கு வாடா ராசான்னு அன்போட(ஆப்போட) கூப்பிடுற மடல்தான் அது.
சரி..ஆட்டத்த ஆரம்பிக்கிறேன்..
1. இந்த கிறுக்குத்தனமா யோசிக்கிறது நமக்கு கை வந்த கலைங்க. சின்ன வயசுல யோசிக்கிறது எல்லாமே அப்படித்தான் இருக்கும்.. ஒரு காலத்துல என்ன சுத்தி இருக்கர உலகம் எனக்காகவே உருவாக்கப்பட்டதோன்னு தோனும்..என்னை தவிற எல்லாருமே எனக்காக நடிக்கிறாங்களோன்னு தோனும்..இது போலவே எல்லாருக்கும் தனித்தனி உலகம் உறுவாக்கப்பட்டு இருக்கோன்னு வேற தோனும்.. இந்த மாதிரி யோசிச்சி யோசிச்சி மண்ட காஞ்சதுதான் மிச்சம்.. ஒரு பதிலும் கிடைக்கல.. போகப்போக இந்த மாதிரி யோசிக்கிரத விட்டுட்டேன்.
2. புத்திசாலித்தனமா காமிச்சுக்க நினைச்சி பல்பு வாங்கறதும் ஓரளவு பழக்கம்தானுங்க.. இப்படித்தான் 5 வருஷத்துக்கு முன்னால முதல் தடவையா பெங்களூர் வந்துட்டு ஆட்டோவுல போகும்போது (சென்னை அனுபவம்) அவன் ஊர் சுத்தி கூட்டிகிட்டு போயிடுவானோங்கர சந்தேகத்துல எந்த வழியா போறீங்கன்னு கேட்டேன்.. அதுக்கு அவன் சொன்ன பதில் : "உங்களுக்கு எந்த வழியா போகனும்?"
3. கோபம் எனக்கு ரொம்ப அதிகமா வரும்.. இது weirdaa இல்லயான்னு தெரியல.. ஆனா அடுத்தவங்க சாதாரணமா எடுத்துக்கர பல விஷயங்கள் எனக்கு கோபத்தையும் எரிச்சலையும் கொடுக்கும். கேனத்தனமா டிரபிக்க ஹேண்டில் பன்ற டிரபிக் கான்ஸ்டபில் முதற்கொண்டு பொதுவாக தேவையில்லாத/அடுத்தவரை பற்றி கவலைப்படாத/எதனையும் grantedஆக எடுத்துக்கிற எல்லா விஷயத்துலயும் கோபம் அதிகமா வரும்.அந்த கோபத்தால பயன் இல்லன்னு தெரிஞ்சாலும் மனது நீண்ட நேரத்துக்கு ஆறவே ஆறாது.
4. சிறு வயதில் பயம் அதிகம். சில விஷயங்கள எதிர்கொள்ளவே தைரியம் கிடயாது.. இப்படித்தான் ஒரு முறை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள முனிசிபல் ஆபிசில் பசங்களுடன் விளைடாடும்பொழுது ஏறத்தெரியாமல் மரம் ஏறி கீழே விழுந்தேன்.. விழும்பொழுது உடைந்து இருந்த மரக்கிளையில் கால் மாட்டி அந்தரத்தில் தொங்கி கால்சதையின் பெரும்பகுதி கிழிந்து விட்டது.. அதை வீட்டில் சொல்ல பயம்.. டாக்டரிட்ன் கூட்டிப்போய் என்ன செய்வார்களோ.. தாங்க முடியுமா என பயந்துகொண்டு 2 நாட்கள் வீட்டில் சொல்லாமலேயே (கடுமையான ஜூரம் வேறு) இழுத்துப்போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தேன், என் அண்ணன் என் கால்களில் இருந்த ரத்தத்கறையை கண்டுபிடிக்கும்வரை.
5. இன்னும் முடியலியா.. சரி.. இந்த ஐஸ்கிரீம் இருக்கு பாருங்க. அத நல்லா கொழச்சி தன்னியாட்டம் ஆக்கி சாபிடுறது எனக்கு பிடிக்கும். :-) என்ன
பப்ளிக்கா அப்படி சாப்பிட முடியாது.. :-(
அப்பா.. ஆடி முடிச்சாச்சு.. என்னாது.. இன்னும் அஞ்சு பேர நான் கூப்பிடனுமா????
சரி..எனக்கு தெரிஞ்ச கிறுக்கங்க அல்லது முட்டாப்பசங்க இவங்கதான்.. அவங்க அவங்கள பத்தி தனியா பதிவு பொட்டு சொல்லனும்னு தேவையில்லன்னு நினைக்கிறேன்.
1. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
2. அரசியல் கட்சிகளின் உண்மையான தொண்டர்கள்
3. நேர்மையாக நடக்க நினைக்கும் அதிகாரிகள்.
4. _________
5. _________
4ம் 5ம் உங்க சாய்ஸ்..fill in the blanks.. யாருன்னு சொல்லுங்க..
Monday, March 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அப்பூ கொடுத்த வாக்கைக் காப்பத்திட்ட சரி அது என்ன சூப்பர் ஸ்டார்... இதுக்கு பேர் தான் சொ.செ.சூ?
//சரி..எனக்கு தெரிஞ்ச கிறுக்கங்க அல்லது முட்டாப்பசங்க இவங்கதான்.. அவங்க அவங்கள பத்தி தனியா பதிவு பொட்டு சொல்லனும்னு தேவையில்லன்னு நினைக்கிறேன்.
1. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
2. அரசியல் கட்சிகளின் உண்மையான தொண்டர்கள்
3. நேர்மையாக நடக்க நினைக்கும் அதிகாரிகள்.
4. _________
5. _________
4ம் 5ம் உங்க சாய்ஸ்..fill in the blanks.. யாருன்னு சொல்லுங்க..//
நச் மச்சி
//அப்பூ //
அப்பூவா.. நான்கூட ஆப்பூன்னு மொதல்ல படிச்சேன்..
//கொடுத்த வாக்கைக் காப்பத்திட்ட//
பின்ன..
//சரி அது என்ன சூப்பர் ஸ்டார்... இதுக்கு பேர் தான் சொ.செ.சூ? //
அதுக்கு பேர் சொ.செ.சூ இல்ல தேவு. இப்படி பதிவு போட்டுட்டு பின்னுட்டம் வரும்னு ஒரு வித நம்பிக்கையில உக்காந்து கிடக்கேன் பாரு. இதான் சொ.செ.சூ :-(
புரிஞ்சுதா?
//நச் மச்சி //
ரோம்ப தான்க்ஸ் மச்சி..
ஆனா fill in the blanks விட்டுட்டியே... இங்கயும் பதில் தெரியலியா ஆபிஸர்?
//ஆனா அதுல ஆப்பையும் அட்டாச் பன்னி அனுப்புவருன்னு தெரியாம போச்சு..//
என்னது மெயிலில் பன்னி அனுப்பினாரா? அது எப்படி முடியும்....
//அவன் சொன்ன பதில் : "உங்களுக்கு எந்த வழியா போகனும்?"//
இது பதிலா, எனக்கு கேள்வி மாதிரில படுது!!!
//சிறு வயதில் பயம் அதிகம். சில விஷயங்கள எதிர்கொள்ளவே தைரியம் கிடயாது.. //
இது தான் எங்களுக்கு நல்லாவே தெரியுமே!
நடுராத்திரியில் மெரீனாவில் போய் குந்து வச்சுக்கிட்டு இருந்தவன் தானே நீ!!!!
;-)
//4. _________
5. _________ //
சாதி, மதங்களை வைத்து இன்னும் மாரடிக்கும் அரசியல்வாதிகள்
சினிமா ஸ்டார்களை கடவுள் ஆக்கும் ரசிகர்கள்.
//என்னது மெயிலில் பன்னி அனுப்பினாரா? அது எப்படி முடியும்.... //
ஆஹா.. என்ன புலி இப்படி கடிக்கிற..வெணாம் வலிக்குது..விட்டுடு..
//இது பதிலா, எனக்கு கேள்வி மாதிரில படுது!!! //
கேள்விதான். ஆனா, அந்த கேள்வியிலேயே என் கேள்விக்கு விவகாரமான பதில் இருந்துதே..
//நடுராத்திரியில் மெரீனாவில் போய் குந்து வச்சுக்கிட்டு இருந்தவன் தானே நீ!!!!
;-) //
ம்ம்ம்.. பரவயில்லயே.. ஞாபகம் வச்சிருக்கியே..
//சாதி, மதங்களை வைத்து இன்னும் மாரடிக்கும் அரசியல்வாதிகள்//
சிவா, தப்பு..இவங்க முட்டப்பசங்க இல்லய்யா.. அடுத்தவங்கள முட்டாளா ஆக்கறவங்க..
//சினிமா ஸ்டார்களை கடவுள் ஆக்கும் ரசிகர்கள்.//
:-) உண்மைதான் சிவா.
நான் ஒரு கிறுக்குன்னு என்னமா வருத்தப்பட்டு மனதின் ஓசை புலம்பராரு, இங்க வந்து புலி குதிச்சு குதிச்சு வெளயாடுதே, இதை கேக்க ஆளே இல்லியா;-)))
ஆமா கிரிக்கேட்காரனை கிறுக்குன்னு சொல்லாதீங்க, வெவரமான பசங்க. அவனுங்களை நம்புன நாமதான் கிறுக்கு!!:-))
புலி பசிச்சாலும் பன்னி துன்னாது:-))
அபி அப்பா,
இந்த பக்கம் வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.:-))))))
பாப்பாக்கு ஒரு சாக்லேட் பார்சல்ல அனுப்பரேன் வாங்கிக்குங்க..வெளில சொல்லாதீங்க.
//நான் ஒரு கிறுக்குன்னு என்னமா வருத்தப்பட்டு மனதின் ஓசை புலம்பராரு, //
:-(((((
//இங்க வந்து புலி குதிச்சு குதிச்சு வெளயாடுதே, இதை கேக்க ஆளே இல்லியா;-))) //
அப்டி நல்லா உரைக்கிற மாதிரி கேளுங்க அபி அப்பா.. புலி முரைக்குது பாருங்க..
//ஆமா கிரிக்கேட்காரனை கிறுக்குன்னு சொல்லாதீங்க, வெவரமான பசங்க. அவனுங்களை நம்புன நாமதான் கிறுக்கு!!:-)) //
சீச்சீ.. நீங்க அவனுங்கள நம்ப முடியாம குரங்கு ராதாவ நம்பர நிலமைக்கு உங்கள கொண்டு போய் விட்டஅவனுங்கள போய் சொல்லுவேனா.. அவனுங்கள நம்புன ரசிகருங்களதான் சொல்லியிருக்கேன்..
சரிதானே?
//புலி பசிச்சாலும் பன்னி துன்னாது:-))//
அப்டிங்கரீங்க?? இது விவகாரமான புலிங்க.. நம்ப முடியாது...
//போகப்போக இந்த மாதிரி யோசிக்கிரத விட்டுட்டேன்.//
இதுல எதுக்கு எக்ஸ்ட்ராவா அந்த "இந்த மாதிரி"! அது இல்லைன்னாலும் சரியாத்தானே இருக்கு!! :))
ஐஸ்க்ரீம்...
தண்ணியாட்டம்....
வாவ்....ஹவ் பொயட்டிக்...ஹவ் பண்டாஸ்டிக்...ஹவ் க்ரியேட்டிவ்....
சேம் பிஞ்ச்...ஹி ஹி...
நானு, ஐஸ்.க்ரீம்ல கோக்கை ஊத்தி சாப்பிடுவேன்...ஜூப்பரா இருக்கும்...ஒருக்கா ட்ரை செய்யுங்க...
செந்தழல் ரவி
//ம்ம்ம்.. பரவயில்லயே.. ஞாபகம் வச்சிருக்கியே.. //
அந்த வீர செறிந்த விசயத்தை எப்படி மறக்க முடியும் சொல்லு ;-)
வாங்க கொத்ஸ்.. பெரிய பெரிய ஆளுங்க எல்லா இந்த பக்கம் வரீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
//வாவ்....ஹவ் பொயட்டிக்...ஹவ் பண்டாஸ்டிக்...ஹவ் க்ரியேட்டிவ்....//
ரவி..உள்குத்து பலம இருக்கு.:-))
// ஐஸ்.க்ரீம்ல கோக்கை ஊத்தி சாப்பிடுவேன்...//
கோக்க ஊத்தி சாப்பிட வேற அயிட்டம் நறைய இருக்கு.. நீங்க டிரை பண்ணி பாருங்க.. ஜூஜூப்பரா இருக்கும்..
ஆமா, ஏன் ரவி இப்படி அனானிய அலையரீங்க எல்லா இடத்துலயும்? எனி பிராப்ளம்?
//அபி அப்பா,
இந்த பக்கம் வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.:-))))))
பாப்பாக்கு ஒரு சாக்லேட் பார்சல்ல அனுப்பரேன் வாங்கிக்குங்க..வெளில சொல்லாதீங்க.//
ஊகூம், யார்கிட்டயும் சொல்லமாட்டேன், பாப்பாகிட்ட கூட(ஏன்னா எனக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்கும்)
//ஊகூம், யார்கிட்டயும் சொல்லமாட்டேன், பாப்பாகிட்ட கூட(ஏன்னா எனக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்கும்) //
:-))))
பாப்பா சாக்லெட் அதிகம் சாப்பிட்டு பல்லு கெட்டுடக்கூடாதுங்கர காரணத்துக்காக நீங்க செய்யுற தியாகம் போய்..சீ சீ.. மெய்சிலிர்க்க வைக்குது அபிஅப்பா..
அபி அப்பா,
புரபைல் போட்டோ மாறிடுச்சு..அபியோட போட்டோவா???
அபி பாப்பா அழகா இருக்கு. போட்டொல உங்கள முறைக்கிர மாதிரி இருக்கு?? சாக்லெட் விஷயம் தெரிஞ்சி போச்சா?
Post a Comment